Sunday, April 10, 2016

ஸ்ரீ தியாகராஜர்

ஏப்ரல் 9 அன்று பெங்களூர் காயன சமாஜத்தில் அரங்கேறிய டிவி வரதராஜன் குழுவினரின் "ஸ்ரீதியாகராஜர்" பாடல் நாடகம் 28ஆவது முறையாம். வாழ்க ! வளர்க!

இசை: பாம்பே ஜெயஸ்ரீ 
கதை,வசனம்: வீயெஸ்வி (ஆ.விகடன்)
டைட்டில் (+ தியாகய்யர் மகள் திருமண நிகழ்வு)) ஓவியங்கள்: ஹிந்து கேஷவ்
இயக்கம்: வரதராஜன் 
 • பெங்களூர் மல்லேஸ்வரம் ஸ்ரீ ஸ்ரீ யதுகிரி எதிராஜ நாராயண ராமனுஜ ஜீயர் அவர்களின் ஆசியுடன் - டிக்கெட் இல்லை, விலையில்லா அனுமதி
  ஜீயரும் 2+ மணிநேரம் அமர்ந்து, பார்த்து, பின்னர் அனைவருக்கும் (கன்னடத்தில்) ஆசி வழங்கினார் 
 • 6 மணிக்கு முன்னரே வந்து இருக்கைகளில் அமர்ந்துவிடவேண்டும் என்ற அறிவிப்பால் அரங்கம் (சுமார் 500+ இருக்கைகள்) 5.15க்கே நிறைந்தது 
 • 4.45க்கே சென்றுவிட்டதால் நல்ல மின்விசிறி காற்று வரும் இருக்கையில் அமர இடம் கிடைத்தது
 • டிராக் சூட்டிலும், டிஷர்டிலும் மேற்பார்வை செய்துகொண்டிருந்த வரதராஜன், பஜ்ஜி, பொங்கல், போண்டா, காபி சாப்பிடும் மேக்கப் போட்ட லட்சுமணர் (வேடக் கலைஞர்), இந்த வெக்கை க்ளைமேட்டிலும் அமெரிக்கையான graceful புடைவையில் பாம்பே ஜெயஸ்ரீ (பலருக்கும் பொறுமையாக  குழு ஃபோட்டோ எடுக்க அனுமதியும் தந்தார்)
 • நாடகத்தின் டைட்டில் ஸ்லைடுகளுக்கு ஹிந்து கேஷவின் ஓவியங்கள் (கார்டூனில்) அருமை. சற்று நேரத்தில் வீயெஸ்வியும் வந்து சேர, பூஜையுடன் நாடகம் துவங்கியது 


 • சுமார் 2.15 மணிநேர நாடகம். அருமையான திரைக்கதை, சில வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை வசனங்கள் (இந்த மாதிரி மியூஸிக்கல் நாடகத்தில் தேவையா?)
 • வரதராஜன் அவர்களின் ஆத்மார்த்தமான நடிப்பு நிறைவு. சில இடங்களில் தியாகைய்யர் ஜோக்கடிப்பது போன்ற வசனங்கள் ஒட்டவில்லை
 • தியாகய்யர் தெலுங்கு என்பதற்காக அவரது மனைவி(யும் தியாகய்யரின் மன்னியும்) 'ஏமண்டி - ஏமண்டி' என பேசுவதும் ஒட்டவில்லை
 • நாடகத்தின் சரியான இடங்களில் தியாகய்யரின் சரியான கிருதிகளை புகுத்தியிருப்பது, அதனை இசையாக்கியிருப்பதும் அருமை. 'ஜகம் புகழும் புண்ய கதை தியாகையரின் கதையே' என லவ குசா மெட்டு ஃபில்லர்


 • பெரும்பாலான இடங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் மேடைக் கச்சேரி மாதிரி நடிகர்கள் ரெக்கார்ட் செய்த வசனங்களுக்கு வாயசைப்பது போன்றே இருந்தது (எனக்கு மட்டுமா?) 
 • சரபோஜி மகாராஜா போட்டி அறிவிப்பதைக் கூறும் கட்டியக்காரக் குரலுக்காவது வேறு நல்ல உச்சரிப்பாளரை வைத்து ரெக்கார்டு செய்திருக்கலாம் ("ள"கர, 'ல'கரக் கொலை)


 • தியாகய்யரின் மன்னியாக நடித்தவருக்கும் நல்ல ஸ்கோப், அவரும் நிறைவாக செய்திருந்தார்.
 • மேடை அரங்கை (சிறியதாக இருந்தாலும்) நிறைவாக உபயோகப்படுத்தியிருந்தனர், லைட்டிங், இசை அருமை
 • ராமருடன் சீதையாக வந்தவர் ஏன் குஜராத்தி ஸ்டைல் புடவை கட்டியிருந்தார் என தெரியவில்லை, வடநாட்டிலிருந்த்து வந்தவர்கள் என குறிப்பிடப்படுவதாலோ?
 • வரதராஜன் சுமார் 16 - 17 முறை மேடையில் சாஷ்டாங்க நமஸ்காரம் (மேலும் சில முறை காலில் விழுந்து நமஸ்கரிக்க முனையும் நிகழ்வுகளும் உண்டு) இந்த 60+ (?) வயதிலும், செய்வதற்கு உடல் ஒத்துழைப்பதே பெரிய விஷயம்


 • க்ளைமேக்ஸ் காட்சிகள் நெகிழ்வான தருணங்கள்
 • மொத்தத்தில் ஒரு நல்ல மேடை நாடகம் -- இன்னும் கொஞ்சம் (காமெடி இல்லாமல்) சீரியஸாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?


குழுவினருக்கு வாழ்த்துகள் !!

பி.கு:1. நாடகம் நிறைந்தபின் ஜீயர் கன்னடத்திலேயே அருளாசி வழங்கி பேசினார். நாடகக் குழுவினருக்கோ, வரதராஜனுக்கோ, வீயெஸ்விக்கோ, பாம்பே ஜெயஸ்ரீக்கோ அவர் சொன்னது எல்லாம் ஓரளவு யூகித்தே புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

2. சால்வையும் சந்தனமாலையும் மட்டுமே வரதராஜனுக்கும் குழுவினருக்கும் என இருக்காது என எண்ணுகிறேன், காயன சமாஜம் தகுந்த சன்மானம் கொடுத்திருப்பர், இத்துணை பேர் சென்னையிலிருந்து வந்து, நடத்திச் செல்வது வெறும் ஆத்மார்த்ததிற்காக மட்டுமே அல்ல

மேடை செட் பிராபர்ட்டீஸ், நடிகர்கள், மேக்கப் கலைஞர்,காஸ்டியூம்ஸ் என ஒவ்வொரு ஊருக்கும் எடுத்துச் சென்று, லைட்டிங். இசை என எல்லாம் சரியாய் வர நாடகம் நடத்துவென்பது மிகப் பெரிய Team Effort. அதனை ஒரு பக்தியுடன் செய்யும் ஒவ்வொரு குழுவினருக்கும் வாழ்த்துகள் !!

- அலெக்ஸ் பாண்டியன்
09 - ஏப்ரல் 2016

Saturday, June 14, 2014

Sundara Kandam - Ramayanam - சுந்தர காண்டம் - இராமாயணம்

Sundara Kaadam - Ramayanam - சுந்தர காண்டம் - இராமாயணம்

இந்தப் பதிவு - தினமும் 5 நிமிடத்தில் படிப்பதற்கு உதவும்
சுருக்கப்பட்ட வடிவில் சுந்தர காண்டம்
.

'சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்.
சுபம் தரும் சொர்க்கம் என்று கருத்தினில் கொள்ளுவார்."கண்டேன் சீதையை" என்று காகுத்தனிடம்
சொன்ன கருணைமிகு ...
ஸ்ரீராமபக்தன் ஆஞ்சநேயன் பெருமையிது.

அஞ்சனை தனையன் அலைகடல்
தாண்டவே ஆயத்தமாகி நின்றார்.

அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரர்களும்
அன்புடன் விடைகொடுத்து வழி அனுப்பினரே.

ராம பாணம் போல் ராக்ஷஸர் மனை நோக்கி
ராஜகம்பீரத்துடன் ராமதூதன் சென்றார்.
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்
வழியெல்லாம் கூடி நின்று பூமாரி பொழிந்தனரே

மைந்நாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மாருதியும் அதனைத் திருப்தி செய்து
கரசையை வெற்றிகண்டு
ஸிம்ஹி
யை வதம் செய்து
சாகசமாய்ச் சமுத்திரத்தைத் தாண்டியே
இலங்கை சேர்ந்தார்.

இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து அவள்
இதயத்தைக் கலக்கினார்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்கும் இங்கும் தேடியே அசோகவனத்தை அடைந்தார்

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனையே தியானம் செய்யும்
சீதாப்பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினார், மகிழ்ந்தார்,
ஆனால் அவள் நிலை கண்டு கலங்கினார்.

இராவணன் மிரட்டிட ராட்சசிகள் அலட்டிட
வைதேகி கலங்கிட வந்தார்.

துயர்துடைக்கக் கணையாழியைக் கொடுத்து
ஜெயராமன் சரிதம் சொல்லிச்
சூடாமணியைப் பெற்றுக்கொண்டார்.

அன்னையின் கண்ணீர் கண்டு
அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோக வனத்தை அழித்து
அநேகரை ஒழித்திட்டார்.

பிரம்மாஸ்திரத்தால் பிணைக்கப்பட்ட மாருதி
பட்டாபிராமன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கை வேந்தன்,
"வையுங்கள் தீ, வாலுக்கு" என்றான்.

வைத்த நெருப்பினால் வெந்தது இலங்கை நகர்.
அரக்கரின் அகந்தையை அழித்திட்ட அனுமனும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவியே வந்தார்.

அன்னையைக் கண்டு விட்ட ஆனந்தத்தில்
மெய் மறந்தார். ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த
ராமனிடம் "கண்டேன் சீதையை" என்றார்.

'சொல்லின் செல்வன்' ஆஞ்சநேயன் சூடாமணியை
அளித்திட்டார். மனம் கனிந்து மாருதியை மார்போடு
அணைத்த ராமன் மைதிலியைச் சிறை மீட்க
மறுகணமே சித்தமானார்.

ஆழ்கடலில் அற்புதமாய் அணைகள் கட்டிப் படைகள் கூட்டி
அனுமனும் இலக்குவனும் அருகருகே சேர்ந்துவரப் புறப்பட்டார்.
அழித்திட்டார் இராவணனை. ஒழித்திட்டார் அதர்மத்தை.
அன்னை சீதா பிராட்டியைச் சிறைமீட்டு அயோத்தி சென்று
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
அகிலம் புகழ ஆட்சி செய்தார்.

அவரைச் சரணடைந்தார்க்கு அவர் அருள் என்றும் உண்டு.

எங்கெங்கு ரகுராமன் கீர்த்தனமோ அங்கங்குச் சிரம்
மேல் கரம் குவித்து மனம் கசிந்து கண்கள் நீர் சொரிய
ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே
ஸ்ரீ ஆஞ்சநேயா ! உனைப் பணிகிறேன் பன்முறை !
உனைப் பணிகிறேன் பன்முறை !

அரியணை அனுமன் தாங்க
        அங்கதன் உடைவாள் ஏந்த
இருவரும் கவரிபற்ற
        பரதன் வெண்குடை கவிக்க
விரைசெறி குழலி ஓங்க
       வெண்ணெய்மன் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுப்ப வாங்கி
       வசிட்டனே புனைந்தான் மௌலி

நாடிய பொருளும் கைகூடும்
     
ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும்
     
வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை
    
நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன்
    
தோள்வலி கூறுவார்க்கே

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்
                      
-- கம்பர்

அஞ்சிலே ஒன்று பெற்றான்
   
அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக
   
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
   
அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
   
அவன் நம்மை அளித்துக் காப்பான்

புத்திர் பலம் யஸோ தைர்யம்
   நிர்ப்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வம் ச
   ஹனுமத் ஸ்மராணத் பவேத் !!                       
                     Image Courtesy: http://bitssandpieces.blogspot.in/2009/04/sri-rama-navami.html

Content Courtesy: V.S.K. Graphics, No.3 Veerabhadran Street, Nungambakkam, Chennai

Monday, October 15, 2012

நவராத்திரி கொலு பொம்மைகள்

நவராத்திரி கொலு பொம்மைகள்

பெங்களூருவில் மல்லேஸ்வரம் இருக்கிறது, மல்லேஸ்வரத்தில் நரசிம்மஸ்வாமி கோவில் இருக்கிறது, அதே தெருவில் பல கோயில்கள் உள்ளது, பாஜக கர்நாடக தலைமையகமும் இருக்கிறது.

முன்பெல்லாம் நவராத்திரி கொலு பொம்மைகள் சில கடைகள் மட்டுமே - சம்பிகேரோடில் இருக்கும். தற்போது 'கோயில் தெரு' வில் மட்டுமே பல கடைகள், பலவித பொம்மைகள், ஒவ்வொன்றும் பலநூறு அல்லது ஆயிரங்கள் விலையில்.

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள் !!

- அலெக்ஸ் பாண்டியன்
15 அக்டோபர் 2012

இனி படங்கள் - சில/பல கடைகளில் எடுக்கப்பட்டது (பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வந்த பொம்மைகள்)  

 
 
 

Wednesday, October 03, 2012

நினைவில் நின்றவை - 30Sep2012

நினைவில் நின்றவை

பதிவுகள் எழுதி பலமாதங்கள் (வருடங்கள்?) ஆகிவிட்ட நிலையில் மீண்டும் எழுத சோம்பல், இருந்தாலும் ஏதாவது பதியாவிட்டால் கூகிள் அக்கவுண்டை மூடிவிட்டால். ஆதலால் ட்விட்டரில் இடப்படுபவை இங்கு வார சேமிப்பாக இடப்படும். ட்வீட்டரில் படித்தவர்கள் இதை 'Mark As Read' செய்துவிடவும்; ட்விட்டுகளைத் தவறவிட்டவர்கள் இங்கே படித்து உய்யவும். (only my fresh tweets - no @ replies or ReTweets) ; These may help to capture (?) the history.

நன்றி
- அலெக்ஸ் பாண்டியன்
03 அக்டோபர் 2012

30-Sep-2012

 • இன்றைய நீயாநானா (மகிழ்ச்சியைக் கொண்டாடுதல்) சில நல்ல ஃபிகர்கள் இருப்பது போல தெரிகிறதே !

 • மத்திய அமைச்சரவையில் திமுகழகத்தின் சார்பில் புதிதாக அமைச்சராக யாரும் இடம்பெற மாட்டார்கள் என்பதுதான் என் உறுதியான பதில் by @ kalaignar89                  

 • டிஆரெஸ் விஜயசாந்தி போலீஸாருடன் ஆக்ரோஷமாக மாட்லாடுகிறார்-தெலுங்கானா; இந்த்ருடுசந்த்ருடு ஃபிகர் அப்படியே!
 • watch ETV2 and TV9 news channels for Telengana march - media OB van getting burnt - Hyderabad
               


 • நாளை முதல் சாதா பாஸ்போர்ட் ரூ.1500 தத்கால் பாஸ்போர்ட் ரூ.3500 - மன்மோகன் சிங் அரசின் காந்திஜெயந்திப் பரிசு                  

          

 

Friday, February 11, 2011

தை வெள்ளி !

ட்விட்டருக்கே நேரம் கிடைப்பதில்லையாதலால் பதிவுலகம் பக்கம் வந்து பல மாதங்கள் ஆகிறது. சமீபத்திய ட்வீட்டுகள் சில இங்கே தொகுப்பாக.


 • சச்சின், எஸ்.பி.பாலசுப்ரமணியம், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் - எல்லோரிடமும் பிடித்த ஒன்று - உச்சியிலிருந்தாலும் Humility !


 • மன்மதன் அம்பு - 50ஆவது நாளாம், இன்னுமா இதையெல்லாம் ஊரு நம்புது ! http://epaper.dinakaran.com/pdf/2011/02/10/20110210c_01610100201.jpg


 • சிகரெட் பிடிப்பதை நிறுத்தினார் ஒபாமா - Way to go !! http://epaper.dinakaran.com/pdf/2011/02/10/20110210a_012101004.jpg


 • டெல்லி மீடியாவின் ஆருஷி, ஜெஸ்ஸிகாலால், மட்டூ போன்ற கவரேஜ் தாகி, தினகரன் ஊழியர்கள்,சிபிஎம் விஷயத்தில் சாத்தியமே இல்லை போல- கழகம்,குடும்பம்


 • கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது. மேலும் கடன் வாங்கப்படும்: நிதியமைச்சர் அன்பழகன் http://www.dinamalar.com/News_Detail.asp?Id=184500


 • பொன்னியின் செல்வன்-சேந்தன் அமுதன் பட்டாபிஷேகக் காட்சி- Sweep Panorma (Sony)போல http://goo.gl/hKREc நன்றி: ஓவியர் மணியம் செல்வன் வலைப்பதிவு


 • /ரதசப்தமி// நாளை முதல் அதிகாலை குளிர் குறையும் இல்லையா ? (சூரியன் வடக்கு நோக்கி வேகமாக நகரத்துவங்கியதன் indication!?


 • ஜெயலலிதா, ஒபாமா, ஹு ஜின்டாஓ, விளாடிமிர் புடின் - எல்லாம் ரெட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கறாங்க - கிரம்மர் சுரேஷ் http://goo.gl/wO22c


 • ‘Ilaya Thalapathi’ Vijay will visit the coastal town of Nagapattinam on February 22 #tnfisherman http://goo.gl/TX2q2

  - அலெக்ஸ் பாண்டியன்
  11 பிப்ரவரி 2011
 • Friday, January 08, 2010

  அந்த மூன்று நாட்கள் - 2 (சென்னை)

  பலமுறை இந்த ராஜீவ்காந்தி சாலை என பெயர் வைக்கப்பட்ட ஓ.எம்.ஆர் (OMR) எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் சென்றிருந்தாலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் சில புதிய அடுக்குமாடி கண்ணாடிக் கட்டிடங்கள் முளைத்திருக்கும்.


  தற்போது டைடல் பார்க் அருகில் டாடா நிறுவனத்தினரால் ராமானுஜன் சிடி என SEZ - மற்றும் பெரும் குடியிருப்பு கட்டத்துவங்கியுள்ளனர். இதற்கு முன்னர் இங்கு எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிடி இருந்ததோ ? நகரின் ஒரு நல்ல இடத்தில் சூப்பர் இடம்.

  மத்யகைலாஷ் எனப்படும் அடையாறு சிக்னலில் துவங்கும் இந்த சாலை வேளச்சேரிக்கு வளையும் வரை நன்றாக இருக்கிறது. இரண்டு புறமும் மூன்று லேன்கள். அதற்குப் பிறகுதான் ஒரிஜினல் முகம்.

  OMR ஏன் இவ்வளவு குப்பை கூளங்களுடன் இருக்கிறது. சாலையின் இரண்டு புற ஓரங்களிலும் கல்/மண் மேடுகள், சாக்கடைகள். 3 லேன்கள் இருந்தாலும் 2 லேன்களில் தான் வண்டிகள். 3ஆவது லேனில் இரண்டு புறமும் ஆக்கிரமிப்புகள், கட்டுமான குப்பைகள், வழியும் சாக்கடை நீர்

  சென்னைக்கு ஐடி கம்பெனிகள் பெரிய அளவில் வந்து சில ஆண்டுகள் (5 ? 6 ?) தான் ஆகிறது என்றாலும் எல்லா கம்பெனிகளும் இந்த சாலையை ஒட்டியே அமைவதில் சில சங்கடங்கள் உண்டு. பெங்களூரின் (மோசமான) பாடத்தை சென்னை கற்க சில ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் சென்னைவாசிகளுக்கு ஒரு நல்ல விஷயம் எம்.ஆர்.டி.எஸ் (MRTS) எனப்படும் பறக்கும் ரயில். அதுவும் இந்த ஐடி காரிடார் எனப்படும் சாலை வழியாக பயணிப்பது.

  மிகவும் குறைவான பயணச்சீட்டுக் கட்டணம் 5ரூபாயில் வேளச்சேரி முதல் மந்தைவெளிவரை பயணிக்க முடிகிறது. மும்பை லோகல் அல்லது பீச் தாம்பரம் ரயில்கள் போல கூட்டம், நெரிசல் இல்லை. சாலையில் செல்லும் நேரத்தில் கால் பங்கு நேரம். சத்தம் தான் கொஞ்சம் லொட லொட ஆனாலும் கஷ்டப்படுத்தாத பயணம்  சில கேள்விகளும் உண்டு

 • எப்போது முடியும் வேளச்சேரி-பரங்கிமலை கனெக்ஷன் ?
 • என்று வரும் பீச் -மாம்பலம்-பரங்கிமலை-வேளச்சேரி- மயிலாப்பூர் பீச் சர்குலர் ரயில்வே ?
 • சிறுசேரி வழியாக மறைமலை நகர் (மஹிந்த்ரா சிடி) வரை எக்ஸ்டென்ஷன் நடைபெறுமா?
 • MRTS ஏன் அதிகமான நபர்களால் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது ?

  வேளச்சேரி, தரமணி என எல்லா ஸ்டேஷன்களும் மிகவும் அழுக்காகவும் (பான் பராக் எச்சில் துப்பிய மெகா சைஸ் தூண்கள்). எல்லா இடங்களிலும் மழை நீர் கசிந்து சுவர்கள் பாசியோடியபடி, சில சமயங்களில் ஈ, காக்கா கூட இல்லாத அமானுஷ்யமான இருட்டு இடங்கள்.


  அதிகம் ஆளில்லாத Basementல், ஸ்டேஷன் மறைவிடங்களில் கல்லூரி, பள்ளி, பாலிடெக்னிக் ஜோடிகள் (அணைத்தபடி), பெற்றோருக்குத் தெரியுமா ?!
  வேளச்சேரி, தரமணி ஸ்டேஷன்கள் செல்வதற்கே பிரம்மபிரயத்னம்-அவ்வளவு குண்டு குழி சாலைகள் மற்றும் மழைநீர் தேங்கிய குட்டைகள். ஏன் negligence ?

  சில மாதங்கள் (வருடங்கள்?!) முன்பு எஸ்.ரா தனது கட்டுரை/பதிவு ஒன்றில் வெளியூரிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் காலையில் காலைக்கடன் கழிக்க, குளிக்க இடம் கிடைக்காமல் (லாட்ஜ் எடுத்தால் 100 முதல் 500 என எடுத்து வைக்கவேண்டும்) கஷ்டப்படுவதைப் பற்றி எழுதியிருந்தார்.

  இந்த கூட்டமில்லா பறக்கும் ரயில் ஸ்டேஷன்களில் ரூ2 மற்றும் ரூ.5 (குளிக்க) செலவு செய்து அந்த பிரச்னையைத் தீர்க்கலாம் என வழியுள்ளது. இரண்டு பேராக வந்தால் ஒருவர் பெட்டியை/சாமான்களை அவர் கவனித்துக் கொண்டால் மற்றொருவர் குளித்துவிட்டு வரலாம். ரயில் டிக்கெட் 5 ரூ. எடுத்துக் கொண்டால் ரூ.10க்குள் ரெடியாகிவிடலாம் :-)

  *** *** *** *** *** ***

  இன்னும் அரசு அலுவலகங்கள், ரயில்கள், பஸ்கள் போன்றவற்றில் அறிவிப்புகளை பெயிண்ட் அடிக்கும்போது ஏன் எழுத்துக்களை வெட்டிய முறையில் எழுதுகிறார்கள். பிரிடிஷாரின் டெக்னாலஜியா இது ? முழு எழுத்தும் தெரியும்படி பெயிண்ட் செய்தால் என்ன ? யாரின் கட்டளையின் பேரில் இது இன்னும் தொடருகிறது. எதற்காக ? கணினி மூலம் அச்சடிக்கும், பிளக்ஸ் போர்டுகள், பெயின்டிங் என வந்த பிறகும் இன்னும் ஏன் இந்த அட்டை மூலம் ஸ்பிரே பெயின்டிங் ?  படங்கள் செல்பேசியில் எடுக்கப்பட்டது எனவே கொஞ்சம் மசங்கலாக இருக்கலாம்.

  (தொடரும்)

  - அலெக்ஸ் பாண்டியன்
  08-ஜனவரி–2010

  அந்த மூன்று நாட்கள் - 1 (சென்னை)
 • Friday, January 01, 2010

  அந்த மூன்று நாட்கள் - 1 (சென்னை)

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு (2010) வாழ்த்துகள்..!

  அவ்வப்போது ட்வீட்டிக்கொண்டிருந்தாலும், இந்த ஆண்டிலாவது பதிவு எழுதுவதற்கு நேரம் ஏற்படுத்திக்கொள்ள முடியுமா என பார்க்கவேண்டும்.
  அட்லீஸ்ட் பயணங்களையாவது படம் போட்டு பிலிம் காட்டலாம் என ஒரு உத்தேசம்.

  சமீபத்தில் (சென்ற வாரம் தான் :-) சென்னைக்கு 3 நாட்கள் செல்லவேண்டியிருந்தது. வருடத்திற்கு சிலமுறை சென்னைக்கு சென்றுவந்துகொண்டிருந்தாலும் சென்னைக்குச் செல்வது என்பது எப்போதுமே ஒரு ஆர்வம் மிகுந்த பயணமாகத்தான் இருக்கும்.

  பொதுவாக பெங்களூர்- சென்னை மெயிலில் கணினித்துறையினரின் கூட்டம் அம்மும். எல்லோரும் ஒரு BackPackக்கும் மடிக்கணினிப்பையும், தண்ணீர் போத்தலும், சிலர் பெப்ஸி போத்தலில் ஓல்ட்மாங்க்கையும் ஊற்றிக்கொண்டு வந்து இரவு 1 மணி வரை சளசளவென பேசிக்கொண்டு அடுத்தவர்களின் (குழந்தைகள், தாய்மார்கள், வயதானோர்) தூக்கம் பற்றிய கவலையில்லாமல் கூத்தடிப்பார்கள்.

  இந்த முறை வார நாளில் செல்ல நேர்ந்ததால் இந்த மாதிரி கும்பல் இல்லை. பயணச்சீட்டு சோதிப்பாளரும் உடனேயே வந்துவிட (பெரும்பாலும் இவர் 11மணிக்கு மேலேயே வருவார் (வண்டி கிளம்புவது 10.45இரவு)) - மிடில் Berthல் ஏறிப்படுத்தால் நல்ல தூக்கம்.

  ஷௌஞ்சாலயம் என தசாவதாரத்தில் கமலால் கிண்டலடிக்கப்பட்ட, அந்நியனில் அம்பியால் சுட்டிக்காட்டப்பட்ட கழிவறையின் அருகிலுள்ள இருக்கை (கடைசி நிமிடத்தில் Tatkalல் பயணச்சீட்டு எடுத்தால் இப்படித்தான் மாட்டும்) என்பதாலும் எப்போது முழிப்பு வந்தாலும் கழிவறையின் மணம் மேலும் தூங்கவிடாமல் படுத்தியது. ரயில்வே துறையினர் புல்லட் ரயில் எல்லாம் விடுவதற்குப் பதில் பேசாமல் தற்போது ஓடும் ரயில்களின் சுத்தம், சுகாதாரத்தை மேம்படுத்தலாம்.

  பாவம். 2 குழந்தைகளுடன் கீழ் Berthல் படுத்திருந்த ஒரியா தம்பதியினர் குழந்தையுடன் சேர்ந்து ஒரே பர்த்தில் படுப்பதில் சிரமத்துடன் தூங்கமுடியாமல் தவித்தனர். குழந்தைகளுடன் செல்லும் பெற்றோருக்கு (அதுவும் தாய்மார்களுக்கு) இது எப்போதுமே கடினமான ஒன்று. இதற்கு யாரேனும் புதிய வசதியாக கண்டுபிடிக்கமாட்டார்களா ? 4 வயது வரையினாலான குழந்தைகளை படுக்க வைக்க எதேனும் சிறப்பு அட்டாச்மெண்ட் (சாப்பிடும் tray மடித்து வைப்பது போல)

  சென்னை மெயில் 4.45am க்குத்தான் சென்றடையும் என்றாலும் திருவள்ளூர் தாண்டும்போதே முழிப்பு வந்துவிடும். செல்பேசியில் பண்பலை வானொலிகளை தூண்டினால் சில நல்ல பழைய பாடல்களைக் கேட்க முடியும். ஆனால் இந்த முறை 4.15amக்கே பேசின் பிரிட்ஜ் வந்துவிட்டது.

  மேற்குவாசல் வழியே வெளியில் வந்தால் கால் டாக்ஸி மீட்டரில் என போர்டு வைத்து கூவுகிறார்கள். ஆனால் ஏறிய வண்டியில் மீட்டரைக் காணோம். அதிகாலை என்பதால் இரவு ரேட்டாம். ஃபிக்சட் ரேட் சொல்லி ஏற்றினார் அங்குள்ள பூத் காப்பாளர். 5 மணிக்கே வீடு சேர்ந்து 1 மணிநேரம் தூக்கம், பின்னர் அலுவலகம் நோக்கி OMRல் பயணம்.

  OMR என்றால் Old Madras Roadஆ ? இல்லை இது Old Mahabalipuram Road in Chennai.

  பெங்களூர் OMR (Old Madras Road) பற்றி பிறகு.

  (தொடரும்)

  - அலெக்ஸ் பாண்டியன்
  01- ஜனவரி - 2010