Wednesday, November 03, 2004

ரங்க ஷங்கரா - பெங்களூரில் நாடக விழா



கன்னட நடிகர் (மறைந்த) ஷங்கர் நாக் பற்றி அறிந்திருப்பீர்கள். அனந்த் நாக் அவர்களின் தம்பி. அருந்ததி நாக் அவர்களின் கணவர். நாடகத்துறையில் சிறந்த பங்களிப்பையும், சுமார் 100 படங்களிலும் நடித்தவர். ஆனால் ஓர் விபத்தில் இளவயதிலேயே இறந்தவர். பெங்களூரில் உள்ள பெரும்பாலான ஆட்டோக்களில் ஷங்கர் நாகின் முகத்தை வரைந்திருக்கக் காணலாம்.

அவரின் நினைவாக அவர் மனைவி அருந்ததி நாகும், இன்ன பிற ஆர்வலர்களும் பெங்களூரில் நாடகத்திற்காக என்றே கட்டிய அரங்கம் தான் ரங்க ஷங்கரா. சுமார் 300 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய, ஏ.சி அரங்கம். நாடகத்திற்கான வசதிகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அரங்கங்களை விட வாடகை குறைவு. மும்பையில் உள்ள பிருத்வி தியேட்டர் போல நாடங்களை ஊக்குவிக்க, வளர்க்க பாடுபடுவோம் என ஆர்வலர்கள் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ஆர்.கே.நாராயண் அவர்களின் 'மால்குடி டேஸ்' இயக்கியது ஷங்கர் நாக் தான்.


ரங்க ஷங்கரா அரங்கம் (தென்) பெங்களூரின் ஜே.பி. நகரில் தபால் நிலையம் அருகில் உள்ளது.

இந்த நவம்பர் மாதம் முழுவதும் நாடகங்கள் நடைபெற உள்ளது.

Date Performance Language Group
28th October Maya Sita Prasanga Kannada Rangayana-Mysore
29th October Aveya Mannina Aatada Bandi Kannada Aneka
30th October Dreams of Tipu Sultan English Artistes Repertory Theatre
31st October Malle Nilluvavarege Kannada Kala Gangotri
1st November Ismat Apa Ke Naam Hindustani Motley
2nd November Ismat Apa Ke Naam Hindustani Motley
3rd November Words and Deedah-5 sketches for Nani English Bangalore Little Theatre
4th November Kaanooru Heggadthi Kannada Nataranga
5th November Raja Matthu Rani Kannada Ninasam
6th November Matinee: Meghnad Badh Kabya
Evening: Shanu Roychowdhury Bengali and English Nandikar
7th November Matinee: Shanu Roychowdhury
Evening: Meghnad Badh Kabya Bengali and English Nandikar
8th November Aik Thee Nani Urdu Ajoka
9th November Hayavadhana Kannada Benaka
10th November Parakramana Kannada Abhinaya Taranga
11th November The Maids English Women Artist’s Group
12th November Shastra Parva Kannada Sneha Samuha
13th November Filth English Black Coffee
14th November Namma Nimmolagobba Kannada Prayogaranga
15th November Marathon English Masque
16th November Two Steps Behind English Rage
17th November Commedia dell’Árte Galore Italian and Gibberish Luoghi dell’Arte
18th November Commedia dell’Arte Galore Italian and Gibberish Luoghi dell’Arte
19th November Jungle Mein Mangal Marathi Awishkar
20th November Charan Das Chor
Chattisgarhi Naya Theatre
21st November Agra Bazar Urdu Naya Theatre
22nd November Pampabharatha Kannada Samudaya
23rd November A Mid Summer Night’s Dream Kannada Vedike
24th November Sangya Balya Kannada Ranga Sampada
25th November Dharmaduranta Kannada Sambandha
26th November Prathibimbagalu Kannada Sanchaya
27th November Ganapati English and Rhythm Adishakti
28th November Ganapati English and Rhythm Adishakti
29th November Ritusamharam Manipuri Chorus Repertory Theatre
30th November Ritusamharam Manipuri Chorus Repertory Theatre
1st December Karimayi Kannada Spandana


- அலெக்ஸ்
03-நவம்பர்-2004