Monday, January 03, 2005

மனைவியின் அறிவுரை - எல்லே சுவாமிநாதன்

சுனாமியால் ஏற்பட்ட சேதங்களை விட தொலைக்காட்சியிலும், அரசியலிலும், வலைப்பதிவுகளிலும் நடக்கும் வாக்குவாத/பழி சொல்லும் போக்கு மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. எல்லே சுவாமிநாதனின் இந்த படைப்பு 1999ல் எழுதப்படிருந்தாலும் இன்றும் நடப்பிற்கு பொருந்தும்வகையில் உள்ளது. (என் கருத்து)

டாக்டர். எல்லே சுவாமிநாதனின் படைப்பு இதோ....!

மனைவியின் அறிவுரை
=====================
ரெண்டு புள்ள பெத்தாச்சு,
இத நானா சொல்லணும் ?
சே, சே, சொல்லவே எனக்கு வெக்கமா இருக்கு
என்னங்க உங்க அநியாயத்துக்கு
அளவேயில்லயா
எப்பவும் அதான் நெனைவா
பெண்கள் கஷ்டம் புரியல
அக்கம்பக்கத்துல ஆரையும் கண்டுக்காம
வந்த புதிசுல ஒரு நாளுக்கு பலதடவை
அப்புறம் ஒரு நாளுக்கு மூணுதடவை
அப்புறம் ஒர் நாளுக்கு ஒரு தடவை
ரெண்டு நாளுக்கு ஒரு தடவை,
இல்லாட்டி உயிரா போயிரும்?
ஒடம்பு தாங்குமா சொல்லுங்க
பாத்த ஒடனேயே நாடித்துடிப்பு அதிகமாகுதில்ல
ஒடம்பு வேர்க்குதுல்ல
உணர்ச்சிவசப்படறீங்க இல்ல
ஒடனே தாவறீங்க இல்ல
தயவு செஞ்சு சொன்னாக்கேளுங்க
வாரத்துக்கு ஒரு தடவை
மாசத்துக்கு ஒரு தடவை ன்னு குறைச்சு
மெதுவா அறவே நிறுத்திடுங்க ,

இணையப்பக்கம் போகறதை.
ஊர்வம்பு ஒங்களுக்கு எதுக்குங்க
ஆயிரம் சோலி இருக்க !


சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
2-Sept-1999

==========

3 comments:

வீச்சறுவாள் said...

-------------------
ஒடம்பு வேர்க்குதுல்ல
உணர்ச்சிவசப்படறீங்க இல்ல
ஒடனே தாவறீங்க இல்ல?
--------------------
இதெல்லாம் இணையத்த பத்தியா? என்னமோ போங்க?

Moorthi said...

நான் ஏதோ பலான பலான கவிதை என்றல்லவா நினைத்தேன்!!!

Alex Pandian said...

வீச்சரிவாள் , மூர்த்தி - ஐயா - இது எல்லே சீனியரின் டிரேட்மார்க் வகை படைப்புகளில் ஒன்று. இன்னும் வரும் :-) நெசமா சொல்லுங்க - ஒரு நாள் இணையப் பக்கம் வராம, இல்ல தமிழ்மணம் பக்கம் வந்து வலைப்பதிவுகளை பார்க்காம இருந்தா உங்களுக்கு டென்சனாவல ?

- அலெக்ஸ்