Friday, January 21, 2005

பென்னி ஹின்னும் பெங்களூர் ரகளைகளும்

நேற்று இரவு முதல் பெங்களூரில் பல இடங்களிலும் கல்வீச்சு,பஸ் மற்றும் இதர வாகன கண்ணாடி உடைப்பு, டயர்களில் காற்று எடுப்பு என வன்முறை கும்பல்களின் கைவரிசை பல ஏரியாக்களிலும் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு பந்த் என்ற போர்வையில் இத்தகைய கலவர வேலைகள் இன்னும் அதிகமாகியுள்ளது.

காரணம்: அமெரிக்க எவாஞ்சலிஸ்ட் பென்னி ஹின் பெங்களூரில் இன்று முதல் நடத்த இருக்கும் 'பிரார்த்தனைக் கூட்டம்'. தினமும் பத்து லட்சம் வீதம், மூன்று நாட்கள் (21, 22, 23) முப்பது லட்சம் மக்கள் திரளுவார்கள் எனவும், இந்தியாவிற்கான பிரார்த்தனை மற்றும் ஹீலிங் எனப்படும் குணமாக்கும் அதிசயங்கள் நடத்தப்படும் என்றும் விரிவான ஏற்பாடாக பெங்களூரில் உள்ள ஜக்கூர் ஏர்போர்ட்டில் பல்லாயிரக்கணக்கான சதுரடியில் பல்லாயிர வாட் ஸ்பீக்கர்களுடனும், பெரிய சைஸ் ஸ்கிரீன்களும் ஏற்பாடு. கர்நாடகம் தவிர, கேரள, ஆந்திர, தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலிருந்தும் பலர் வருவர் என எதிர்பார்ப்பு.

அவர் வருவதை எதிர்த்து, பாஜக, வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல மடாதிபதிகளும் விதான் சவுதா வரைசென்று கோஷமிட்டு, கடந்த சில வாரங்களாக இன்றைய தினத்திற்கு தூபம் போடுவதுபோல் அறிக்கை போர்கள்.. இதன் நடுவே முதல்வர் தரம்சிங் தானும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதாகவும் சொல்ல - அறிக்கை விவாதங்கள் சூடு பறக்க - இதன் நடுவில் சோனியா காந்தியின் சொல்படிதான் பென்னி ஹின்இங்கு களமிறக்கப்படுவதாக பிரச்சாரமும், பென்னி ஹின் பிரார்த்தனைக்காக வரவில்லை.. பல லட்சக்கணக்கான அப்பாவி, ஏழை இந்துக்களை மதமாற்றம் செய்யத் தூண்டுவதாகவே இந்த நிகழ்ச்சி அமையும் என பலமான பிரச்சாரத்தின் பின்னணியில் இன்றைய பெங்களூர் கலவரங்கள்..

நடுவில் மாட்டிக்கொண்டது - இன்றைய சுபமுகூர்த்த தினத்தில் திருமணம் நடத்துவோரும், பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்களும் - மற்ற அனைத்து அலுவலகப்
பணியாளர்களும்தான். ஹோசூர் செல்லும் சாலையில், எலக்ட்ரானிக் சிடி செல்லும் மற்றும் ஐடிபிஎல் இன்னபிற கணினித்தொழில் நுட்ப அலுவலகங்கள் செல்லும் பஸ்களும், வேன்களும், ரிங்ரோடில் செல்லும் லாரிகளும்.

http://www.rediff.com/news/2005/jan/21bang2.htm
http://www.rediff.com/news/2005/jan/21bang1.htm

நிலைமை விரைவில் கட்டுக்குள் திரும்பும் என நம்புவோம்.

*** **** *****

சங்கரராமன் கொலையில் சார்ஜ்ஷீட் இன்று... எஸ்.பி. பிரேம்குமார் வரதராஜப்பெருமாளிடமும், அம்பாளிடமும் குற்றப்பத்திரிக்கை ஆணவங்களை வைத்து சிறப்பு பூஜை செய்து.. மாஜிஸ்திரேட்டிடம் சமர்பித்துள்ளார்.

அரசு தரப்பு வக்கீல் மாற்றம், எஸ்.பியின் பாதுகாவலர்கள் மாற்றம், எஸ்.பி.க்கும், டி.எஸ்.பிக்கும் கருத்து வேறுபாடுகள், ரவி சுப்ரமணியம் அப்ரூவர், விகடன் மற்றும் நக்கீரன் நிருபர்களுக்கு மட்டும் கிடைக்கும் பிரத்யேக போலீஸ் மற்றும் ஜெயேந்திரர் தரப்பு உள்தகவல்கள், இத்தனை நாட்கள் பேட்டியும், அறிக்கையுமாக இருந்த மஞ்சள் துண்டு பெரியவர் 21 லட்சம் மகன் மூலம் அளித்தபிறகு காட்டும் மவுனம்...உம்.. we are about to see a long drawn battle in different courts with possible impact in TN elections too.

சூப்பர் ஸ்டார் பெயரையும் இதில் இழுத்து பரபரக்கின்றனர். படையப்பாவில் கடைசியில் அவர் சொல்லும் வசனம்தான் நியாபகத்துக்கு வருகிறது.

- அலெக்ஸ் பாண்டியன்
21-ஜனவரி-2005

1 comment:

Moorthi said...

முன்னொரு காலத்தில் காந்தி, காமராஜர், ராஜாஜி, கக்கன், அண்ணா, பெரியார் என்றெல்லாம் இந்தியாவில் மனிதர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது. இன்றும் வாழ்கிறார்கள்.. அரசியல் என்றாலே என்னவென்று தெரியாது. ஏதோ கடைச்சரக்கு வியாபாரம்போல. 5லட்சம் முதலீடு செய்து அரசியலுக்கு வந்து 5 கோடியாக்கும் வல்லமை தெரிந்த யாரும் நல்ல அரசியல்வாதிகள் இப்போதைக்கு!!! கலிகாலம்...