Monday, March 21, 2005

அலசல் - தூள் - இரு டிவி நிகழ்ச்சிகள்

அலசல் - தூள் - இரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

சுமார் 10 வருடங்கள் (?) முன்பு தமிழ்நாட்டில் ரபிபெர்னார்டின் நேருக்கு நேர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அப்போதெல்லாம் நேரடிப் பேட்டி என்றால் மணீலாவிலிருந்து ஒளிபரப்பாகும் (இந்தியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய அரசின் அனுமதியில்லாத காலம்). மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. அதுவும் வாழப்பாடி ராமமூர்த்தி Full Formல் ஒரு பேட்டி கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது.

அப்பேர்ப்பட்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி - சன் டிவியில் சன் நியூஸ் சேனலில் தற்போது (saturday 9pm) ஒளிபரப்புகிறார்கள். கடந்த சில/பல வருடங்களாக வீரபாண்டியன் நடத்திவருகிறார். அவரும் நல்ல கேள்விகளை முன்வைப்பவர். ஆனாலும் பல சமயங்களில் அது திமுக சார்பு பேட்டியாகவே இருக்கும் அல்லது அவர்கள் கூட்டணி சார்பாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் ஏன் கறுப்பு பேக்ரவுண்டில் பேட்டி எடுக்கிறார்கள் என புரியவில்லை. வெளிச்சம் வீரபாண்டியன் மற்றும் பேட்டி தருபவர் உடலுக்கு மட்டும் இருக்கும். மற்ற எல்லாம் கறுப்பு பின்னணி. வீரபாண்டியன் யாரிடம் பேட்டி கண்டாலும், என்ன விஷயத்தை முன்வைத்து பேட்டி கண்டாலும், ஒரு சில கேள்விகளாவது இட ஒதுக்கீடு அல்லது அது சம்பந்தப்பட்ட தலைப்பில் இருக்கும். நிகழ்ச்சியை மிகவும் ஒரு நல்ல முறையில் எடுத்துச் செல்வார். அவரது வாதங்களும் எளிய முறையில், பேட்டி தருபவருக்கு கோபம் ஏற்படுத்தினாலும் , நாகரீகமான முறையில் இருக்கும்.

ரபி பெர்னார்ட் ஜெயாடிவிக்கு போனாலும் போனார். எல்லாம் உப்புமா பேட்டிகள். அம்மா செயலுக்கு ஜால்ரா போடும் சிலரைக் கூப்பிட்டு ஜெ.யின் சாதனை விளக்க பேட்டியாக இருக்குமே தவிர, உருப்படியான அரசியல் பேட்டியாக ஒருக்காது. இதே சேனலில் வரும் சுதாங்கன் பேட்டிகள் கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் அதுவும் ஜால்ரா மாதிரியே இருக்கும். பரபரபுக்காக அனுராதா ரமணனின் ஜெயேந்திரர்-எதிர்ப்பு பேட்டி.

சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படி சன் டிவியும், ஜெயாடிவியும் பேட்டிகளை ஒருதலைப்பட்சமாக நடத்தி வருகையில், கடந்த சில வாரங்களாக சென்னை தொலைக்காட்சி - பொதிகை நிலையம் - அலசல் என்றொரு அரசியல் பேட்டி நிகழ்ச்சியை ஞாயிறு இரவு 10 மணிக்கு நடத்தி வருகிறது. பேட்டி காண்பவர் லேனா தமிழ்வாணன் (with the trademark black spectacles). சென்றவாரம் திராவிடர் கழக தலைவர் (பொது செயலாளர் ?) கி.வீரமணியின் பேட்டியும், நேற்று எம்.ஜி.ஆர் கழகம் தலைவர் ஆர்.எம்.வீ யின் பேட்டியும் ஒளிபரப்பானது.

அலசல் நிகழ்ச்சியின் நான் பார்த்த இரு பேட்டிகளும் மிக அருமை. எளிமையான, நாகரீகமான கேள்விகள் ஆனால் ஆழ்ந்த கேள்விகள். எல்லா விஷயங்களையும் (including controversial topics) தொடப்பட்ட கேள்விகள். பேட்டியின் போது பேட்டி தருபவரும் பதிலளிக்க ஆர்வமூட்டும் வகையில் கேள்விகள். வீரமணியும் எல்லா கேள்விகளுக்கும் நல்ல பதிலளித்தார். ஆர்.எம்.வீயும் அப்படியே. ஜெ. சம்பந்தப்பட்ட சில கேள்விக்களுக்கும் வெளிப்படையான பதில்கள். அவர் ஏன் எம்.ஜி.ஆருக்கு ஜெ.நெருக்கமானது தனக்குப் பிடிக்கவில்லை. சினிமா தயாரிப்பாளராக தான் எடுத்த முடிவுகள் எப்படி (ரிக்ஷாக்காரன் - மஞ்சுளா நாயகி..) பின். ஜானகி அணி, பின் ஜெ.ஆட்சியில் அமைச்சர், இலாகாக்கள் பறிப்பு, கொடுப்பு பின் பறிப்பு, கட்சியை விட்டு நீக்கம், பின்னர் தனிக்கட்சி, கலைஞருடன் கூட்டு என எல்லா விஷயங்களுக்கும் பதில் சொன்னார். ரஜினியின் பாட்ஷா பட வெற்றி, பின்னர் ஏன் படத் தயாரிப்புகள் இப்போது இல்லை என பதிலளித்தார்.

நிகழ்ச்சியை (முன்பு துக்ளக்கில் இருந்த) சாவித்திரி கண்ணன் என்பவர் இயக்கி வழங்குகிறார். லேனாவின் சாய்சும் அருமை. லேனா, மாலன் இருவரும் இந்த 50+ ( சரியா?) வயதிலும் இளமையாக இருப்பதன் ரகசியம் என்னவோ ? லேனா எந்த சார்பும் இல்லாமல் கேள்வி கேட்பதால் ஒரு நியூட்ரல் தன்மை நிகழ்ச்சியில் வெளிப்படுகிறது. வரும் வாரங்களில் இன்னும் பல தலைவர்களின் பேட்டிகள் வரும். எதிர்பார்ப்போம். (விஜய் டிவியில் பாராளுமன்ற தேர்தல் முன் நடத்திய பேட்டி நிகழ்ச்சிகளும் அருமை)

பொதிகையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவது பலருக்குத் தெரியுமா என்பதே தெரியவில்லை. அதுதான் பொதிகை !

**** ***** ******

இதே நேரத்தில் (ஞாயிறு இரவு 10மணி) ஜெயா டிவியில் 'தூள்' என்றொரு அரசியல் நையாண்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இரு நபர்கள் அதிமுகவைத் தவிர அனைத்து எதிர் கட்சிகளையும் வாரும், கிண்டலடிக்கும் நிகழ்ச்சி. தமிழ்பட்டி என தமிழ்நாடும், முத்துக்காளை என கலைஞரும், தனபால்சாமி என வைகோவும் உருவகப்படுத்தப்படுகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த திண்டுக்கல் திமுக மாநாட்டை கேலி செய்து, தயாநிதி மாறன், அழகிரி, ஸ்டாலின் மற்றும் வைகோ, காங்கிரஸ் ஆகியோரைக் கிண்டல் செய்தனர்.

பெரும்பாலும் காங்கிரஸ், திமுக, மதிமுக ஆட்களைக் கிண்டல் செய்தே இந்நிகழ்ச்சி இருக்கும் இது வரை நான் பார்த்த எபிசோடுகளில், மிகவும் அநாகரீகமாக (சன் டிவியின் டாப்டென் அல்லது ' சின்ன பாப்பா பெரிய பாப்பா' அளவில்) எதுவும் பார்த்த ஞாபகம் இல்லை. இதையே சன் டிவி ஜெ.யையும், பி.ஜே.பியினரையும், கிண்டல் செய்து ஒரு நிகழ்ச்சி நடத்தி இருந்தால், நிச்சயம் அது நையாண்டி என்பதைத் தாண்டி ஒரு படி மேலே இருக்கும் என நினைக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் தி.மு.க திண்டுக்கல் மாநாட்டில் பேச்சாளர்கள் பேசிய பேச்சுக்கள் பெரும்பாலான (தமிழ்) பத்திரிக்கைகள் இணையத்தில் முழுக்க பதியவில்லை. துக்ளக்கில் வெளியாகியுள்ளது. திமுக பேச்சாளர்கள், அதுவும் வெற்றிகொண்டான், நாராயண் அவர்களின் 'கெட்ட வார்த்தை' பதிவுகளில் உள்ள சிலவையையும் உபயோகப்படுத்தியுள்ளது தெரியவருகிறது. அம்மா கட்சியினரும் இதற்கெல்லாம் சளைத்தவர்கள் அல்ல.


- அலெக்ஸ் பாண்டியன்
21 - மார்ச் - 2005

7 comments:

அல்வாசிட்டி.விஜய் said...

ஆர்.எம்.வீ பேட்டியில் திருசெந்தூர் கோயில் தங்கவேல் நோக்கி ஏதாவது கேள்விகள் பாய்ந்ததா?

//பொதிகையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவது பலருக்குத் தெரியுமா என்பதே தெரியவில்லை. அதுதான் பொதிகை !//

'பரபரப்பு' சன் டிவிக்கு முன்னாலா? நீங்கள் புகழ் பரப்பினால் தான் உண்டு.

Alex Pandian said...

அ.விஜய்,

இரு நிகழ்ச்சிகளும் (அலசல் - தூள்) ஒரே நேரத்தில் ஒளிபரப்பாவதால், இரண்டையும் மாற்றி மாற்றி பார்த்ததில் - திருச்செந்தூர் வேல் கேள்வி வந்ததா என தெரியவில்லை. யாரேனும் முழுவதும் பார்த்திருந்தால் தெரியப்படுத்தவும்.

நேற்று விஜய் டிவியில் மதன்ஸ் திரைப்பார்வையில் கலைஞரின் பேட்டி ஒளிபரப்பானது. (மண்ணின் மைந்தன் படத்தின் வசனகர்த்தா என்ற முறையில்). இந்தப் பேட்டியும் நன்றாக இருந்தது. சில இடங்களில் மதன் வழிய நேரிட்டது. கலைஞரின் ஞாபக சக்தி மற்றும் திறமையை இன்னோர் முறை வியந்தேன். இந்த வயதிலும் பல ஆண்டுகள் முன் நடந்த திரை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நினைவுகூறினார்.

பொதிகையில் நடராசன் அவர்கள் இயக்குனராக இருந்த காலத்தில், இந்தியாவிலேயே அதிக அளவு வருவாய் (விளம்பரம்) ஈட்டிய ரீஜனல் சானலாக இருந்தது. நிகழ்ச்சிகளும் சன் டிவிக்கு போட்டியாய் நன்றாக இருந்தது. இப்போதெல்லாம் பல நிகழ்ச்சிகள் வெகு சுமார்.

- அலெக்ஸ்

Narain said...

அலெக்ஸ், எழுதினாலும் எழுதினேன். எல்லாரும் இப்ப, கெட்ட வார்த்தைன்னு சொன்னவுடனே என் பதிவை போடுட்றாங்க. நான் என்னமோ, கெட்ட வார்த்தையின் என்சைக்ளோபீடியா மாதிரி, நீங்க சொன்ன ஜெ.டிவி நிகழ்ச்சியைப் பார்த்திருக்கேன், பெருசா ஒண்ணுமிருக்காது, எல்லாம் வெத்து ஜால்ரா வேலை தான். தேர்தலுக்கு முன்னாடி, எஸ்.எஸ்.சந்திரனை வைச்சு ஒரு நிகழ்ச்சியை ஜெ. டிவியில செஞ்சிருந்தாங்க. அபத்தக்களஞ்சியம். ஆபாசமும் கூட. உங்களுடைய செய்தி புதுசா இருக்கு, பார்க்க முயற்சிக்கிறேன். இதுமாதிரி கேள்வி கேட்கும் நிகழ்ச்சிகளில் அகில இந்திய அளவில், ராஜ்தீப் சர்தேசாயின் "பிக் ஃபைட்" (NDTV) ஒரு மைல்கல். யாராயிருந்தாலும், கேட்ட கேள்விக்கான பதிலை வாங்காமல் விடுவதில்லை. அதேப் போல் பிரபலங்களைப் பேட்டி காணும், ஷோபா டேயின் (Sahara TV) பேட்டிகளும் விஷயஞானமுள்ளவை. இவ்வளவு சொல்லி, கரண் தபாரின் face-to-face (BBC World) சொல்லாமல் போனால் புண்ணியம் கிடைக்காது.

ராம்கி said...

லேனா - "பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்துக்கொண்டாலும் அந்த அணியில் இருக்கிறீர்கள்... காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தாலும்
அதனுடன் கைகோர்த்துக்கொள்கிறீர்கள். அது எப்படி?"

ஆர்.எம்.வீ - "தேர்தல் நேரத்தில் சூழ்நிலைக்கேற்ப நம் காட்சியை யார் மேலே தூக்கிவிடுவார்கள் என்பதை பார்த்து அதற்கு ஏற்றாற் போல் அமைவதுதான் கூட்டணி. கிட்டதட்ட ரயில்வே தண்டவாளம் மாதிரி.. நம்மோடு இணைய வேண்டிய அவசியமில்லை. ஒத்து கருத்து இருந்தாலே போதும்"

இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் இல்லையான்னு லேனா கேட்க மறந்துதான் போனார். எதுக்கும் தயாரா வந்த ஆளுகிட்ட எந்த வேல் பத்தி கேட்டாலும் உருப்படியான பதில் கிடைக்கும்னு நாம் எதிர்பார்க்கவே கூடாது!

Alex Pandian said...

நாராயண்,

மன்னிக்கவும். கெட்ட வார்த்தை என்றவுடன் நாராயணின் பதிவு என்ற நோக்கம் ஏற்படும் என்ற எண்ணத்தில் நான் அதை எழுதவில்லை.

துக்ளக் போன வார இதழைப் படிக்கவும். அதில் வெற்றிகொண்டான் மற்றும் நெல்லிக்குப்பம் புகழேந்தி ஆகியோர் பேசியதாக பிரசுரமாகியுள்ளவை மிகவும் ஆபாசமாகத் தோன்றியது. இதையெல்லாம் துக்ளக்கில் நேரடியாக பிரசுரம் செய்துள்ளார்களே என்ற ஆச்சரியம். அதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பெண்களை மையமாக வைத்துத் தாக்கும் பாணியில் தான் பேச்சாளர்கள் பேசியுள்ளனர்.

எஸ்.எஸ்.சந்திரனின் நிகழ்ச்சியும் இது போலத்தான். அவ்வாறு பேசுவது அவருக்கு கை வந்த கலை.

ராஜ்தீப், பர்கா தத் போன்றவர்கள் தமிழக அதிரடி அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனால் பலமுறை எக்ஸ் ஃபேக்டர் நிகழ்ச்சியில் ராஜ்தீபும், இன்ன பிறரும் ஜெ.வைத் தாக்கி கிண்டல் செய்துள்ளனர். ஆட்டோ அனுப்பப் பட்டதா என தெரியவில்லை. சுனாமி சமயத்தில் டாக்டர்.அன்புமணி ராமதாசுடன் ஒரு அருமையான ஆங்கிலப் பேட்டியை என்.டி.டிவி ஒளிபரப்பியது. பட்ஜெட்டுக்குப் பிறகு என்.டி.டி.வி. ஃபிராஃபிட் சேனலில், விக்ரம் சந்திராவும் டி.என்.நைனனும், ப.சிதம்பரத்துடன் நடத்திய உரையாடலும் சிறப்பாக இருந்தது (பார்த்திபன் பாணியில் சொன்னால் பொட்டு வாங்குதல் - ப.சி. மூலம் சில சவுண்ட் பைட்டுகளை வரவழைக்க முயன்றனர். ப.சி. அருமையாக சமாளித்தார்.

கரன் தாபர் அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது தெரியும் தானே ? இது முன்னமே வலைப்பதிவுகளில் பேசப்பட்டுள்ளது. கொஞ்சம் தேடினால் சுட்டிகள் கிடைக்கும்.


ராம்கி: அந்த ரயில் தண்டவாள உதாரணம் பற்றி ஆர்.எம்.வீ சொன்னதைப் பார்த்தேன். நல்ல மழுப்பல். ஆனாலும் நாகரீகமாக பதிலளித்தார்.

- அலெக்ஸ்

Anonymous said...

«ýÀ¢ý «¦ÄìŠ:
À¾¢×¸û ÝôÀ÷.
«Äºø:
¦À¡¾¢¨¸ «ÄºÄ¢ø §¸ð¸ôÀð¼ §¸ûÅ¢§¸ûÅ¢¸¨ÇÔõ À¾¢ø¸¨ÇÔõ ±ØÐí¸§Çý.
þó¾ ¿¡¸Ã£¸Á¡É «Äºø ¸Ç¢ø ±øÄ¡
¾¨ÄÅ÷¸Ùõ ¸ÄóÐ ¦¸¡ûÇî
¦ºö §ÅñÎõ.
âø : «Êì¸Ê ÅÕõ ¿¢Ä ¿Îì¸õ À¡÷ò¾¡ø
À¡¾¡Ç âø ¿ÁìÌ §¾¨Å¡?

ÍÅ¡Á¢¿¡¾ý
Ä¡Š ²ïºÄŠ

Alex Pandian said...

நன்றி. நண்பர் எல்லே சுவாமிநாதன் கேட்டிருந்தார்:
>>>>
அலசல்:
பொதிகை அலசலில் கேட்கப்பட்ட கேள்விகேள்விகளையும் பதில்களையும் எழுதுங்களேன்.
இந்த நாகரீகமான அலசல் களில் எல்லா
தலைவர்களும் கலந்து கொள்ளச்
செய்ய வேண்டும்.
ரயில் : அடிக்கடி வரும் நில நடுக்கம் பார்த்தால்
பாதாள ரயில் நமக்கு தேவையா?
>>>>

அலசல் நிகழ்ச்சியில் விளம்பரங்கள் ஏதுமின்றி பேட்டியின் முழு நேரமும் கேள்வி பதில்களில் செல்வதால், எல்லாவற்றையும் இடுவது கொஞ்சம் கஷ்டம். சில முக்கிய விஷயங்களை பகிர முயல்கிறேன். சென்ற ஞாயிறன்று தொல். திருமாவளவனின் பேட்டி. இதுவும் நன்றாக இருந்தது. குமுதத்தில் லேனா 'தூய தமிழில் பேசுவோம்' என ஒரு பக்க கட்டுரை எழுதிவருகிறார். அவர் திருமாவின் 'சினிமாவில் தமிழ்' முயற்சிகளைப் பாராட்டவும் இன்னும் அதை கலாச்சார சீரழிவுகளைக் குறைக்கும் விதம் போராடவும் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.


திருமாவும் உணர்ச்சிவசப்படாமல் நன்றாக பதிலளித்தார். இவ்வாறு பேட்டி அமைவதற்கு பேட்டி காண்பவரின் நாகரீக முறையும் காரணம் என நினைக்கிறேன். கரன் தாபர் அல்லது இண்டியா டுடேவின் பிரபு சாவ்லா ஆகியோர் நம் தமிழக தலைவர்களைப் பேட்டி எடுத்தால் ருசிகரமாக இருக்கும். (அம்மா பேட்டி பிபிசில பார்த்திருப்பீங்க)

தற்போது நிலநடுக்கங்கள் இந்தியாவில் அதிகமாகி வருவது இந்த பாதாள ரயிலுக்கு ஆபத்தா என தெரியவில்லை. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் வருகிறது ஆனால் அங்கு எல்லாம் சரியாக ஓடுகிறது. நம்மாட்கள் கட்டிங் வாங்காமல் தொழில்நுட்பத்தை சரியாக உபயோகித்தால் இங்கும் பாதாள ரயில் ஓடும் என்றே நினைக்கிறேன்.

- அலெக்ஸ்