Wednesday, March 23, 2005

உலகின் இரண்டாவது 'குடி'மகன் ?

உலகின் இரண்டாவது 'குடி'மகன் ?

கடந்த சில நாட்களில் செய்திகளைப் படித்திருந்தால் இந்தச் செய்தியையும் பார்த்திருக்கலாம். UB குழுமத்தின் சேர்மன் விஜய் மல்லையா, ஷா வாலஸ் என்ற கம்பெனியை 1300 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டார். இதனுடன் விஜய் மல்லையாதான் உலகிலேயே இரண்டாவது லிக்கர் பேரன் (liquor baron) என்று அறியப்படுகிறது.

விஜய் மல்லையாவின் பல்வேறு முகங்கள்


Photo courtesy: The Week

- Page-3 பார்டி சர்க்யூட்டில் ஒரு பெரும் புள்ளி - பெரும்பாலான பெங்களூர், மும்பையின் மிக மிக மேல் தட்டு பார்டிகளில் அவர் கண்டிப்பாக இருப்பார்
- ராஜ்ய சபா எம்.பி
- UB குரூப் சேர்மன்
- குதிரைப் பந்தைய ஆர்வலர்
- சுப்ரமணியம் சுவாமியின் ஜனதா கட்சியின் (ஏர் உழவன் சின்னம் ஞாபகம் இருக்கா ?) தலைவர்
- கிங்·பிஷர் ஏர்லைன்ஸ் என்னும் குறைந்த கட்டண விமான சேவையைத் துவக்க உள்ளார்
- நவ நாகரீக நாரீமணிகளுடன் தோன்றுவார் - ப்ளேபாய் போன்ற இமேஜ் உண்டு
- சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து திப்பு சுல்தானின் வாளை பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து, இந்தியாவிற்கு மீட்டு வந்தார்

நேற்றைய ஸ்டார் நியூஸ் செய்தியில் இவையெல்லாவற்றையும் கலந்து ஒரு தொகுப்பு ஒளிபரப்பினர். வித்தியாசமான தொழிலதிபர் + அரசியல் பங்காளி.

அடுத்த முறை உங்கள் கைகளின் கிண்ணங்களில் கீழ்கண்ட மதுவகைகள் இருந்தால் விஜய் மல்லையாவிற்கு ஒரு சீயர்ஸ் சொல்லிவிட்டு "........................" கல்பவும்.


Photo Courtesy: Brandchannel.com

- கிங்·பிஷர்
- கல்யாணி
- கோல்டன் பில்ஸனர்
- ஸிங்காரோ
- மக்டொவல் - சிங்கிள் மால்ட், டிப்ளோமாட்
- ஹெர்பர்ட்சன்ஸ் - பேக்பைபர்
- ராயல் சாலஞ்ச்
- ப்ளூ ரிபாண்ட்
- கில்பீஸ்
- பஸ்ஸர்ஸ்
- டைரக்டர்ஸ் ஸ்பெஷல்
- கோல்கொண்டா
- வொய்ட் மிஸ்சீ·ப் வோட்கா
- ஹேய்வார்ட்ஸ்
- ............................................

- அலெக்ஸ் பாண்டியன்
23-மார்ச்-2005

2 comments:

Anonymous said...

ஹும்ம்! ஒரு டிராப் குடிக்கறது கிடையாது. அப்புறம் எதுங்குங்கண்ணா இப்படி ஒரு விலாவாரியான குடிக் கவரேஜ்?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Alex Pandian said...

எல்லோரும் இன்புறிருக்க நினைப்பதுவேயல்லாமல்.. வேறொன்றறியேன் எல்லே தலீவரே...! கபாலியும் பாகவதரும் அப்பாலிக்கு இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும் இல்ல..

- அலெக்ஸ்