Monday, March 07, 2005

Zoom சேனலும் 'Dangerous' நிகழ்ச்சியும்

இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே ...... முறையாக (!?) ஒரு தனியார் சேனலில் (டைம்ஸ் ஆ·ப் இண்டியா குழுமத்திற்குச் சொந்தமான) Zoom என்கிற சேனலில் தினமும் இரவு 11 மணிக்கு கமல் சித்து என்னும் பெண்மணியும் சமீர் கோச்சார் என்பவரும் ஒரு நிகழ்ச்சி நடத்துகின்றனர். நிகழ்ச்சிக்குப் பெயர் 'டேஞ்சரஸ்'



இதில் என்ன என்கிறீர்களா ?

இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக நமது தமிழ் சேனலில் விஜய் டிவியில் மறைந்த டாக்டர்.மாத்ருபூதமும், (துபாய் வாழ்) டாக்டர்.ஷர்மிளா மேடமும் மிகவும் கண்ணியமாக நடத்திய 'புதிரா புனிதமா' நிகழ்ச்சியை, Zoom சேனலில் மேற்சொன்ன இருவரும் (கமல் சித்து + சமீர் கோச்சார்), கிறக்கமேற்படுத்தும் முயற்சியில் நடத்துகின்றனர். அப்பெண்மணியின் உடையும், ஹேர்ஸ்டைலும், மேலாடையும் சொல்லவே வேண்டாம்.



photo courtesy: www.indiantelevision.com

இதே சேனலில் கபீர் பேடியின் மகள் பூஜா பேடி ஒரு பேட்டிகாணும் நிகழ்ச்சியைப் ப்ரைம் டைமில் நடத்துகிறார். இன்னும் ஒரு நொடி இருந்தால் அவர் மேலாடை விலகிவிடும் அளவிற்கு ஒரு see all bare all ஆடை. பூஜா பேடி பேட்டி காணும் விஷயங்களும் ரசாபாசமான விஷயங்களே.


இந்த டேஞ்சரஸ் என்னும் நிகழ்ச்சி இரவு 11.00மணிக்கு.. தினமும் ஒரு வித்தியாசமான பலான விஷயம் சம்பந்தப்பட்ட தலைப்பு.. ஒரு விருந்தினருடன் பேட்டி (உங்களுக்கு எப்படி ' ' பிடிக்கும்' போன்ற அந்தரங்கக் கேள்விகள்.. விருந்தினரும் சகித்துக்கொண்டே, அல்லது இளித்துக் கொண்டே பதில்கள் சொல்ல, இதற்கு நடுவே தொலைபேசி அல்லது குறுஞ்செய்தியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இருவரும் ஏதோ நிபுணர்கள் போல பதில்கள். ஆனால் எல்லாம் சும்மா டைம்ஸ் ஆ·ப் இண்டியா நாளிதழ் படிக்கும் இளைஞர் / இளைஞிகளை குறிவைத்து செய்யப்படும் கிம்மிக் ஆகவே தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் இடையே வரும் விளம்பரங்களும் பலான வகையே. இந்தச் சேனலே இந்தி சினிமா உலகில் நடைபெறும் ·பேஷன் மற்றும் பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளை காண்பிப்பதற்கும், இந்தி சினிமா கிசுகிசுக்களை Page-3 என்ற தலைப்பில் பகிரவும் ஏற்படுத்தியுள்ளனர்.

நமது தமிழ் டிவி நிகழ்ச்சியில் இரு டாக்டர்கள் பங்கு கொண்டதால் அவை மருத்துவ ரீதியிலும் உளவியல் ரீதியிலும் சிறப்பு பெற்று விளங்கியது. இதற்கும் முன்பே ஜீ டிவி, சோனி டிவியிலெல்லாம் டாக்டர்.பிரகாஷ் கோதாரி போன்றோருடன் சில கேள்வி பதில் மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தது என்றாலும், ஆனால் இந்த Zoom சேனல் கத்துக்,குட்டிகள் ??

மேல்கைண்ட் அன்பர்கள் பார்த்துவிட்டு கருத்து சொல்லவும் ;-) அவரவர்க்கு அதது..!!


- அலெக்ஸ் பாண்டியன்
07-மார்ச்-2005

3 comments:

Boston Bala said...

Did U watch the movie 'Page-3'?

Alex Pandian said...

Not yet. I saw a review in one of the latest sunday newspapers that though it does not carry much cinematic value, it shows today's page-3 culture of Mumbai very well.
- Alex

Narain said...

இப்போதுதான் படித்தேன். இதுவும் ஒரு வழக்கமான கிளூகிளுப்பு நிகழ்ச்சிதான், எஸ்.எஸ் ம்யுசிக்கின் ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட் போல. பேஜ் 3 கட்டாயமாக பாருங்கள். என் பதிவில் அப்படத்தினைப் பற்றி எழுதியிருக்கிறேன்.