Wednesday, April 06, 2005

யாஹுவும் கூகிளும் கொஞ்சும் நேரம்..!

இந்த தளத்தில் Yahooவும் Googleம் சேர்ந்து ·பிலிம் காட்டறமாதிரி பண்ணிருக்காங்க. Picture in Picture என்றும் ஒரே டிவியில் ஒரே சமயத்தில் இரண்டு சானல்கள் பாக்கறமாதிரி ஒரே உலாவி ஜன்னலில் இரண்டு தளத்தின் வெளியீடுகளைப் பார்க்க உதவுகிறது.



முயன்று பார்க்கவும். yagoohoogle.com

நம்ம தமிழ் மணத்துலயும் இத மாதிரி புதுப் புது விஷயங்களை காசி பண்ணிகிட்டு இருக்கார். லேட்டஸ்டா PDFல் படிக்கும் வசதி.

இந்த மாதிரி சின்னசின்ன Innovative ஐடியாக்களை நாம் நம் எண்ணத்தில் கொண்டு வர பயிற்சி ஏதானும் உண்டா ?

*** *** *** *** ***

சந்திரமுகி படத்தில் ஆஷா போன்ஸ்லேயும், மது பாலகிருஷ்ணனும் பாடியிருக்கும் யுகபாரதியின் இந்தப் பாடல் இன்னும் 3-4 மாதங்களுக்கு எல்லா டிவி சேனல்களிலும் கண்டிப்பாக நீங்கள் கேட்கப்போகும் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன். இசை: வித்யா சாகர்


Photo Courtesy: Rediff.com

************
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக் கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா.....
---

கண்ணில் நூறு அழகு... கையில் நூறழகு உன்னால் பூமி அழகே
உன்னில் நான் அழகு என்னில் நீ அழகு நம்மால் யாவும் அழகே
ஓஓ....கண்ணதாசன் பாடல் வரி போல கொண்ட காதல் வாழும் நிலையாக
கம்பன் பாடிப் போன தமிழ் போல.. எந்த நாளும் தேகம் நலமாக

வள்ளி நீயாக....வயல் நானாக....வெள்ளாமை... நீ ஆஆஆஅ
---
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக் கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா
----
லால்லா.. .லாலலா...லாலலா...

கொக்கிப் போடும் விழி கொத்திப் போகும் இதழ் நித்தம் கோலம் இடுமா
மக்கள் யாவரையும் அன்பில் ஆள, இதில் உன்னைப் போல வருமா

வெளி வேஷம் போடத் தெரியாமல் எனதாசை கூடத் தடுமாறும்
ம்ம் ம்ம் ...பல-கோடி-பேரின் அபிமானம் உனக்காக ஏங்கும் எதிர்காலம்
நீ என் நாடு நான் உன்னோடு... மெய் தானே.... இது ஆஆஆ

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீரக் கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் மீளாதா.....

************

இந்தப்பாடலுக்கு ஆஷா போன்ஸலேயை ஏன் கூட்டி வந்தனர் எனத் தெரியவில்லை (என்னதான் சிவாஜி குடும்ப நண்பி என்றாலும்). கிராமராஜனின் படத்தில் பல வருடங்கள் முன்பே 'ஷெண்பகமே..' பாடியிருந்தாலும் இந்தப் பாடலில் பல இடங்களில் கீச்சுக் குரலில் இடிக்கிறது. சில இடங்களில் அழகு என்பது அளகு என்று ஒலிக்கிறது.. அதற்கு மாறாக மது பாலகிருஷ்ணனின் குரல் தேன் போல் தடவிக் கொடுக்கிறது. இந்த மாதிரி மெலொடிகளும், மது.பா போன்ற குரல்களும்தான் இன்றைய தமிழ் சினிமா பாடல்களின் கோஷ்டிகானத்திற்கு/இரைச்சலுக்கு மத்தியில் கொஞ்சம் ஆறுதல். சித்ரா மற்றும் இன்ன பிற தமிழ் இசைக் குயில்கள் என்னவாயினர் ?

சிலசமயம் 'சிந்து பைரவி'யில் டி.எஸ்.ராகவேந்தர் செய்யும் 'கொஞ்ச நேரம் கொஞ்ச கொஞ்ச வேண்டும் என்னிடம்' மிமிக்ரி நினைவுக்கு வந்து கஷ்டப்படுத்துகிறது.

சந்திரமுகியின் இன்னோர் பாடலான 'ரா...ரா.. சரசக்கு ரா..ரா..' பாடல் சரசத்துக்கு அழைக்கிறது. ரம்யா கிருஷ்ணனைப் படத்தில் சேர்த்திருந்தால் இந்தப்பாடலுக்கு ஒரு தனி மெருகு ஏற்றியிருப்பார். படத்தில் ஜோதிகாவா, நயனதாராவா ? இன்னும் ஒரு வாரம் பொறுங்களேன்.

இரண்டு பாடல்களையும் கேட்க:
Konja Neram
Raa..Raa..

சந்திரமுகியின் பாதி - ஒரிஜினலான 'ஆப்த மித்ரா' கன்னடத்தில் 200 நாட்களைத் தாண்டி ஓடுகிறது.

- அலெக்ஸ் பாண்டியன்
06- ஏப்ரல் - 2005

பி.கு: அப்படீன்னா ரஜினியும் நயனதாராவும் யாகு கூகிள் மாதிரியா எனக் கேட்கவேண்டாம் :-)

2 comments:

சுதர்சன் said...

அலெக்ஸ், நல்ல அறிமுகம். நன்றி!

Alex Pandian said...

மேலே எழுதியுள்ள பாடலின் வரிகளில் பிழையிருப்பின், அது ஆஷா போன்ஸலேயின்
உச்சரிப்பில் நான் கேட்டு எழுதியவைதானே தவிர, கவிஞர் யுகபாரதியின் எழுத்திலல்ல. துருக்கியின் குளிரில் (ரஜினிக்கு குளிர் ஒத்துக்காதாம் அவ்வளவாக - லதாரஜினி) ரஜினியும் நயனதாராவும் இவ்வரிகளுக்கு என்ன அபிநயம் புடிச்சிருப்பாங்கன்னு (!?) பாக்கலாம்.

- அலெக்ஸ்