Wednesday, April 13, 2005

தமிழ் மென்பொருள் கருவி !?

வலைப்பதிவாளர்களே, சென்னையில் இருப்போரே - இந்த செய்தியைப் பற்றிய விபரங்கள் தெரியுமா.? ஏதோ தமிழ் மென்பொருள் கருவியாமே - இலவசமா தராங்களாமே ? திறந்த வகை - சரி; அதென்ன உண்மை வகை மென்பொருள் ? தமிழ்மணம் பற்றி, சுரதாவின் இலவச செயலிகள் பற்றி, முகுந்த், மகேன் போன்றோரின் தமிழ் கணினிக் கருவிகள் (?) பற்றி பேரனுக்கும் தாத்தாவுக்கும் கொஞ்சம் யாராவது எடுத்துச் சொன்னால் நன்றி.

Dinamalar link

தமிழ் மென்பொருள் கருவி: 15ம் தேதி சென்னையில் வெளியீடு

சென்னை: மத்திய தொலைத் தொடர்புத் துறையும், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் அறிவியல் கழகமும் இணைந்து இலவச "தமிழ் மென் பொருள் கருவி'களை வெளியிடுகிறது. வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள இந்த விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு தமிழ் மென் பொருள் கருவிகளை வெளியிடுகிறார்.

தமிழ் மொழியில் இலவச மென் பொருள் கருவிகள் வெளியிடப்பட உள்ளன. இதில், 50 திறந்த வகை மென் பொருள்களும், 100க்கும் மேற்பட்ட உண்மை வகை மென் பொருள்களும் அடங்கும். வெகு விரைவில் இதர இந்திய மொழிகளிலும் இலவச மென் பொருள்கள் வெளியிடப்பட உள்ளன.

இந்த மென் பொருட்களில் "ஒளி எழுத்து உணர்தல், சொற் களஞ்சியம், சொல் திருத்தி' ஆகியவை அடங்கும். மைக்ரோசாப்ட் சார்பிலும் தனியாக தமிழ் மென் பொருள் வெளியிடப்பட உள்ளது.

இந்தியாவில் கம்ப்யூட்டர் உபயோகத்தில் இந்தி அல்லாத மற்ற இந்திய மொழி ஒன்றில் இலவச மென் பொருள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டு விழா சென்னை பார்க் ஷெர்டன் ஓட்டலில் வரும் 15ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடைபெறுகிறது.

இலவச தமிழ் மென் பொருளை தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார். மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். விழாவில், ஜி.கே.வாசன் எம்.பி., இந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம், மைக்ரோசாப்ட் தலைவர் ரவி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

**** **** **** **** **** ****
அனைவருக்கும் பார்த்திப வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

- அலெக்ஸ் பாண்டியன்
13-ஏப்ரல்- 2005

10 comments:

Narain said...

தலைவா! போனா கண்டிப்பா கலாய்ச்சிருவேன். பார்ப்போம், ஆனா அதுக்கு பிறகு சென்னையில் வாழ முடியுமான்னு தெரியாது ;-)

Alex Pandian said...

நாராயண்,

இதே செய்தியை இராதாகிருஷ்ணனும் பதிவு செய்துள்ளார். அதெப்படி தமிழ் கணினி, மென்பொருள் அப்படீன்னு நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களும் சரி, இல்லை அதைப் பற்றிய செய்தி பிரசுரிக்கும் ஏடுகளும்(!) சரி இணையத்தில் தமிழில் என்ன நடக்கிறது என்பது பற்றி தெரிந்துகொள்ளாமலே அல்லது வேண்டுமென்றே ஒரு சில வணிக நிறுவனங்களை முன் நிறுத்தி, இதே மாதிரி செய்யறாங்களோ. என்னவோ போங்க :-) போயிட்டு வந்து விபரம் சொல்லுங்க.. ஏதாவது ஏடாகூடமா கேட்டு வீட்டுக்கு ஆட்டோ வராம இருந்தா சரி.

- அலெக்ஸ்

அன்பு said...

நண்பரே ராதாகிருஷ்ணன் அவர்களின் பதிவில் உள்ள இந்த லிங்கைப் பார்த்தீர்களா?

http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/31867

True Type Font (TTF)ஐத்தான் உண்மை வகை மென்பொருள் ? என்று குறிப்பிடுகிறார்களா? சாமிகளா காப்பாத்துங்கப்பா, போறபோக்குல எல்லாத்தையும் இது மாதிரி மொழிபெயர்த்து தள்ளிரப்போறாங்க:)

நற்கீரன் said...

:-)

நற்கீரன் said...

:-)

dondu(#4800161) said...

They mean TTF only. They are also called as true type software, albeit rarely. TTF has 308,000 google hits, whereas TTS has got only 348.
Regards,
Dondu Raghavan

Alex Pandian said...

நான் சொல்ல வந்தது இதுதான். சில பல வருடங்களாகவே தமிழில் இணையத்தில்
மின் மடல்களும், இணையப் பக்கங்களும் தற்போது வலைப்பதிவுகளும், யுனிகோடும், இலவச எழுத்துருக்களும் வெற்றி நடை போட்டு வருகையில், அதுவும் சுரதா,முரசு அஞ்சல், மற்றும் பலரின் இலவச செயலிகளும் பலமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகையில், என்னமோ பேரன் தான் புதுசா வெளியிடப் போறாராம். தாத்தா அதுக்கு ஆசி கொடுக்கப் போறாராம். தமிழ்நாட்டிலுள்ள சில நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொந்த அஜெண்டாக்களால், இணையத்தில் இதுகாறும் தமிழில் இலவச எழுத்துரு மற்றும் செயலிகள் அளித்த முகுந்த், முத்து, சுரதா, மகேந் போன்றவர்களின் செயல்களை மறைத்துவிட்டனரே ?

இதுக்குத்தான் ஆள்/அம்பு/படை பலம் வேணுங்கிறது.

- அலெக்ஸ்

சௌந்தர் said...

இந்த மாதிரி சமயங்களில் இரண்டு பக்கமும் தொடர்பில் இருக்கும் "மாலன்" போன்றவர்கள், இணையத்தில் தமிழின் தற்போதைய உண்மை நிலைமையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாமே!!!

Alex Pandian said...

இந்த சுட்டியில் எல்லா எழுத்துரு / செயலிகளை இறக்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் தளம் மிகவும் ஸ்லோவாக உள்ளது.

http://www.ildc.in/GIST/htm/index.htm

இந்த சிடியில் எதற்கு சோனியா, மன்மோகன் சிங் படம் ? தாத்தா, பேரன் படம்?

- அலெக்ஸ்

sridharan said...

தமிழ் மென்பொருள் கருவி இந்த மாதிரியாக மென்பொருள் மூலம் தமிழ் மொழியின் ஆற்றலை உலகிற்கு எடுத்து காட்டபயனாகிறது. அதை நாம் வரவேற்போம்.

ஒரு புதிய மென்பொருள் ஜாமக்கோள் சாப்ட்வேர் என்று வந்துள்ளது. இதன் மூலம் நமது எதிர் காலம் பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். www.yourastrology.o.in