Monday, May 16, 2005

கன்னடத்தில் கமல்

"வேட்டையாடு விளையாடு" படம் வெளியாகும் முன்னர், கமல் ஒரு கன்னடப் படம் நடிப்பது பற்றி இதுவரை தமிழ் தின/வார செய்தித்தளங்களில் பார்க்கவில்லை. நேற்றைய டெக்கான் ஹெரால்ட், செய்திப்படி, கமல் 'ஸ்த்ரீ சமன்ய' என்ற கன்னடப்படத்தை விரைவில் முடித்துக்கொடுக்க இருக்கின்றார்.


Photo courtesy: DeccanHerald.com

இது அவர் நடித்து வெற்றி நடை போட்ட தமிழ் 'சதி லீலாவதி'யின் கன்னட மொழிமாற்றப் படம். ரமேஷ் அர்விந்த் இயக்குனராக, எடுக்கப் படும் படம்.

கமல் கன்னடத்தில் கடைசியாக நடித்த படம் 'புஷ்பக்' (1987) (அதில் தான் மொழியே கிடையாதே ?) என்றும் ஒரிஜினல்(!?) கன்னடப்படம் "பெங்கியல்லி ஹரளித ஹூவு" (1983)என்றும் சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் நடிக்கிறார் என்றும் செய்தி.

ஜூன் 12 மேட்டூர் அணை திறக்க இயலாத நிலையில், இன்னும் 2-3 வாரங்களில் கர்நாடகத்தில் மழை பெய்யாவிட்டால், காவிரிப் பிரச்னை மீண்டும் தலைதூக்கும் என்ற நிலையில், இந்தப் படத்திற்கு எப்படி வரவேற்பு இருக்கும் என தெரியவில்லை. கமலின் சமீப கால படங்களில் (பஞ்ச தந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ்) ரமேஷ் அர்விந்த் நடித்துக் கொடுத்ததால் அவருக்கு பிரதியுபகாரமாய் இந்தப் படம் என தெரிகிறது.

ரமேஷ் அர்விந்த் கன்னடத்தில் உள்ள டாப்-5 நடிகர்களில் ஒருவர். சந்திரமுகியின் இரண்டாம் (?) ஒரிஜினலான 'ஆப்த மித்ரா'வில் பிரபுவின் வேடத்தில் நடித்து, படமும் 200+ நாட்கள் தாண்டி வெற்றியைக் குவித்தது. ரமேஷின் இன்னோர் படமான 'ஜோக் ஃபால்ஸ்' என்ற படமும் சுமாரான வெற்றி


--0-- --0-- --0-- --0-- --0-- --0--

காஞ்சீபுரத்திலும், கும்மிடிப் பூண்டியிலும் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. அரசியல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். அம்மா பெங்களூருக்கு வருவாரா (தோழியுடன்) அல்லது ஆட்சியைக் கலைத்து, விரைவில் தேர்தல் அறிவிப்பாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.


- அலெக்ஸ் பாண்டியன்
16-மே-2005

4 comments:

சங்கரய்யா said...

அலெக்ஸ்,
அம்மா ஆட்சியே வேண்டுமானால் கலைக்கலாம், தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் தானே அறிவிக்கும்

Anonymous said...

தமிழிலே முடிசாச்சு, இப்போ கன்னடமா? கன்னடத்து (லேட்டஸ்ட்) பைங்கிளிகள் ஜாக்கிரதை

Alex Pandian said...

சங்கரய்யா,

ஆமாங்க. நீங்க சொல்றது கரெக்டுதான். அம்மா கலைப்பாங்க. அப்புறம் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும். நாயுடுகாருக்கு நடந்த மாதிரி ஆணையம் இழுத்தடிச்சுது இல்லை கர்நாடகாவில் கிருஷ்ணா மாதிரி முன்கூட்டியே கலைத்ததால்
தோல்வி போன்ற சமாச்சாரங்களையும் அம்மா யோசிப்பாங்கன்னு நினைக்கிறேன்.

அனானிமஸ்: ஹீரோயின் யாருன்னு இன்னும் தெரியவில்லை. கமல் தமிழில் செய்த
ரோலே கன்னடத்திலும் செய்கிறார். கோவை சரளா ரோலில் யார் நடிக்கிறார்கள் என தெரியவில்லை.

கன்னடத்தில் நடிப்பதற்கு தமிழ்குடிதாங்கியோ திருமாவோ இன்னும் குரலெழுப்பவில்லை. இவர்கள் தொல்லை தாங்கமுடியாமல்தான் மும்பை எக்ஸ்பிரஸில் பட்ட நஷ்டத்தை கன்னடத்தில் நடித்து ஈடுகட்டிக் கொள்கிறார் என நினைக்கிறேன்.

- அலெக்ஸ்

Alex Pandian said...

படத்தின் பெயர் ' ராமா ஷாமா பாமா' என இடப்பட்டுள்ளது. கோவை சரளா வேடத்தில் ஊர்வசி நடிக்கிறார். மேல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
http://www.dinakaran.com/daily/2005/May/18/others/topstory4.html

- அலெக்ஸ்