Tuesday, June 14, 2005

இணையத்தில் தமிழின் பொற்காலம் - 1

இணையத்தில் தமிழின் பொற்காலம் - 1
-----------------------------------

தமிழ்மணத்தின் வீச்சால் பல (500+) மக்கள் வலைப்பதிவில் தமிழில் எழுதத்தொடங்கி இன்று தினமும் 50-60 பதிவுகள் எழுதப்பட்டு திரட்டப்பட்டு படிக்கப்பட்டு, பின்னூட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டும் (சில!) வருகிறது. தமிழில் இவ்வளவு மக்கள் எழுதுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது எழுதப்படும், விவாதிக்கப்படும் பல விஷயங்கள் பல வருடங்கள் முன்பே தமிழிலேயே, இணையத்தில் எழுதப்பட்டு, விவாதிக்கப்பட்டு, சண்டைகளும், இணக்கங்களும், நட்புகளும் தழைத்தோடிய அந்த பொற்காலத்தை (என்னளவில்) தமிழ்மணம் மூலம் இணையத்தில் உலாவரும் புது வாசகர்களுக்கும், எழுதுபவர்களுக்கும் அறிமுகப்படுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்.

நான் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர். முதலில் செய்தித் தளங்களும், ஹாட்மெயில், யுடோராமெயில் போன்ற தளங்களுடனே துவங்கிய பழக்கம், ஒரு நாள் யாகூவில் (அப்போ கூகிள் இல்லை!) தமிழ் என இட்டு தேடிய போது, விழுந்த ஒரு கனி தான் தமிழ்.நெட் எனப்படும் தமிழ் இணையம். பாலா பிள்ளை அவர்களால் துவங்கப்பட்டு, முத்து அவர்களின் முரசு அஞ்சல் மூலம் பலரும் தமிழில் உரையாடும் / எழுத்தாடும் மடலாடற்குழு என அறிந்து, பலதும் கற்றும், பலரையும் நண்பர்களாகப் பெற்று, சுமார் 3-4 ஆண்டுகள் தமிழ், இணையம், குழுக்கள், எழுத்துருக்கள் என இருந்த அந்தக் காலத்தைத் தான் முதல் பொற்காலம் என்பேன் (அப்ப இரண்டாவது ஒண்ணு இருக்கா ? இருங்க அதுக்கு அப்புறம் வர்றேன்)

************* (தமிழ் இணையத்திற்கு முன்பாகவே தமிழ் எழுத்துரு முயற்சிகள் சிங்கப்பூர் நா.கோ மற்றும் இன்ன பிற ஆர்வலர்களால் சிறப்பாகச் செய்யப்பட்டது... தமிழ் எழுத்துரு வரலாறை தெரிந்துகொள்ள இந்தப் பக்கங்களில், விவாதங்களில் உள்ள மடல்களைப் படிக்கவும். http://www.infitt.org/tscii/archives/msg00001.html என்ற சுட்டியில் டாக்டர்.கல்யாண் மடல்; அதற்கு அடுத்த மடலில் சுஜாதாவின் பதில்). எழுத்துரு வரலாறில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.
******************************************************************************

1997 பிற்பகுதி முதல் 2001ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தமிழிணையத்திலும், அதன் offshootஆகத் துவங்கப்பட்ட பல்வேறு குழுக்களிலும் இருந்தவர்கள், பங்கு கொண்டவர்கள் நிச்சயம் இதனை வழிமொழிவார்கள் என நினைக்கிறேன். "கற்றது கைம்மண் அளவு, கல்லாதது இணைய அளவு" என்பது நிதர்சனமானது தமிழ் மடலாடற் குழுக்களில் தான். முதலில் முரசு அஞ்சலின் இணைமதி, இணைகதிர், டாக்டர்.கல்யாணின் மயிலை போன்ற எழுத்துருக்களில் நடந்த தமிழ் இணைய மடலாடல்கள், பின்னர் தமிழ் இணைய தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆர்வலர்களால், திஸ்கி எனப்படும் தகுதரம் உருவாக்கப்பட்டு பல மடற்குழுக்குகளும் இன்றளவில் திஸ்கியிலேயே நடை பெற்று வருகிறது. (தற்போது சில குழுக்கள் யுனிகோடில் இருந்தாலும்)

இணையத்தில் தமிழ் உலா வந்த விண்டோஸ்-95 மற்றும் 98 காலங்களில் யுனிக்ஸ் - அதாவது HP, Solaris இன்ன பிற யுனிக்ஸ் வகைகளும் பலரும் உபயோகித்து வந்தனர். அதனால் யுனிக்ஸ்க்கான தமிழ் எழுத்துருக்களும் வந்தன. அகரம் எனப்படும் செயலியும் அதன் தமிழ் எழுத்துருவும் எனக்குப் மிகப்பிடித்தமான எழுத்துரு. கண்ணில் ஒத்தி (ஒற்றி?)க் கொள்ளலாம் போல இருக்கும். இதனை வடிவமைத்தை 'நாகு' தற்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை.

அதே மாதிரி முரசு அஞ்சலின் ஆரம்ப கட்டங்களில், யுடோரா செயலியுடன் வந்த அஞ்சல்-text அஞ்சல்-system போன்ற எழுத்துருவும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்துருக்கள். அதற்குப் பிறகு திஸ்கியிலும், பின்னர் TAB, TAM தற்போது யுனிக்கோடு என encoding systems வந்து ஒவ்வொன்றிலும் பல எழுத்துருக்கள் வந்துவிட்டன. உங்களுக்குப் பிடித்த (கண்ணுக்குக் கனிவாக இருக்கும்- both on screen and on printout) free ttf based TSCII / Unicode fonts -எழுத்துருக்களைப் பட்டியலிடுங்களேன் ? (ஏன் எனவும் கூறவும்).

தமிழ்.இணையத்திற்கு வருகிறேன். (இ.த.பொ தொடரும்...)


- அலெக்ஸ் பாண்டியன்
14-June-2005

12 comments:

Moorthi said...

அன்பின் அலெக்ஸ்பாண்டி,

தங்கள் வருகை நல்வரவாகுக. இந்த வார நட்சத்திரம் பவர்புல்லாக மின்ன அன்பு வாழ்த்துக்கள்.

(நளினம் அஞ்சல்னு ஒன்னு இருக்குது. பயன்படுத்தி பாத்தீங்களா?)

-L-L-D-a-s-u said...

Join erumbugal@yahoogroups.com to know more about this ..

PositiveRAMA said...

என்னைப்போன்ற புதியவர்களுக்கு தமிழ் வலைப்பூ வரலாறு இனிதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

Anonymous said...

அலெக்சு பாண்டியன் சொன்னதாவது:
||யுடோரா செயலியுடன் வந்த அஞ்சல்-text அஞ்சல்-system போன்ற எழுத்துருவும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்துருக்கள்.||

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது
|அப்பிடிச்சொல்லு அலெக்சு|


தமிள்க்கூலிடாங்கி தாசு சொன்னதாவது:
||Join erumbugal@yahoogroups.com to know more about this .. ||

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|அலெக்சு எறும்புகளிலே இருந்து இணையம் கற்றுக்கொள்ளவேண்டிய மனிதன் இல்லை|

Muthu said...

அலெக்ஸ்,
எனக்குப் பிடித்த எழுத்துரு TSCu-Times.மிக நேர்த்தியான எழுத்துருக்களில் இதுவும் ஒன்று.
இன்னும் பல எழுத்துருக்கள் இங்கே கிடைக்கின்றன.
http://ezilnila.com/software.htm
http://www.travelphrases.info/gallery/Fonts_Tamil.html

தமிழ்வாணன் said...

எனக்கு மைக்ரோசொப்ற் ஓபிசுடன்(Microsoft Office) வரும் Arial Unicode Ms என்ற எழுத்துரு மிகவும் பிடிக்கும். ஆனால் சிலரின் கணனியில் அது உடைவதாக அறிந்தேன். ஆனால் தமிழில் அச்சுப்பதிக்க மிகச்சிறந்ததாக இருக்கிறது.

நீங்கள் குறிப்பிட்ட அகரம் எழுத்துரு பற்றி தகவல்கள் தந்துதவமுடியுமா?

நன்றி
தமிழ்வாணன்

-L-L-D-a-s-u said...

//தமிள்க்கூலிடாங்கி தாசு //

//தமிள்க்கூலிடாங்கி தாசு //

இந்த பட்டத்திற்கு நான் தகுதியானவனா.. தமிள்க்கூலிடாங்கி என்ற பட்டத்தை வேண்டாம் வேண்டாம் என்று கூறியும் எனக்கு அளிக்கவேண்டுமென்று கூறிய அன்புத்தம்பி அனோனிமாசுக்கும் மற்ற அன்பு உடன்பிறப்புகளுக்கும் என்ன கைமாறு செய்யபோகிறேன் . (அடுத்த CM நாந்தான்)

Alex Pandian said...

நண்பர்களே - கருத்துகளுக்கு நன்றி.

மூர்த்தி: நன்றி, நளினம் - ரொம்பகாலம் முன்பு பயன்படுத்தியிருக்கிறேன். தற்போது இல்லை.

பாஸிடிவ் ராமா: நான் சொல்லப்போவது வலைப்பூ வரலாறல்ல. தமிழ்.இணையம் பற்றி

அனோனி-மாஸ்: உங்களுக்கும் இந்த அஞ்சல்-டெக்ஸ்ட் பிடிக்கும் போல ;-) மால்டனில் கோடை விடுமுறை ஆரம்பிக்கவில்லையா ?

முத்து: எழில்நிலா வலைப்பதிவிலிருந்து இறக்கி கவனிக்கிறேன். நன்றி.


தமிழ்வாணன்: நன்றி. ஏரியல்-யுனிகோட்.எம்.எஸ் - சில சமயங்களில் மாத்திரம் நன்றாக இருக்கிறது. அகரம் தொட்டுப்பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.tamil.net/tscii/tools.html
http://www.tamil.net/tscii/toolsold.html (Not sure if the links of Akaram or Suvadi etc are working nowadays. Suvadi is very good. I am using that even now.) www.kuralsoft.com - Kural seyali is also good.

- அலெக்ஸ்

Anonymous said...

நண்பர்களே - கருத்துகளுக்க�it-loan-help.com/bad-credit-loans/debt_settlement_service.htmlrvice.html

Anonymous said...

தன்மானத்தமிளர் தமிள்கூலிடாங்கி சொன்னதாவது:
||இந்த பட்டத்திற்கு நான் தகுதியானவனா.. தமிள்க்கூலிடாங்கி என்ற பட்டத்தை வேண்டாம் வேண்டாம் என்று கூறியும் எனக்கு அளிக்கவேண்டுமென்று கூறிய அன்புத்தம்பி அனோனிமாசுக்கும் மற்ற அன்பு உடன்பிறப்புகளுக்கும் என்ன கைமாறு செய்யபோகிறேன்.||

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|எல் போட்டுள்ள தமிளர் உங்களுக்கு தமிழ்க்குடிதாங்கி என்று தரமுடியாதே சிங்கமே. அதனாலேதான் தமிள்க்கூலிடாங்கி என்று பேரிட்டு போர்காண அளைக்கிறாள் அமோனியாமாசு|

Narain said...

அலெக்ஸ், என் பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள். சமீபத்தில் கூட பாலா பிள்ளையிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்து. எத்தனை முகங்கள், தமிழ்.நெட்டில் மறக்க முடியாத முகங்கள். முனைவர். கல்யாணசுந்தரம், நா.கண்ணன் எல்லாம் முன்னோடிகள்.

நல்ல பதிவு.

Alex Pandian said...

நாராயண்: வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. தமிழ்.நெட்டிலிருந்து சில முத்துக்களை மாதிரிக்கு இடுகிறேன். தமிழ்மணத்தின்
புது நண்பர்கள் பலரும் அதை ரசிப்பார்கள் என நினைக்கிறேன்.

- அலெக்ஸ்