Friday, June 17, 2005

த.நெ.மு: பாசுர மற்றும் சிலம்பு மடல்கள்

தமிழ்.நெட் முத்துக்கள்: பாசுர மற்றும் சிலம்பு மடல்கள்

ஏற்கனவே எழுதியிருந்தபடி தமிழ்.நெட்டில் பல ஜாம்பவான்கள். பல பெரிய தலைகள். பல நல் முத்துக்களும் உண்டு. ஜெர்மனி (தற்போது தென் கொரியா) நா.கண்ணன் பாசுர மடல்கள் எழுதிவந்தார். மிகவும் ரசித்த தொடர் அது.
http://www.angelfire.com/ak/nkannan/Madals/madalindex.html

அதைப் போல நான் தமிழ்.நெட்டில் ரசித்த இன்னொரு தொடர் -
சென்னை. திரு. நாக.இளங்கோவனின் சிலம்பு மடல்கள். இவை வெளியான காலகட்டங்களில் இது சம்பந்தமான உரையாடல்களும் நன்றாக இருக்கும். சுலைமான் அண்ணன், சடையன் ஷாபு, ஆசீப் மீரான் மற்றும் இன்ன பிறரும் நடுவே புகுந்து கலாய்ப்பார்கள்.

யாமறிந்த புலவர்களிலே - கம்பனைப்போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் என பாரதி பாடினார். இதில் கம்பனைப் பற்றி பலரும் எழுதி வந்தனர். வருகின்றனர். தற்போது இணையத்து அண்ணாவாம் ஹரியண்ணா பல்வேறு கம்பரசக் கட்டுரைகள் இட்டுள்ளார். வள்ளுவமும் குறளும் இணையம் முழுவதும் வியாபித்துள்ளன. சிலம்பு பற்றி கொஞ்சமே காணக் கிடைக்கலாம் (நான் அதிகம் தேடி/படித்ததில்லை..!)

சிலப்பதிகாரத்தின் சுவையை இன்னும் கூடுமாறு சில பகுதிகளை எடுத்து எழுதியதில் திரு.இளங்கோவனின் பங்கு முக்கியமானது. இந்தக் கட்டுரைத் தொடர் புத்தகமாக வெளிவந்தால் நன்றாக இருக்கும். (சிலம்பு மடல்கள் தவிர - திரு.இளங்கோவன் மற்ற தலைப்புகளிலும் நிறைய எழுதியிருக்கிறார். தேடினால் கிடைக்கும்!) - Book has been released - thanks to Vasan for the info.

NOTE: அடுத்த பதிவு வயது வந்தவர்களுக்கு மட்டும் ;-)

- அலெக்ஸ் பாண்டியன்
17-ஜூன் 2005

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

நன்றி: தமிழ்.நெட் ; திரு.நாக.இளங்கோவன்
Jan-1999
சிலம்பு மடல்கள்

<முன்னுரை>

தமிழர் திருக்காலத்தில் பண்டை இலக்கியங்கள் இணையத்தில் தவழுவது மகிழ்ச்சிக்குரியது. சிலம்பு ஒரு மாபெரும் காப்பியம். இதில் விளையாட எனக்கு அனுபவமோ, பெரிய அறிவோ கிடையாது. இருப்பினும் ஒரு முயற்சியாக என்னைக் கவர்ந்த இடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அவ்வப்போது ஜெய்பீ யின் கைகளைப் பிடித்து நடந்து வருவேன் :-)

இணையத்தோர் படித்து விட்டுத் தங்கள் கருத்துக்களைக் கூறினால் உதவியாயிருக்கும்; பிழையின் திருத்தவும். தொடர்ச்சியாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எடுத்து எழுதுவதே என் நோக்கம். அதுமட்டுமல்ல தமிழகத் தமிழ்ச் சான்றோர் பேரவையின் அமைப்பாளராகவும், பல்வேறு அரசியல் கலப்பற்ற தமிழ்க் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகவும், பல நூல்கள் எழுதியவரும், நான் மற்றும் என்னைப் போன்றோர் விரும்பிப் படிக்கும்படி சிலப்பதிகாரத்துக்கு எளிமையான, சிறந்த தெளிவுரை இயற்றிய *சிலம்பொலி சு.செல்லப்பனார் கடந்த மாதம் இயற்கை எய்தினார். அவர் தம் சிறப்பை நினைவு கொள்ளும் வகையிலும் இச் சிறு தொடரை எழுதுகிறேன். மூலத்தை எழுதி என் கருத்தை எழுதுகிறேன். என் புரிந்துணர்விற்கு அடிப்படை அவர்தம் தெளிவுரை யாயினும், என் சிறுமதியால் சிக்கலுறும் கருத்துக்களுக்கு சி.சு.செ எந்த வகையிலும் பொறுப்பில்லை.

சிலம்பொலி.சு.செல்லப்பா அவர்களின் புகழ் தமிழ் உள்ள வரை நிலைத்து நிற்கட்டும்.

<முன்னுரை>

மேலும் படிக்க இந்த சுட்டிகளைத் தட்டவும். (Use TSCII fonts - from http://www.tamil.net/tscii/tools.html)

சிலம்பு மடல் - 1
சிலம்பு மடல் - 2
சிலம்பு மடல் - 2.1
சிலம்பு மடல் - 3
சிலம்பு மடல் - 4
சிலம்பு மடல் - 5
சிலம்பு மடல் - 6
சிலம்பு மடல் - 7
சிலம்பு மடல் - 8
சிலம்பு மடல் - 9
சிலம்பு மடல் - 10
சிலம்பு மடல் - 11
இந்திர விழா
சிலம்பு மடல் - 12
சிலம்பு மடல் - 13
சிலம்பு மடல் - 14
சிலம்பு மடல் - 15
சிலம்பு மடல் - 16
சிலம்பு மடல் - 17
சிலம்பு மடல் - 18
சிலம்பு மடல் - 19
சிலம்பு மடல் - 20
சிலம்பு மடல் - 21
சிலம்பு மடல் - 22
சிலம்பு மடல் - 23
சிலம்பு மடல் - 24
சிலம்பு மடல் - 25
சிலம்பு மடல் - 26
சிலம்பு மடல் - 27
சிலம்பு மடல் - 28
சிலம்பு மடல் - 29
சிலம்பு மடல் - 30
சிலம்பு மடல் - 31
சிலம்பு மடல் - 32/33

அன்பின் நண்பர்களே, கடந்த 99ஆம் வருடம் தைமாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாய்த் தொடர்ந்த என் சிலம்பு மடல்கள் நிறைவடைகின்றன. ஆறுமாதத்தில் முடிக்கவேண்டும் என்று எழுத ஆரம்பித்து இடைவெளி விட்டு விட்டு இரண்டாண்டுகள் ஆகியிருக்கின்றன.

இந்த மடல்கள் என் புலமையின் வெளிப்பாடல்ல! கற்றல் என்ற முயற்சியை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்! அவ்வளவே!

இதை எழுத நான் ஆதாரமாகக் கொண்டவை நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாராவர்களின் சிலப்பதிகார மூலமும் உரையும், மற்றும் சிலம்பொலி சு.செல்லப்பனார் அவர்களின் சிலப்பதிகாரத் தெளிவுரையும் ஆகும். என் சிறு மதியால் சிக்கலுற்ற கருத்துக்கள் என்னவையே!

எனக்கு உதவிசெய்த நூற்கள் மேற்சொன்னவை என்றால் எனக்கு ஊக்கம் அளித்தது, ஆரம்பமுதல் இன்று வரை என் மடல்கள் அனைத்தையும் பொறுமையுடன் படித்து என்னை ஊக்கப்படுத்திய இந்த தமிழிணைய மற்றும் தமிழுலக நண்பர்கள்தான்.

நான் எழுத மறந்த போதெல்லாம் என்னைத் தட்டி எழுப்பிவிட்ட நண்பர்களுக்கும் குறிப்பாக சுலைமான் மற்றும் ஆசிப், நான் எப்பொழுது எழுதினாலும் ஏற்றுக்கொண்டு பாராட்டி உற்சாகம் அளித்த என் அன்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும் ஆயிரமாயிரம்.

அன்போடு என் மடல்களையும் ஏற்றுக் கொண்டு முழுதாய் ஒன்றை முடிக்க வைத்த உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை! எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், குறைகள் இருந்தாலும் ஒன்றை செய்து முடிக்கும்போது அதனால் ஏற்படும் மனநிறைவே பெருஞ்சுகமாகும்.

தொடர்ந்து கொண்டிருந்தபோது எப்பொழுது முடியும் என்று இருந்த மனம், முடிந்தவுடன் ஏக்கம் கொள்கிறது எனக்கு! கணித்தமிழ் வளர்ச்சி ஏற்படாமல் இருந்திருந்தால் என்னால் இதை எழுதியிருக்க முடியாது! அவ்வகையில் இந்த இரு இணையங்களுமே என்னை கற்க வைத்தன என்று சொன்னால் இது மிகையாகாது.

கடந்த 99ன் தையிலே, இலக்கிய வளம் இணையத்திலே செழிக்க சங்க இலக்கியங்கள் சில படித்துக் கொண்டிருந்த நான், பெரியவர்கள் யாராவது சங்க இலக்கியங்கள் எழுதினால் நிறைய கற்கலாமே என்று கருதி அறிஞர் செயபாரதி அவர்களை எழுதக் கேட்க அவர், 'உன்னால் முடியுந் தம்பி' என்று சொல்ல அதையே கவிஞர் வ.ஐ.ச.செயபாலன் அவர்களும் சொல்ல இருவருமாய் என்னை எழுதத்தூண்டினார்கள். அதை நினைவுகூரும்போது சுகமான நினைவுகளாகின்றன.

இதை எழுதத் தூண்டுகோலாய் இருந்த அன்பிற்குரிய அறிஞர் மரு.செயபாரதி அவர்களுக்கும், கவிஞர் செயபாலன் அவர்களுக்கும் நன்றிகள் கூறி நிறைவு செய்கிறேன்.

வணக்கம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
16-திசம்பர்-00
---------------------------------

4 comments:

Anonymous said...

சிலம்பு மடல் நூல் வெளியிடப்பட்டது, திருமதி.இளங்கோவன் மற்றும் அவர்களுடைய மகன்,மகள் தயாரிப்பில்.

படித்த நூல்கள்,படிக்கின்ற நூல்கள் பற்றி எழுத விரும்பிய போது இந்நூல் பற்றி எழுத நினைத்தேன். நேரம் கிடைக்கவில்லை.

- வாசன்

G.Ragavan said...

நாக இளங்கோவன்....சிலப்பதிகாரத்தில் ஆவல் கொண்டு நானும் புகுந்து தேனுண்ணத் தொடங்கியிருக்கிறேன். உங்கள் பதிப்பைக் கண்டு மெத்த மகிழ்ச்சி. இவ்வளவு சொல்லியிருக்கிறீர்களே....அடடா!

ஆனால் ஒரு குறை....இவற்றை என்னால் படிக்க முடியவில்லை. எழுத்துரு பிரச்சனை என்று நினைக்கிறேன். என்ன எழுத்துரு பயன்படுத்த வேண்டுமென்று சொல்லுங்களேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Alex Pandian said...

வாசன்,

மீண்டும் நன்றிகள். புத்தகம் வெளியிட்ட செய்தியை நான் படிக்கத் தவறியிருப்பேன்.
இந்த மாதிரி இலக்கிய விஷயங்களையும் நமது வலைப்பதிவர்கள், புதிய இணைய
நண்பர்கள் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்திலேயே பழைய முத்துக்களை எடுத்து
இடுகிறேன்.

தற்போது புத்தகம் எங்கு கிடைக்கும் ? தெரியுமா ?

ராகவன்: இவையெல்லாம் திஸ்கி எழுத்துருக்களில் உள்ளது.
http://www.tamil.net/tscii/tools.html

- அலெக்ஸ்

Anonymous said...

அலேக்ஸ்

புனைப்பெயரில் நீங்கள் யாரென்று தெரியவில்லை. காவேரிக்கரை பேர்வழிகள் எத்தனை பேர் தமிழ் நெட் ல் இருந்தார்கள் என யோசித்துப் பார்த்து தெரிஞ்சுக்கலாம்!

பரவாயில்லை, vaasus அட் ஜீமெய்ல்.காம் ற்கு ஒரு மின்னஞ்சல் போடுங்கள், சிலம்பு நூல் உங்களுக்கு கிடைக்க வழி பண்ண பார்க்கலாம்.

-வாசன்