Monday, June 20, 2005

நன்றி நவிலல்....!

நன்றி நவிலல்....!

தமிழ்மணம் வாசகர்களே..! ஒருங்கிணைப்பாளர்களே ! எனது வலைப்பதிவையும் நட்சத்திரமாய் ஒரு வாரம் மின்ன வைத்த அனைவருக்கும் நன்றி..!

வலைப்பதிவுக்கு வந்து படித்தவர்களுக்கும் பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்தியவர்களுக்கும், வந்து நட்சத்திரக் குறியீட்டை + க்ளிக்கிய அன்பர்களுக்கும், எனது பதிவுகளில் உள்ள சில கருத்துகளைச் சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!

பெரும்பாலும் தமிழ்.நெட் எனப்படும் தமிழ்.இணையத்திலிருந்து கட்டுரைகளை இட்டிருந்தாலும் அக்கட்டுரைகள் மற்றும் இன்ன பிற மடற்குழுக்கள்/இணைய தளங்கள் பற்றி தெரிந்து, தமிழில் இணையத்தில் நடைபெறும் பல்வேறு ஆக்கங்கள் பற்றி பல புதிய வாசகர்கள், தமிழ் இணைய உலாவுவர்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்.நெட் எனும் பொற்காலம்-1ல் பெற்ற நண்பர்கள் போல், தமிழ்மணம் வீசும் பொற்காலம்-2லும் பல புதிய நண்பர்களையும் பெற உதவி செய்த தமிழ்மணம் சேவைக்கும், காசியின் தீர்க்க தரிசனத்திற்கும் காசியின் ஊர்ப் பயண காலங்களில், தளத்தை கவனித்து வரும் செல்வராஜ், மதி அவர்களுக்கும் நன்றிகள்...!

இந்த ஒரு வாரத்தில் இவ்வளவு பதிவுகள் போட முடியுமா என்று யோசித்தபோது மதி கொடுத்த யோசனையும் நன்று.

வழக்கமான பதிவுகள் தொடரும் (ஆனால் பெரும்பாலும் வாரத்திற்கு ஒன்று...;-))

எங்கோ படித்த ரசித்த ஒன்று....
------------------
நாம் இருவர் நமக்கு இருவர்
என்றாள் அவள்
நான் கூறினேன் எனக்கு முன்னமே
இருவர் என்று !

-----------------

- அலெக்ஸ் பாண்டியன்
20-June-2005

4 comments:

துளசி கோபால் said...

அன்புள்ள அலெக்ஸ் பாண்டியன்,

உங்க வாரம் நல்லா இருந்தது!

குமாரபாரதி சுட்டி கொடுத்ததற்கும் அவரோட பதிவைப் போட்டதுக்கும் ரொம்ப நன்றி.

அவர் நியூஸி ன்னதும் தெரிஞ்சுக்கற ஒரு ஆவல்தான்!

வாழ்த்துக்கள்.
நல்லா இருங்க!!!

என்றும் அன்புடன்,
துளசி.

Moorthi said...

தமிழுக்கு உழைத்த மூத்தவர்கள் பலரையும் தொட்டுச் சென்ற உங்களின் பாணி பிடித்து இருந்தது. வாழ்த்துக்கள் அலெக்ஸ்பாண்டி.

காசி (Kasi) said...

என்னைப்போல தமிழ் இணையத்துக்குப் புதியவர்களுக்குப் பயனுள்ள பல தகவல்களுடன் சிறப்பாக இருந்த வாரம். நன்றி அலெக்ஸ்.

அன்புடன்,
-காசி

Alex Pandian said...

துளசி, மூர்த்தி, காசி,

தங்கள் ஊக்கத்திற்கும், கருத்துகளுக்கும் நன்றி..!

குமாரபாரதி இப்போது ஆஸியில் உள்ளார் என பெயரிலி தெரிவித்தார். குமாரபாரதியின் வலைமனையில் உள்ள அவரது மெயில் ஐடியில் தொடர்பு கொண்டு பார்க்கவும்.


- அலெக்ஸ்