Friday, June 17, 2005

A Missed Oppurtunity

A Missed Oppurtunity

எப்போதுமே சினிமா ஆர்வம் அதிகம் கொண்ட நம் தமிழர்களுக்கு மிகவும் அதிக அளவிலும் வேகமாகவும் செய்தி சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் சொன்னால் போதும். பக் என்று பற்றிக் கொள்வார்கள். அது 'என் வழி தனி வழி','நான் ஒரு தடவைசொன்னா...', 'இக்கட சூடு' அல்லது 'தல' போன்ற விஷயங்களாயினும் சரி - உடையில் குறைக்கும் ·பேஷனாக இருந்தாலும் சரி.

இப்படி ஒரு மீடியம் இருக்கையில் (தற்போது தொலைக்காட்சியும்), ஆனால் யாருமே இதன் மூலம் தமிழில் இலவச செயலிகளும், எழுத்துருக்களும் கிடைக்கிறது, இணையத்தில் இருந்து இறக்கிக் கொள்ளலாம், தமிழில் எல்லாமே செய்யலாம் போன்ற செய்திகளை ஒரு திரைப்படத்தில் - விவேக், கவுண்டமணி (சில வருடங்கள் முன் வரை) அல்லது வடிவேலு, பார்த்திபன் அல்லது சூப்பர்ஸ்டாரோ, தமிழ்க் கலைஞர் விஜய்காந்த் போன்றோர் சுமார் 2 நிமிட காட்சி வைத்திருந்தாலே போதும் தமிழர்கள் கணினியில் தமிழ் பழகுவது அதிகரித்திருக்கும்... என் செய்வது..!

தமிழ் என் மூச்சு, தமிழ் என் உயிர், தமிழ் மண்ணுக்கு என் உயிர் என்றெல்லாம் சொல்பவர்கள் கணினியில் தமிழ் பரவ என்ன செய்திருக்கிறார்கள் ?

சுமார் 6 ஆண்டுகள் முன்பு 'காதலர் தினம்' திரைப்படம் வெளிவந்த போது நான் தமிழ்.நெட்டில் பகிர்ந்து கொண்ட ஆதங்கம் இன்றைக்கும் Valid என்ற முறையில் வருத்தம் தான் மிஞ்சுகிறது.

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

அன்பார்ந்த நண்பர்களே,

சமீபத்தில் பார்த்த 'காதலர் தினம்' படத்தில் இணையம் வழியாக இருவர் காதலிக்கும் கதை.

நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் முகமூடி போட்டுத்தான் (நம்ம இணையத்தாருக்கு விளக்கவேண்டுமா என்ன!) அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். Chat மென்பொருள் வாயிலாக உரையாட ஆரம்பிக்கிறார்கள். காட்சியில் கொஞ்சம் விளக்கமாகவே திரையில் எல்லாம் காட்டி ஒருவர் பொய் பெயரில் எப்படி பெயர் கொடுத்து உரையாட ஆரம்பிக்கிறார்கள், எப்படி அது திரையில் தெரிகிறது , இந்தியாவில் இருந்து கொண்டே அமெரிக்கா எனவும் லண்டன் எனவும் ஊர் பெயரை கொடுத்து கலாய்ப்பது(!?) போன்ற விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

எனக்கென்னமோ இந்த விஷயத்தில் நாம் (தமிழிணைய சமுதாயம்) ஒரு மிகப்பெரிய வாய்ப்பை இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அநேகமாக பல பெரிய திரைப்படத்துரை பிரமுகர்களும் நடிகர்களும், நடிகர்களும் வலைத்தளம் வைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய தொண்டு (?) ஆற்றி வருகிறார்கள். ஆனால் ஒருவர் கூட தமிழில் பக்கங்களை அமைத்ததாகத் தெரியவில்லை. (கமல்ஹாசன் தன் வலைப்பக்கத்தில் ஜெயகாந்தனின் கதையை (Gurupeetam) GIF வடிவத்தில் போட்டு வைத்ததைத்தவிர) (This site is not there anymore !)

இப்படத்தின் இயக்குனர் கதிர் (அவரும் கணினி மற்றும் இணைய இணைப்பு வைத்துள்ளார்)மாத்திரம் நம் தமிழ் இணையத்தின் பக்கம் எட்டிப்பார்த்திருந்தால் தமிழிலேயே chat செய்யலாம் போன்ற விபரங்களை தெரிந்துகொண்டு அழகாக தமிழிலேயே காதலர்கள் உரையாடுவதாக திரையில் காட்டியிருந்தால் தமிழர் தம் வீட்டுக் கணினிகளில் தமிழ் பரவலுக்கு வாய்ப்பாக இருந்திருக்கும். பார்க்கலாம். வரப்போகும் படங்களிலாவது யாராவது இவ்வாறெல்லாம் தமிழிலேயே செய்ய முடியும் என காட்டுகிறார்களா என.

தமிழ் சினிமாவுக்கு இருக்கும் reachஐ கணக்கிட்டால் நிச்சயம் இணையத்தில் தமிழ் பற்றிய (என்னவெல்லாம் தமிழிலேயே செய்ய முடியும் etc) விஷயங்கள் இன்னும் பல கோடித்தமிழர்களைப் போய்ச்சேரும் என்பது எ.தா..க.

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

இணையத்தார் என்ன நினைக்கிறீர்கள்..?

- அலெக்ஸ் பாண்டியன்
17-June-2005

3 comments:

Anonymous said...

அய்யா இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் டூமச்சா தெரியல!! இணையத்தில் தமிழ் வளர்கிறதுக்கும் அவுங்கதான் வேணுமா?

ஊமை said...

அலெக்ஸ்,

அதுக்குத்தான் 'வருங்கால முதல்வர்' விஜய்காந்த் அடிக்கல் நாட்டிவிட்டாரே தெரியாதா? ரமணா படத்துல கடத்தப்போகும் அரசு ஊழியர்கள் பெயரையெல்லாம் சக் சக் குன்னு தமிழ்ல அடிச்சு விண்டோஸ் மீடியா ப்ளேயர்ல ஓட விட்டாரே பாக்கல. இது எவ்வளவு பெரிய தமிழ் சேவை.
அட போங்க சார். :-(

Alex Pandian said...

நீங்க வேற - சினிமாக் காரங்க சொன்னா எல்லாத்தையும் பின்பற்றுகிற பெரிய கூட்டம் தமிழர்களில் இருக்கு. பாருங்க - 2 நாளா நல்ல கட்டுரைகள் எடுத்துப் போட்டேன் ஒரு பின்னூட்டமும் வல்ல. இன்னிக்கு சினிமாவ பத்தி எழுதின ஒடனே பின்னூட்டம் வந்துட்டுது பாருங்க :-)

- அலெக்ஸ்