Monday, July 18, 2005

BPO வேன்கள் - வேகமா, வெறியா ?

நீங்கள் பெங்களூரிலோ, சென்னையிலோ, ஹைதராபதிலோ, மும்பை அல்லது குர்காவ்ன் (டில்லி அருகில்) வசித்திருந்தால் தினமும் கால் செண்டர் மற்றும் ITES, BPO துறைக் கம்பெனிகளின் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வேன்/கார் ஆகியவற்றை அடிக்கடி சாலையில் கடந்திருக்கலாம்.

பெரும்பாலும் இவை டாடா சுமோ அல்லது டொயோட்டா க்வாலிஸ், அல்லது டாடா இண்டிகா வகை வண்டிகளே. இவ்வகை வண்டிகளின் பின்னால் சில ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.

" நான் எப்படி வண்டியோட்டுகிறேன்... தொலைபேசி: ........"
" இந்த வண்டி ABC நிறுவனத்தின் தொழிலாளர்களுக்காக மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த வண்டியின் ஓட்டுனர் தாறுமாறாகவோ விதிகளை மீறி ஓட்டினாலோ இந்த
.......... தொலைபேசி எண்ணில் புகார் கூறவும்"

போன்ற வாசகங்கள் காணப்படும்.

நீங்கள் 2-சக்கரமோ, 4-சக்கரமோ ஒட்டுபவராய் இருக்கவேண்டும் என்பதில்லை. சும்மா சாலையோரமாய் நடப்பவர் அல்லது சாலையைக் கடப்பவராக இருந்தாலே போதும். இந்த வண்டி ஓட்டுனர்களின் திறமை (?) புரியும். பெரும்பாலும் சந்திலும் சிந்துபாடும் இந்த ஓட்டுனர்களின் வேகம், மற்றவர்களுக்கு சாலையில் நடப்பதே அச்சத்தைக் கொடுக்கும்.

அதுவும் சமீபகாலங்களில், பெங்களூரில் பலவித விபத்துகளிலும் வரும் முதல் பட்டியல் இந்த வண்டிகளால் தான் News courtesy: The Hindu.

இன்னோர் விஷயமும் புரியவில்லை. எப்போது பார்த்தாலும் இந்த வேன்/கார்களில் ஒரே ஒரு நபர் உட்கார்ந்திருப்பார். அதாவது ஒரு ஆளை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று அலுலவகம் கொண்டுவிட, மீண்டும் வீடு - இதற்கு ஒவ்வோரு ஆளுக்கும் அல்லது சிலருக்காக என வைத்துக்கொண்டால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த முறையில் வண்டிஓட்டமுடியும் ? Economical sense என்பது இந்த வகைச் செலவில் கவனிக்கப்படுவதில்லையோ. கால் செண்டர் பிஸினஸ் வளர, வளர், ஆட்கள் கூடும், ஆட்கள் கூடக் கூட, இவ்வகை வண்டிகளின் எண்ணிக்கை கூடும். ஆனால் எப்படி கட்டுப்படியாகும் ?


சமீப காலமாக கணினித்துறை / பி.பி.ஓ மக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகி வருவது தான் இதன் காரணமா ?


எனக்குப் புரியவில்லை..!

- அலெக்ஸ் பாண்டியன்
18-ஜூலை - 2005

4 comments:

அன்பு said...

புரியாவிட்டாலும் உங்கள் கவலை நியாயமானது. நிறைய விஷயங்கள் பகிர்ந்துள்ளீர்கள், தகவலுக்கு நன்றி.

ச.சங்கர் said...

அலெக்ஸ் பாண்டியன்

சில நாட்களுக்கு முன் BPO Call centre-ல் வேலை பார்க்கும் ஒரு நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன்.
வாசலில் கூட்டிச் செல்ல வண்டி(quavalis) தயாராக.ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுத்த போது சொன்ன சில தகவல்கள்
1.நாய்ப் பொழப்பு சார்..கூட்டிக்கிட்டு வரலையின்னா/லேட்டா கொண்டு விட்டா எங்க சம்பளத்துல புடிச்சுருவாங்க.
2.சின்ன சின்ன பசங்களா வேலைக்கு வர்ராங்க.ஒரு நா வாரேம்பாங்க.போய் நின்னா இல்லை லீவெடுத்திட்டேன் அப்படிம்பாங்க.
3.புதுசா சேந்தவங்க வீட்டத் தேடுரதுக் குள்ள போதும் போதும்முன்னு ஆயிடுது.
4.போன் பண்ணி அட்ரெஸ் கேட்டா -ஒழுங்கா அட்ரெஸ் விசாரிச்சு வர்ரதில்லைன்னு complaint பண்றாங்க.
5.பேசாம வெளியூர் taxi ஓட்டப் போகலாமான்னு பாக்குறேன்.

அவரவர்க்கு அவரவர் கஷ்டங்கள்.உண்மை என்னவோ?

profitability & viability....தனியாள கூட்டிக்கிட்டு வர வண்டி அனுப்புரதுன்னா எவ்வளவு லாபம் பார்க்கிறாங்க call centre-ல

அன்புடன்...ச.சங்கர்

Alex Pandian said...

அன்பு, ச.சங்கர்:

தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

ஓட்டுனர்களின் பக்க நியாயமும் கொஞ்சம் ஏற்கக்கூடியதே. ஆனால் இந்த டிரான்ஸ்போர்ட் கம்பெனி முதலாளிகள் -பிஸினஸ் ஏறுமுகமாக இருப்பதால் பல புது டிரைவர்களையும் சேர்ப்பதால், அவர்கள் வேகத்துடனும், போக்குவரத்து விதிகளை மீறியும் ஓட்டுகின்றனர்.

தவிர, கர்நாடக அரசின் மெத்தனம் இப்போது உலக அளவில் பரவிவிட்டதால், போக்குவரத்து நெரிசலின் காரணத்தை வைத்தே, பல உள்ளூர், வெளிநாட்டு கம்பெனிகள் பெங்களூரிலிருந்து மற்ற ஊர்களுக்கு தங்கள் (புது) வேலைகளை மாற்றி வருகின்றனர்.

- அலெக்ஸ்

வெங்கடேஷ் வரதராஜன் said...

//இன்னோர் விஷயமும் புரியவில்லை. எப்போது பார்த்தாலும் இந்த வேன்/கார்களில் ஒரே ஒரு நபர் உட்கார்ந்திருப்பார். அதாவது ஒரு ஆளை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று அலுலவகம் கொண்டுவிட, மீண்டும் வீடு - இதற்கு ஒவ்வோரு ஆளுக்கும் அல்லது சிலருக்காக என வைத்துக்கொண்டால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த முறையில் வண்டிஓட்டமுடியும் ? Economical sense என்பது இந்த வகைச் செலவில் கவனிக்கப்படுவதில்லையோ. கால் செண்டர் பிஸினஸ் வளர, வளர், ஆட்கள் கூடும், ஆட்கள் கூடக் கூட, இவ்வகை வண்டிகளின் எண்ணிக்கை கூடும். ஆனால் எப்படி கட்டுப்படியாகும் ?//

எது எப்படியோ, காலதாமதத்தைத் தவிர்க்கவே அவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவனிப்பதில்லை. Graveyard shiftல் (அதாவது,இரவு 12:00 மணி, 1 மணி வாக்கில் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் செல்பவர்கள்) பணிசெய்பவர்கள்பாடு படு திண்டாட்டமானது. கடும் உழைப்பிற்குப் பிறகு வண்டிக்காக (அல்லது ஆட்கள் சேரும்வரை) நெடுநேரம் காத்திருப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். எப்படியாவது வீடுபோய் சேர்ந்தால் போது என்றாகிவிடும். அவர்களைக் கருத்தில் கொண்டுதான், ஒரு நபர் ஆனாலும் இருக்கும் வண்டி எதையாவது ஒப்பேத்தி அனுப்பிவைக்கிறார்கள்.

டிரைவர் பிழைப்பும் கடினம்தான். வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே, கையில் வாக்கிடாக்கியை வைத்துக்கொண்டு, instructions ஒண்ணுமாத்தி ஒண்ணுவரும் பாருங்களேன்... படு டென்ஷனான பணிதான் அவருக்கும்.

கணினித்துறை/BPO துறையினர் தாக்குதலுக்குள்ளாவது பற்றி அறிந்திலேன். ஆனால், அறிந்தோ அறியாமலோ, அவர்களால், நிகழும் கலாச்சாரத்தாக்குதல்தான் அதிகம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன் (டிஸ்கோத்தே மற்றும் நட்சத்திர ஹோட்டல் வாரவிருந்துகள்)