Friday, August 19, 2005

விகடன், குமுதம் பத்திரிக்கைகளுக்கு 'A' ?

தொப்புள் படங்களையும், 13 இஞ்ச் ரஸ்புடின்களையும் செய்தியாக வெளியிடும் குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கைகளும் 'ஏ' என்று முத்திரை குத்தப்படக்கூடிய ஒரு நல்ல விஷயம் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

டைம்ஸ் ஆ·ப் இண்டியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் பல நகரங்களிலும் கொடுக்கும் 4 பக்க இணைப்பில் ஆபாசமான புகைப்படங்களையும் செய்திகளையும் வெளியிடுவதாகவும், இதனால் குடும்பத்தில் பெரியவர்கள், சிறுவர்களுக்கு இப்பத்திரிக்கைகள் ஏற்றதல்ல.. அடல்ட் கண்டெண்ட் இருப்பதாக அவர்களே 'ஏ' சர்டிபிகேட் போன்ற ஒரு விதத்தில் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று ஒரு PIL (Public Interest Litigation) போடப்பட்டு சுப்ரீம் கோர்டின் 3 பெஞ்ச் நீதிபதிகளும் அதை ஒரு வழக்காக எடுத்துக் கொண்டுள்ளனர். http://www.deccanherald.com/deccanherald/aug192005/index2030402005818.asp

TOI, HT போன்றே தமிழிலும் விகடனும் (நம்.1 அல்லவா), குமுதமும் குடும்பத்தினர் படிக்கும் பத்திரிக்கை அல்ல, இளைஞர்கள், வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க என முத்திரை குத்த வேண்டி வந்தால் விகடன் - இணை, துணை, முதல், பெரிய, பொறுப்பாசிரியர்கள் என்ன கட்டுரை எழுதுவார்கள் ? நமீதா படங்கள் இல்லாமல் பத்திரிக்கை விற்குமா ?

அப்படியாவது விகடன், குமுதம் கொஞ்சம் மாறி - சத்தான நல்ல விஷயங்களையும், கதை கட்டுரைகளையும் கொடுக்க வேண்டி வந்தால் நல்லதே. மற்றபடி TOI, HT எல்லாம் தலைப்பைப் பார்த்துவிட்டு தூர ஒதுக்க வேண்டிய பத்திரிக்கைகளே. ஆனானப்பட்ட 'த ஹிண்டு'வே இப்போதெல்லாம் பெங்களூர் இணைப்பில் இம்மாதிரி விஷயம் தொட்ட செய்திகளையும் வெளியிடுகிறது.


http://www.hindu.com/mp/2005/07/25/stories/2005072502180400.htm
Photo courtesy: The Hindu


http://www.hindu.com/mp/2005/07/26/stories/2005072601180100.htm


வலைப்பதிவர்கள் எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன :-)

- அலெக்ஸ் பாண்டியன்
19-ஆகஸ்ட்-2005

10 comments:

சுரேஷ் கண்ணன் said...

ஒருபுறம் 'ச்சீ' என்று பாய்ஸ் படத்தை திட்டிக் கொண்டே மறுபுறம் நமீதாவின் குறிப்பிட்ட இட ஊட்டச்சத்தை பற்றி புகைப்படங்களுடன் வெளியிடும் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் தங்கள் பாசாங்குகளை விட்டொழிக்க வேண்டும்.

PositiveRAMA said...

உங்கள் கேள்வி நியாயம்தான்

aathirai said...

unmaidhaan. aluvalagathil thamiz paththrikai thalangal pakkam povadhe illai. indha thalangaluku pogum munn oru murai sutri mutri paarthu vittu dhan ingu poga mudiyum. kalasarathil sirandha indhiya pathrikaikal than ippadi irukindrana.

ரவிசங்கர் said...

சுரேஷ் கண்ணன் சரியாக சொன்னார். அண்மைக்காலங்களில் பயந்து பயந்து தான் விகடனை அலுவலகத்திலோ வீட்டிலோ திறக்க முடிகிறது. ஜூ. வி, ஆ.வி, குமுதம், ரிப்போர்ட்டர், நக்கீரன், வாரமலர், ராணி ஆகியவற்றுக்கு ஏ முத்திரை அவசியம். நான் சின்னப்பிள்ளையாக இருந்த போதே இவற்றில் ஒன்றையும் கண்ணில் காட்டாமல் வளர்த்தார் என் அப்பா. ஆனால், எல்லா பெற்றோர்களிடமும் இந்த விழிப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. எங்கள் ஊர் கோயில் திருவிழா காலங்களில் ஏ முத்திரை படங்களை கூட திரையில் ஓட்டுவார்கள் (அந்தக்காலப்படங்களில் கட்டாயம் ஒரு கற்பழிப்பு காட்சி வேறு இருக்கும் !). தலையில் அடித்துக்கொள்வது தவிர வேறு ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. இப்பொழுது வீட்டுக்கு வீடு சி.டி பிளேயர் வந்த பின் தாத்தா, பாட்டி முதற்கொண்டு குழந்தைகள் வரை அனைவரும் ஒன்றாக உட்காரந்து ஏ முத்திரை படம் பாரப்பதும் அதில் வரும் இரட்டை அர்த்தப்பாடல்களை பிசகாமல் பாடும் குழந்தைகளை உச்சி முகர்ந்து பாராட்டுதலுமாக..ஒரு கலாச்சார சீரழிவுக்கு மௌன சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்

ச.சங்கர் said...

////ரஸ்புடின்களையும் செய்தியாக வெளியிடும் குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கைகளும் 'ஏ' என்று முத்திரை குத்தப்படக்கூடிய ////

அப்படிப் போட்டு தாக்குங்க அலெக்ஸ்
அன்புடன்...ச.சங்கர்

சங்கரய்யா said...

இந்த பத்திரிகைகளில் புகைப்படங்கள் மட்டுமின்றி, கதைகளுக்கான ஓவியங்களும் ஆபாசமாகவே வரையப்படுகின்றன. கண்டிக்கப்பட வேண்டிய செயலே.

Alex Pandian said...

சுரேஷ் கண்ணன், பாஸிடிவ் ராமா, ஆதிரை, ரவிசங்கர், ச.சங்கர், சங்கரைய்யா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குடும்பத்தின் அனைவரும் படித்து மகிழக்கூடிய பத்திரிக்கையாக இருந்த ஆனந்த விகடன், தற்போது தொப்புள் படங்களை நம்பியே நம்.1 ஆகியிருக்கிறது என்பது வேதனை.

- அலெக்ஸ்

அரசு said...

கொஞ்சம் இங்க வாங்க
http://arrasu.blogspot.com/

ரங்கா - Ranga said...

அலெக்ஸ், தமிழ் வார, மாதப் பத்திரிகைகள் படித்து வெகு காலமாகி விட்டது. நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை அவைகளைப் படிப்பதில் ஒரு விருப்பமும் வேகமும் இருந்தது; இப்போது இல்லை. நிறுத்தியதால் எதையும் இழந்த மாதிரி தெரியவில்லை. கூடியமட்டும் படங்கள் இல்லாத பழம் புத்தகங்களோடு நின்றாகிவிட்டது. முன்பு எழுதியது போல:

நடமாடும் நூலகம் ‘பழயது ஒன்று
புதியது ஒன்று’ வாங்கிப் படித்தது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

வலைத் தளத்திலிருந்து இறக்கி
வெளியில் போகையில் கேட்டுமுடிப்பது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

Alex Pandian said...

ரங்கா,

தற்போதைய விகடனையும், குமுதத்தையும் (பிரிண்ட் எடிஷனில்) பார்த்தால், பல முன்னாள் வாசகர்களுக்கு நிச்சயம் ஒரு சோர்வும் வெறுப்பும் வரும். குமுதமாவது
கொஞ்சம் பரவாயில்லை எனலாம். ஆனால் விகடன் தன்னுடைய பாட்டையிலிருந்து விலகி எல்லாமே சினிமா, சினிமாக்காரர்கள் செய்திகள், கட்டுரைகள், படங்கள் என முழுபக்க சினி இதழாகவும், அதிலும் வெளியிடும் படங்கள் எல்லாம் 'ஏ' ரேட்டிங்கில் உள்ளவையாக இருக்கிறது. ரெட்டைவால் ரெங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, வாணியின் பட ஜோக்குகள், சங்கீத செய்திகள், நல்ல தொடர்கதைகள், சிறுகதைகள் என வந்த விகடன் இன்று இந்த நிலைக்கு இறங்கியிருப்பது வருத்தம்.

- அலெக்ஸ்