Monday, September 12, 2005

சின்ன மாமியே.. உன் சின்ன மகளெங்கே..?

எழுபதுகளின் கடைசியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், இலங்கை வானொலியில் ஒலிபரப்பான பிரபலமான பல நிகழ்ச்சிகள் உண்டு. இன்றைய தமிழ் தொலைக்காட்சி மற்றும் பண்பலை வானொலிகளுக்கு இலங்கை தமிழ் வானொலியே முன்னோடி என்றால் மிகையில்லை.

ஒலிச்சித்திரம் (அரங்கேற்றம், அந்தமான் காதலி, லோரி டிரைவர் (ரோ)ஜாக்கண்ணு, கவரிமான், பைலட் பிரேம்நாத், கௌரவம் எல்லாம் ஞாபகம் வருகிறதா ?), இசை விருந்து, பொங்கும் பூபுனல், நகைச்சுவை விருந்து (மதியம் 1.30/1.45க்கு - பெரும்பாலும் கே.ஏ.தங்கவேலு -கல்யாணப்பரிசு, அறிவாளி, ஹிட்லர் உமாநாத் (இந்தப் பக்கம் சைபர் கிளாஸுனு கட்டியிருப்பாங்க..!), இந்தியன் வங்கி(பின்னர் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி) பாடல் வரிசை, பாட்டுக்குப் பாட்டு.. பேட்டிகள் என கன ஜோராய் இருக்கும்.

இவை தவிர பொப் இசைப் பாடல்களும் ஒலிபரப்பாகும். இதில் மிகப் பிரபலமான ஒரு பாடல் பற்றி சுமார் 6- 7 வருடங்களுக்கு முன்னர் தமிழ்.நெட்டில் உரையாடியபோது பெயரிலி எடுத்தளித்த ' சின்ன மாமியே' பாடலின் வரிவடிவம் இதோ..!
நன்றி கனா.ரனா.

>சின்ன மாமியே.. உன் சின்ன மகளெங்கே..?
> பள்ளிக்குச் சென்றாளா..? படிக்கச் சென்றாளா..?
>
>வாடா மருமகா.. என் அளகு மன்மதா..
> பள்ளிக்குத் தான் சென்றாள்.. படிக்கத்தான் சென்றாள்..
> ...
> ...
> ...
>(மீதி வரிகளை இந்தப் பாடல் தெரிந்த நண்பர்கள் கூறவும்..)
>
>நான் மிகவும் ரசித்த பாடல் இது.

- அலெக்ஸ் பாண்டியன்
12-Sep-2005

கனா.ரனா எழுதியது .:::::::::::::::::::::::::::::::

எனக்கு சரியாகத் தெரியாது; என் வீட்டில் இது கேட்பதும் ஆங்கிலப்படம் பார்ப்பதும் சீட்டுக்கட்டு எனப்படும் cards விளையாடுவதும் இன்னும் ஒரு சரியான கன்னிக்கு வாழ்க்கைப்படாத ஆண்கன்னன் (ஒத்த ஓட்டைக்குடையே இல்லை அதற்குள்ளே கொடை) செய்கிறவேலை இல்லை என்று தடை இருந்ததால், விளையும் பயிர் முளையிலெயே சரியாக கல்வி நீர் பாய்ச்சப்பட்டாமல், விளைச்சல் சரியில்லை அதனால், முழுமையாக சொற்கள் இருக்காமல் மன வருத்தப்படுவதில்லை. (அந்த அளவுக்கு(?)=இவை கருத்தான பாடல்கள் அல்ல; ஆனால், துள்ளல் துள்ளல்தான்)

சின்ன மாமியே.. உன் சின்ன மகளெங்கே..?
பள்ளிக்குச் சென்றாளோ..? படிக்கச் சென்றாளோ..?

வாடா மருமகா.. என் அழகு மன்மதா..
பள்ளிக்குத் தான் சென்றாள்.. படிக்கத்தான் சென்றாள்..

ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை அங்கே படிக்கவிட்டுக் கெடாதே
ஊர் சுத்தும் பொடியளெல்லாம் கன்னியரைக் கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ?

ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
ஒழுக்கமில்லாக் கன்னியென்றா நினைத்து விட்டாய் என் மகளை
இடுப்பொடியத் தந்திடுவேனே நான்

ஏணனை மாமி மேலே மேலே துள்ளூறியே
பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே
தேனெணை மாமி அவளெனக்கு
தெவிட்டாத சுகமெநக்கு;
பாரணை மாமி கட்டுகிறேன் தாலியே. (சின்ன மாமியே)

================================================================
நன்றி கனா.ரனா.

More writeup on this song at:
http://www.dhool.com/sotd2/491.html

6 comments:

தாணு said...

பாடல் வரிகள் எண்பதுக்கே அழைத்துச் சென்றுவிட்டது. பாடியிருப்பது சிலோன் மனோகர்தானே?

Alex Pandian said...

ஆமாங்க, சிலோன் மனோகர் பாடியதே. அவரின் 'சுறாங்கனி..... சுறாங்கனி... சுறாங்கனிக்க மாலு கனா வா..' ஞாபகம் வருதா ?

தாணு said...

சுரங்கனி இல்லாத அன்றைய டூர்களும் இல்லை, இன்றைய டூரும் இல்லை. பொடிசுங்க `கல்யாணந்தான் கட்டிகிட்டு' பாடறப்போ நமக்குத் தெரிஞ்சது இன்றும் சுறாங்கனி தான்!

பழூர் கார்த்தி said...

எனக்கென்னமோ இந்த பாட்டெல்லாம் கேட்டதாகவே ஞாபகமில்லை... எனக்கு தெரிந்ததெல்லாம் 'அண்டங்காக்கா கொண்டக்காரி'தான்....

ரங்கா - Ranga said...

பழைய நினைவுகளை கிளப்பி விட்டாயிற்று. ஞாயிறு வரும் இசைச் செல்வம் (அப்துல் ஹமீதின் 'மூவாயிரம் வாக்குகள் பெற்று முதல் இடத்திலேயே இருக்கும் பாடல்'), மற்றும் காலையில் பள்ளிக்கு நடந்து செல்லும் போது கேட்கும் 'பிறந்த நாள், இன்று பிறந்த நாள்' (தொடர்ந்து வரும் 'வாழ்த்து தெரிவிக்கும், அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா), இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றன. பின்பு, ரூபவாகினி - அதில் வரும் தொடர்கள் - முக்கியமாக ஸ்டார் ட்ரெக்! நினைக்க நினைக்க சந்தோஷமும், வருத்தமும் கலந்து வருகிறது.

Kanags said...

'சின்ன மாமியே' பாடலைப் பாடியவர் அன்று "பொப்பிசை பிதா" என அழைக்கப்பட்ட நித்தி கனகரத்தினம்.