Monday, October 24, 2005

நீரில் மிதக்கும் பெங்களூர்..!

தேவகவுடா, நாராயணமூர்த்தி, பெங்களூர், உள்-கட்டமைப்பு, ஏர்போர்ட் என சென்றவாரம் முழுவதும் பரபரப்பாய் இருந்த பெங்களூர் நகரம் மற்றும் மக்களுக்கு கேதரீனா, வில்மா, காஷ்மீர் பூகம்பம், சுநாமி எல்லாம் எங்கோ நடந்தது/நடக்கிறது - நாம் பொருளதவியும், உடலுதவியும் செய்தால் போதும் என்றும் நம்மை இதெல்லாம் பாதிக்காது என இருந்த மக்களுக்கு இயற்கையின் சீற்றம் நேற்றும் இன்றும் புரிந்திருக்கும்.
(நன்றி: பத்ரியின் தேவகவுடா, நாராயணமூர்த்தி பதிவு)Courtesy: Deccan Herald


பொதுவாகவே இந்த வருடம் மழை கர்நாடகத்தில் அதிகம். அதுவும் பெங்களூரில் மிக அதிகம். சென்ற சில மாதங்களில் பெய்த மழையின் சீற்றத்தில் எந்த பாடமும் கற்காத அல்லது கற்றும் எதுவும் செய்யாத மெத்தனமான அரசு இயந்திரங்கள் இந்த முறை மிகவும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.


Courtesy: The Hindu

சனிக்கிழமை இரவும் ஞாயிறு இரவும் பெய்த கனமழையால் பல ஏரிகள் உடைப்பெடுத்து, பெங்களூரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இத்தனைக்கும் கடல்மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்திலும், இடங்கள் மேடு பள்ளமாக இருந்தும். காரணம் ஏரிகளையெல்லாம் ப்ளாட் போட்டு - கட்டங்கள் எழுப்பியது, கழிவுநீர் கால்வாய்கள் எல்லாம் அடைக்கும் அளவிற்கு ப்ளாஸ்டிக் மற்றும் குப்பைகளைக் கொட்டியது, அவரவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடங்களை எழுப்பி, நீர் செல்லும் வழிகளை மாற்றியமைத்தது என சொல்லிக் கொண்டே போகலாம்.

என்ன சொல்லி என்ன.. துளிக்கூட மக்களின் துயருக்கு செயலில் முன்னேற்றம் காட்டாத அரசை நம்பி என்ன பயன் ?

- அலெக்ஸ்
24-அக்டோபர்-2005

More info/Pictures: http://thatskannada.indiainfo.com/news/2005/10/23/rain_effect.html

http://timesofindia.indiatimes.com/articleshow/1272450.cms
A scene near one of the top IT company building (Bosch, Sasken, Cap Gemini) on
the Hosur Road. In another IT company (Wipro) building - water has entered upto
first floor destroying many of the equipments.

19 comments:

இளவஞ்சி said...

நீங்க கேக்கறது சரி! ஆனா அரசை மட்டும் சொல்லி என்ன பயன் அலெக்ஸ்? மக்கள் நாமளும் அப்படிதானே இருக்கோம்? மூலைமுக்கை கூட விடாம இப்படி கட்டடமா கட்டுனா அப்பறம் மழைநீர் எங்க போகும்?

அதுசரி.. Officeக்கு எப்படி வந்து சேர்ந்திங்க?? Silk bord Bridge மெதக்குதுங்க!.. பாதிப்பேரு இன்னும் ஆபீஸ் வந்து சேரலை! இப்போதான் சென்னைல இருக்கறமாதிரி இருக்குது! :)

Thangamani said...

pathivuvin moolamee Bangalorein nilamai aRiwtheen. Nandri (!?)

Alex Pandian said...

இளவஞ்சி,

ஆமாம். ரியல் எஸ்டேட் ஆட்களின், மக்களின் செயலும் இந்த நிலைமைக்குக் காரணம்.

ஆமாங்க ஓசூர் ரோடுல இருக்கற பல ஆபிசுக்கு இன்னைக்கு லீவு விட்டுட்டாங்களாம்.

ஆபீசுக்குள்ளலாம் தண்ணி புகுந்துடுச்சாம்.

டிராபிக் 3- 4 மணிநேரமா அப்படியே நிக்குது.

நாம புகுந்து புறப்பட்டு ஒரு வழியா வந்து சேந்தோம். வர வழியெல்லாம் ரோடுல தண்ணி ஆறு மாதிரி ஓடுது.

ஈஸ்வரோ ரக்ஷது !

- அலெக்ஸ்

Thangamani said...

பெங்களூர் மக்களுக்கு, சீரமைப்புக்கு தமிழ்நாடு அரசு ஏதாவது உதவவேண்டும். தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற நகர் என்ற வகையில் த/அக்கு அந்த தார்மீக கடமை உண்டு. இது நிலவும் ஒரு பகையுணர்ச்சியை குறைக்கவும் வகை செய்யும்.

காசி (Kasi) said...

பெங்களூரா இப்படி? எதிர்பார்க்கவேயில்லை. ஹும்:(

ravi srinivas said...

Forget about B'lore , almost all cities in india are like that.if it rains non stop for 3 or 4 days
the infrastructure collapses.there
is no long term planning or policy.
the real estate and builders lobbies are too powerful to subvert any meaningful plan to
regulate buildings and townships.
i know that in some cities if it rains for one hour the traffic
gets affected.in short short term gain for some long term pain for many is the result.

செல்வராஜ் (R.Selvaraj) said...

நேத்து வெளியே சுத்தப் போகாம சமத்தா வீட்டுக்குள்ளேயே இருந்துட்டோம். தினமும் சாங்கி டேங்க் ஏரியளவைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் மேலேறி விளிம்பருகில் வந்துவிட்டது. இந்தப் பகுதியில் கூட பம்பு வைத்துத் தண்ணீரை வெளியே தள்ளிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பெங்களூரின் நிலை கொஞ்சம் பரிதாபமாய்த் தான் இருக்கிறது.

G.Ragavan said...

அட அதையேன் கேக்குறீங்க.....இத்தன வருசமா இருக்கமே சஜ்ஜன்ராவ் சர்க்கிளில் இருக்குற முருகன் கோயிலுக்குப் போலான்னு ஜெயநகருல இருக்க ஒரு நண்பனோட சேந்து முடிவு. அந்த நண்பன் பெங்களூரிலேயே பொறந்து வளந்த கன்னட நண்பன்.

ஞாயித்துக் கெழம காலைல வேகவேகமா எந்திரிச்சி பைக்க எடுத்துக்கிட்டு திப்பசந்திரா...இந்திரா நகருன்னு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டுல நொழைஞ்சா ஒரே வெள்ளம். எல்லா வண்டியும் நீந்தித்தான் போகுது. ஒன்வேல போன கொஞ்சம் தூரந்தான் வெள்ளம். விடு வண்டிய.....அப்படியே மிதந்து போய் ஒரு வழியா குறுக்குச் சந்தப் பிடிச்சு ஏர்போர்ட் ரோட்டுக்குப் போயாச்சு.

நல்லவேளையா திரும்ப வரைல மழை இல்லை.

இந்த ஐஸ்கிரீம் ஆச வேற சாந்தரம் வந்தது. நண்பர்கள் நாலு பேரா ஏர்போர்ட் ரோடுல இருக்குற கார்னர் ஹவுசுக்குப் போனோம். அவ்வளவுதான். வருணபகவானுக்கு நீரிழிவு நோய் வந்த மாதிரி ஒரே மழை. ஒம்பதேகாலுக்கு மேல தூறல்லயே வீட்டுக்கு வந்துட்டோம்.

காலைல ஆபீசுக்கு வந்து பாத்தா ஒருத்தரையும் காணோம். ஜெயநகர், ஜேபீ நகர், ஹோசூர் ரோடெல்லேம் மெதக்குதுன்னு சொன்னாங்க. நல்ல வேள நம்ம வீடு மேடான எடத்துல இருக்குன்னு ஒரு அல்ப்ப சந்தோஷம் அப்ப.

G.Ragavan said...

// மக்கள் நாமளும் அப்படிதானே இருக்கோம்? மூலைமுக்கை கூட விடாம இப்படி கட்டடமா கட்டுனா அப்பறம் மழைநீர் எங்க போகும்? //

கட்டிடம் கட்டலைன்னா...எங்க இருக்குறது இளவஞ்சி. மக்கள் வசிக்கவும் இடம் வேணுமுல்ல. ஆனாலும் ஊருக்கு வெளியேயும் இனிமே மக்கள் வீடுகளக் கெட்டனும். அரசாங்கம் அதுக்கும் ஏதாவது செய்யனும். ஏரி கொளத்துல வீடு கட்ட விடக்கூடாது.

Ramya Nageswaran said...

பெங்களூரில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் நகர மேம்பாட்டிற்காக அரசோடு சேர்ந்து திட்டங்கள் செயல்படுத்தறாங்கன்னு படிச்சு சந்தோஷப்பட்டிருக்கேன். இந்தப் படங்களை பார்த்தா வருத்தமா இருக்கே. அப்ப நம்ம நாட்டிலே எது தான் reliable city?

donotspam said...

I heard chandigarh was a well planned city.

அடுத்ததா கோயம்புத்தூர் மேல நம்பிக்க வைச்சிருந்தேன். ஆனா அங்கயும் தண்ணீர் பஞ்சம், மீட்டர் ஹீட்டர், ரியல் எஸ்டேட் என பிரச்சனை இருக்காமே?

தாணு said...

இந்த பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து ஈரோடு பாதிக்கப்படும் அபாயம் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. ஆறு போல் செல்லும்போது அழகு, வெள்ளமாகப் பொங்கும் போது வேதனை.

Ramya Nageswaran said...

சுனாமி, பூகம்பம், ஹரிகேன், பெருமழை...இந்த வருடம் பட்ட பாடு போதாதா?

Alex Pandian said...

தங்கமணி, காசி, ரவி ஸ்ரினீவாஸ், செல்வராஜ், ராகவன், ரம்யா, ஈஸ்வர், தாணு,

வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி.

இன்றைய நிலைமை பரவாயில்லை. நீர் வடிந்து, போக்குவரத்து மேம்பட்டுள்ளது. ஆனால் நீர் புகுந்ததால் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏற்பட்ட அழிவுகள் சரி செய்ய இன்னும் கொஞ்ச நாள் ஆகும். வானிலை நிலைய அறிவிப்புப் படி, மழை நவம்பர் முதல் வாரம் வரை நீடிக்கும் என தெரிகிறது. பார்க்கலாம்.

>>>
ரம்யா: பெங்களூரில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் நகர மேம்பாட்டிற்காக அரசோடு சேர்ந்து திட்டங்கள் செயல்படுத்தறாங்கன்னு படிச்சு சந்தோஷப்பட்டிருக்கேன்.
>>>

இது முந்தைய அரசு இருந்தபோது இருந்தது. தேவகவுடா கட்சியுடன் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பிறகு காங்கிரஸ் பெரியதலைகள் இந்த விஷயத்தில் தேவகவுடா சொல்படிதான் நடக்கவேண்டியுள்ளது. அதன் ஒரு விளைவுதான் நாராயணமூர்த்தியின், ஏர்போர்ட் கம்பெனியின் சேர்மன் பதவி ராஜினாமா நிகழ்ச்சி. பத்ரி பதிவில் விபரமாக எழுதியுள்ளார்.

>>>
தாணு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து ஈரோடு பாதிக்கப்படும் அபாயம் பற்றிய செய்திகள்
>>>

ஆமாம் - சன் செய்திகள் மற்றும் தமிழ் செய்தித்தாள்கள் செய்திப்படி காவிரிக்கரையோரம் எல்லாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டுரிலும், ஹொகனெக்கல்லிலும், ஈரோடிலும், திருச்சியிலும் காவிரி நீரின் வீச்சைப் பார்த்தால் பயமாகவே உள்ளது.

பாலம் மற்றும் ரயில் பாதை பாதிப்பால், சென்னை பெங்களூர் அனைத்து ரயில்களும் இன்றைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு பாலாற்றில்
வெள்ளம்.

இயற்கைக்கு கோபம் - மனிதர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்தும் அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.


- அலெக்ஸ்

dondu(#4800161) said...

"ஆறு போல் செல்லும்போது அழகு, வெள்ளமாகப் பொங்கும் போது வேதனை"

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் வாடும்.
(இது ஆண்டவன் கட்டளை)

அன்புடன்,
டோண்டு ராகவன்

G.Ragavan said...

இன்றைக்குத் தொடர் மழை........நிற்காத மழை.

அலுவலகத்தில் திடீர் அறிவிப்பு செய்தார்கள். பெங்களூர் முழுவதும் பேக்குவரத்து ஸ்தம்பத்ததால் விரைவிலேயே அலுவகலப் பேருந்துகள் கிளம்பின. என்னைப் போன்ற பைக்கோட்டிகள் நிலை மோசம். அலுவலகத்தில் இன்னும் காத்திருக்கிறேன். ஒன்பது மணிக்காவது போக்குவரத்து நெரிசல் குறையும் என்று நம்பிக் கொண்டு................

பல நண்பர்கள் நெரிசலிலும் மழையிலும் சிக்கிக் கொண்ட செய்திகள் வருகின்றன.

joker said...

அன்றைக்கு தமிழ் நாடு தண்ணிக்கு தவிச்சுது. இன்று தமிழ் நாடும் தண்ணீல தவிக்குது, கர்நாடகமும் தண்ணீல தவிக்குது. என்னத்த சொல்ல?.

Alex Pandian said...

நன்றி ராகவன், ஜோகர்,

இன்னமும் பெங்களூரில் மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் 20 செ.மீ
மழையாம். பெரும்பாலான ரயில்கள் ரத்து. நேற்று IT.IN தேவகவுடா பேச்சைக் கேட்டீர்களா (உதயா செய்திகளில் ஒளிபரப்பானது) செம வாங்கு வாங்கிவிட்டார். இன்னமும் பல வெளிநாட்டு இன்வெஸ்டர்கள் மழைக்குக் கூட பெங்களூரில் ஒதுங்க யோசிப்பார்கள். அந்த அளவு காரமான பேச்சு. அந்த மேடையில் அரசியல் தேவையில்லை ஆனால் பேசி கெடுத்துக் கொண்டார். (ஆனால் ஆங்கிலம் நன்றாகவே சரளமாகவே பேசினார்)

- அலெக்ஸ்

G.Ragavan said...

உண்மைதான் அலெக்ஸ். அந்தப் பேச்சைக் கேட்கையில் நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி நினைவிற்கு வந்தது. இந்த நுணல் கெடுவது எப்பொழுது என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். கன்னட மக்களே தேவேகவுடாவைக் கவுடா என்று பேசுகின்றார்கள். அடுத்த தேர்தலில் பெங்களூரில் தேவகவுடா தலையில் துண்டைப் போட வேண்டியதுதான். ஆனால் அவரது பலம் சிற்றூர்களில் என்பதால் இப்படியெல்லாம் பெனாத்த அவர் தயங்க மாட்டார்.