Monday, October 03, 2005

அன்னியர் Vs மண்ணின் மைந்தர் - 1

என்ன இது அந்நியன் படம் ரிலீஸாகி 100 நாட்களுக்கு அப்புறமும் வலைப்பதிவுகளில் அந்நியன் சமாச்சாரமா என அடுத்த பதிவுக்குத் தாண்டாதீர்கள். இது வேறு அந்நியர் :-)

கடந்த சில மாதங்களாக பெங்களூரில் (கர்நாடகத்தில்) உள்ள கணினி தொழில்நுட்பக் கம்பெனிகள், நவம்பரில் நடைபெறப்போகும் IT.in (முன்பு IT.COM)ல் பங்கு பெறமாட்டோம் என அறிவித்தனர். (தற்போது கொஞ்சம் விட்டுக்கொடுத்துள்ளனர்.)அதற்குக் காரணம் பெங்களூரின் மோசமான சாலை மற்றும் இன்னபிற உள்கட்டுமான (Infrastructure) நிலை தான்.

மழை பெய்தால் நகரமே தத்தளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான கணினித்துறை மக்கள் செல்லும் ITPL, Electronics City போன்ற இடங்களுக்கான வழிகளில் அலுவலகம் செல்ல/வீடு திரும்ப பல மணிநேரங்கள். இந்த நிலையில் தேவ கவுடாவின் நித்திய கண்டம் பூர்ணாயுசு போன்ற மிரட்டல்களில் தரம் சிங் அரசு, எந்த திட்டத்தையும் முனைப்புடன் செயல்படுத்துவதில்லை எனவும், பல மேம்பாலங்கள் 3-4 வருடங்களாக கட்டிமுடிக்கப்படாமலேயே உள்ளது எனவும் கணினித்துறை கம்பெனிகளின் தலைவர்கள் போராட்டத்தை அறிவிக்க, அதற்கு அரசு அமைச்சர்களும் தங்கள் பங்குக்கு பிரச்னையை திசை திருப்ப, "இவ்வளவு கேட்கிறீர்களே.. நீங்கள் என்ன செய்தீர்கள் கர்நாடகத்திற்கு, கர்நாடக மக்களுக்கு ? அங்கு (வட கர்நாடகம்) வெள்ளத்தில் மக்கள் தவிக்கும்போது உதவி ஏதேனும் செய்தீர்களா (சுனாமி சமயத்தில் செய்த மாதிரி) ? அல்லது உங்கள் கம்பெனிகளில் உள்ளூர்காரர்களுக்கு (கன்னடர்களுக்கு) வேலைதான் கொடுக்கிறீர்களா ? பெரு வாரியாக எல்லாரும் உங்கள் கம்பெனிகளில் வெளிமாநிலத்தவர்கள் ? ஏன் கொடுக்க வேண்டும் உங்களுக்கு வசதி ?" என கட்டபொம்மன் பாணியில் அறிக்கைகள்.

தற்போது மண்ணின் மைந்தர்களுக்கு இந்த கணினித்துறை கம்பெனிகள் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என போராட்டம் தொடங்கியுள்ளது.


Kannada activists protesting in front of the IBM Company regarding apathy toward Kannadigas in Bangalore on Saturday.
Photo Courtesy: The New Indian Express


இன்·போஸிஸ், IBM போன்ற கம்பெனிகள் முன்பு 'கன்னடா ரக்ஷண வேதிகே' என்னும் கன்னட தீவிரவாத அமைப்பு தர்ணா தொடங்கியுள்ளது.

உள்ளூர் ஆங்கில தினசரியான டெக்கான் ஹெரால்டில் தலையங்கங்களும், ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியிலும், இதைப் பற்றிய தீவிர விவாதங்கள்.

http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1548


ஹொகனேக்கல், காவிரி பிரச்னைகள் போதாதென்று, பிற மாநிலத்தவருக்கு எதிராக துவேஷம் வளர்க்கும் விதமாக Times of India பத்திரிக்கை சில செய்திகளையும் வெளியிட்டு வருகிறது. TOIயின் வாசகர்கள் என்றால் அது பெரும்பாலும் தென்னிந்தியர் அல்லாதோர் தான். அதனால் 2001 வரைக்குமான வெளிமாநில மக்களின் குடியேற்றம் பற்றி கட்டம் கட்டி முதல் பக்கத்தில் வெளியிடும் TOI, வெகு சாமர்த்தியமாக 1991 முதல் 2001 வரை, 1991க்கு முன்பு என எண்கள் வெளியிட்டு, தமிழ்நாடு,ஆந்திரம், கேரளம் இங்கிருந்துதான் அதிக மக்கள் வந்துள்ளனர் என செய்தியை வெளியிடுகிறது.

ஆனால் 2001 முதல் 2005 வரையிலான குடியேறிகளின் எண்கள் கிடைத்தால் அதில் முதலிடம் நிச்சயம் தென்னிந்திய மாநிலங்களாக இருக்காது. அந்த அளவிற்கு வட இந்திய மக்கள் கடந்த 5 வருடங்களில் பெங்களூரில் குவிந்துள்ளனர். இதன் சரியான எண்ணிக்கை கிடைத்தால் நிச்சயம் பகிர்கிறேன்.

TOIயின் இந்த திரித்தல்களுக்கு சில/பல கன்னட அமைப்புகள் வேண்டுமானால் ஏற்று, கலாட்டா செய்யலாமே தவிர, பெரும்பாலான கன்னட மக்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளில் குடியேறிகள் வந்தது தமிழகத்திலிருந்தா, வடஇந்தியாவிலிருந்தா என நன்றாகத் தெரியும். இந்திக்காரர்களின் வரவால் பெங்களூரின்/கர்நாடக கலாச்சார அமைப்பே மாறியுள்ளது என்பது பல தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். இதில் தமிழருக்கும் கன்னடருக்கும் மூட்டி விடுவது போல் சில அமைப்புகள் செயல்படுவது சரியல்ல.

More heated arguements
http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1071


http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1517http://67.18.142.206/deccanherald/discboard/aspBoardDetail.asp?Id=105
இன்·போஸில் உள்ள காண்டீன், செக்யூரிடி, போக்குவரத்திற்காகவது கன்னடர்களைப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை.


இதில் சேம் சைடு கோல் போடும் அமைச்சர்களும் உண்டு

(......தொடரும்)

ஒரு வழியில் பார்த்தால், தமிழருக்கும் கன்னடருக்கும் கலாச்சார, பண்பாட்டுத்துறையில் பல ஒற்றுமைகள்.

- அலெக்ஸ் பாண்டியன்
03-அக்டோபர்-2005

5 comments:

Go.Ganesh said...

TOI தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

//தமிழருக்கும் கன்னடருக்கும் மூட்டி விடுவது போல் சில அமைப்புகள் செயல்படுவது சரியல்ல.//
நல்ல கருத்து. இந்தயன் எங்கு சென்றாலும் அது அவன் மாநிலமே. இதில் நிற, சாதி மொழி பேதத்திற்கு இடமளிக்கக்கூடாது

ராம்கி said...

Very sad to know this. thanks for ur info

ரங்கா - Ranga said...
This comment has been removed by a blog administrator.
ரங்கா - Ranga said...

அலெக்ஸ், பதிவுக்கு நன்றி. இதில் ஒரு வேதனை தரும் முரண்பாடு என்னவென்றால் "மண்ணின் மைந்தர்களுக்கே வேலை" என்று பிற நாடுகளும் நினைத்திருந்தால், இந்த வேலைகளே இந்தியாவிற்கு வந்திருக்காது என்பதுதான். திறமையை விடுத்து மற்ற எந்தக் காரணம் முன்னிட்டு வேலைகள் அளிக்கப்பட்டால், முதலுக்கே மோசம் ஆகிவிடும். இந்தியா இப்போது முன்னணியில் இருந்தாலும், சீனா, பிலிப்பைன்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த மாதிரி வேலைகளுக்கு கடும் முயற்சியோடு போட்டியிடுகின்றன. மற்ற நாடுகள் இந்த மாதிரி கொள்கைகள் வகுப்பதை எதிர்க்கும் அரசியல்வாதிகள் சுயநலத்துக்காக இம்மாதிரி தவறான கொள்கைகளை வளர்த்துவிடுவது வருந்தத்தக்கது மட்டுமல்ல அபாயகரமானதும்கூட. தேசிய ஒருமைப்பாடை முதலாகக் கொள்ளாது பத்திரிகை விற்பதற்காக பரபரப்பை வளர்த்து, செய்திகளைத் திரித்துக் கூறுவது அதை விட வேதனை.

Alex Pandian said...

கோ கணேஷ், ராம்கி, ரங்கா,

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
டைம்ஸின் 29ஆம்தேதி முதல்பக்கத்தில் வந்த எண் விபரங்கள்: http://tinypic.com/e8v98z.png


- அலெக்ஸ்