Wednesday, December 07, 2005

சான்றோர் பெருமை ?!

எல்லாரும் அப்பப்ப படம் காட்ட ஆரம்பிச்சதால், இதோ இன்னோர் படம் காட்டும் பதிவு :-)))))))) கீழுள்ள குறள்களுக்கும் படத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமானால் அது ......... உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.

=========================================
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது (68)

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் (63)

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் (67)

=========================================



Microsoft Chairman Bill Gates with Information Technology and Communication Minister Dayanidhi Maran at the Minister's residence in New Delhi. Photo courtesy: The Hindu




Microsoft Chairman and Chief Software Architect, Bill Gates (L) talks to Congress President and Chairperson of India's ruling United Progressive Alliance Sonia Gandhi while her son and member of Indian Parliament Rahul Gandhi (R) looks on in New Delhi. Photo Courtesy: Rediff.com




Health Minister Anbumani Ramadoss with Microsoft Chairman Bill Gates in New Delhi. Photo Courtesy: The Hindu


படங்கள் / செய்தி: நன்றி: தி ஹிண்டு, ரிடிஃப்
================================================

அலெக்ஸ் பாண்டியன்
07-டிசம்பர்-2005

4 comments:

அன்பு said...

கொடுத்த குறளுக்கு (சரியா) விளக்கம் தெரியாததால அதுக்கும், படத்துக்கும் இன்னா தொடர்பு/அல்லது இல்லைன்னு தெர்ல!

ஆனா படத்துக்கும், அதனுடன் இணைந்த சுட்டிக்கும் நன்றி. செய்தி தெரிஞ்சுண்டேன்...

சிங். செயகுமார். said...

அதானே ஒன்னுமே புரியலையே
ஒங்களுக்காவது புரியுதா?

இராமநாதன் said...

நம்ம குட்டிப்புலிங்கள்லாம் லோக்கல்லேயும் பாயறாங்க. இண்டர்நேஷனல் லெவல்லேயும் விளையாடறாங்க.. சந்திரமுகி மாதிரி எதுனாச்சும் இருக்குமோ?

Alex Pandian said...

அன்பு, சிங்.செயகுமார், ராமநாதன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

குறளின் விளக்கங்கள் இங்கே பார்க்கலாம்:

http://www.thedmk.org/thirukural/7.htm
http://www.tamilnation.org/literature/kural/kuralE2.htm#BM007
-----------

நான் சொல்ல வந்தது: என்னதான் இவர்களுக்கு பில் கேட்ஸ் மாதிரியான உலக
அளவில் பெரிய தலைகளைப் பார்த்து, பேச, இந்தியா சார்பில் கையெழுத்திட எல்லாம்
செய்தது அவர்கள் தந்தை/ தாத்தா செல்வாக்கு என்றாலும் - அவர்களின் முயற்சியும் செயலும் கூட இதற்குக் காரணம். தந்தை/தாத்தா செல்வாக்கு மட்டும் இருந்தால் போதாது. தாங்களும் கொஞ்சம் செயலில் காண்பிக்க வேண்டும். தயாநிதி ஆகட்டும், அன்புமணியாகட்டும், ராகுல் ஆகட்டும் - பலவித பணிகளில் மற்ற (பெருந்தலைகள் பிள்ளைகள் மாதிரி இல்லாமல்) முனைப்புடனே செயல்படுகிறார்கள்.

- அலெக்ஸ்