Monday, December 26, 2005

ஒரு நாள் எடிட்டர்

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்றைய டைம்ஸ் ஆ·ப் இண்டியாவின் ஒரு நாள் எடிட்டர். இல்லை.. - அதாவது எடிட்டர் என்ற பதவி அவர் ஏற்கக்கூடாது என்பதால் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.



இதற்கு முன்பே டைம்ஸ் ஆ·ப் இண்டியா பத்திரிக்கை ஒரு Gimmickக்காக சில பிரபலங்களை ஒரு நாள் எடிட்டராக இருக்க வைத்து புண்ணியம் (?!) தேடிக்கொண்டது.

எகனாமிக் டைம்ஸின் ஒரு நாள் எடிட்டராக ப.சிதம்பரமும், TOIல் இன்·போஸிஸ் நாராயணமூர்த்தி, சானியா மிர்சா என பத்திரிக்கைகளின் செய்தித் தொகுப்பையும் வெளியிடுதலையும் தங்கள் கைவண்ணத்தைக் காண்பித்தனர். ப.சியின் வெளியீடு நன்றாகவே இருந்தது.

இன்றைய டைம்ஸில், கலாம் மிகச் சிறப்பாக பல செய்திகளை வெளியிடச் செய்துள்ளார். டைம்ஸ்ம் தனது ஆடைஅவிழ்ப்புச் சமாச்சாரங்களை இன்றைக்கு மட்டும் குறைத்துக்கொண்டு, பல நல்ல விஷயங்களை வெளியிட்டுள்ளது.

Photos/News/சுட்டிகள்: நன்றி: Times of India (timesofindia.indiatimes.com)


http://timesofindia.indiatimes.com/articleshow/1345677.cms


Page 8

Page 10

Page 12

Page 14

இந்த மாதிரியான விஷயங்கள் டைம்ஸில் வருவது அரிது. அதற்காகவாவது குடியரசுத்தலைவருக்கு நன்றி. சுனாமி பற்றிய சோகச் செய்திகளைவிட அதிலேயே பல பாஸிடிவ் செய்திகளை வெளியிட வைத்த கலாம் அவர்களுக்கு மேலும் நன்றி. இந்த அளவிற்கு பாஸிடிவ் எண்ணங்கள் கொண்ட ஒருவர் நமது நாட்டின் குடியரசுத்தலைவராக இருப்பது நமது அதிர்ஷ்டமே.

கலாம் அவர்களின் பாஸிடிவ் எண்ணங்களை கிரிடிசைஸ் செய்யும் ஒரு புகழ் பெற்ற பெண் பத்திரிக்கையாளரின் கட்டுரை - http://www.deccanherald.com/deccanherald/dec242005/tavleen.asp


- அலெக்ஸ் பாண்டியன்
26-டிசம்பர்-2005


உபரி கொசுறுச் செய்தி / படம்: நன்றி: தினத்தந்தி :-)))))

No comments: