Monday, February 21, 2005

ஒரு வார்த்தை கேக்க நெனச்சிருந்தேன்...

சமீபத்தில் எந்த தமிழ் டிவி சேனலைத் திருப்பினாலும் ஒரு பாட்டைப் பார்த்திருப்பீர்கள். கவிதாலயாவின் தயாரிப்பில் வந்துள்ள சரத்குமார் இரு வேடங்களில் நடித்துள்ள 'ஐயா' படத்தின் சரத்-நயனதாரா டூயட் தான் அது.

'ஒரு வார்த்தை கேக்க நெனச்சிருந்தேன்...ஒரு வருசம்..' என்ற அந்தப் பாடலைக் கேட்கும் போது உங்களுக்கு என்ன தோன்றியது ?

(இயக்கம்: ஹரி; இசை: பரத்வாஜ்; பாடியது: சாதனா சர்கம், கே.கே (யார் இவர்..))

- எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே (பழைய எஸ்.ஏ.ராஜ்குமார் ஸ்டைல்.. மெலடி)
- 'அவள் வருவாளா' படத்தின் 'ஓ.... வந்தது பெண்ணா...' பாடல் மெட்டில் இருக்கும் போலிருக்கே
- வழக்கம்போல (காதல்) எக்ஸ்பிரஷனே காட்டாத சரத்குமாரின் காதல் டூயட்

நான் 'ஐயா' படத்தைப் பார்க்கவில்லை என்றாலும் விமர்சனம் எல்லாம் பார்த்து, படித்து தெளிந்து படத்தின் மீது ஒரு தனி ஈர்ப்பும் இல்லாத நிலையில் இந்தப் பாடலைப் பலமுறை பார்க்க/கேட்க நிகழ்ந்த போது தோன்றிய சில விஷயங்கள்....



Photo Courtesy: Rediff.com



- இன்னும் கொஞ்சம் சதைப்பிடிப்பாக மாற்றிக் கொண்டால் நயனதாரா, சந்திரமுகிக்கு அப்புறம் ஒரு ரவுண்ட் வருவார் என்றே தோன்றுகிறது
- அவரின் கண்ணும் முகமும் துறுதுறுவென பேசுகிறது
- புடவையில் பளிச்சென மின்னும் ஒரு அழகு (தென்னகத்து) ஹீரோயின்
- வடக்கத்திய ஹீரோயின்களின் சாயலில் இல்லாமலேயே தமிழில் வெற்றி பெறப்போகும் ஒரு நடிகை
- இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ள இடம் மற்றும் காட்சியமைப்புகள் கண்ணுக்கு குளிர்ச்சி (நயனதாராவும் தான்)
- ஒரு சத்தமில்லா நாளில் தனிமையில் இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்கள் மனதை என்னவோ செய்யல ?
- விஜய் மற்றும் இன்னபிறரின் டப்பாங்குத்துப் பாடல்களின் மத்தியில் ஒரு வருடும் மெலடி

-o0o- -o0o- -o0o- -o0o-

இதோ அந்தப் பாடலின் வரிகள்...

பெண்: ஒரு வார்த்த கேக்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்தப் பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்

ஆண்: ஒரு வார்த்த சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்


மீதி வரிகளைக் காண இங்கு சொடுக்கவும்

ஒரே ஒரு சிறு..... குறை என்று சொல்லத் தோன்றவில்லை.. ஆனால் இந்தப் பாடல் முழுக்க ஏன் தோளைக் குலுக்கி குலுக்கி இடுப்பை ஆட்டுகிறார் ? பாடலின் நடன ஆசிரியருக்கு வேறு அசைவுகள் வைக்க இயலவில்லையா ? அவரின் உடலசைவு / இடுப்பசைவு செயற்கையாக இருக்கிறது.ஆனால் அதுவே அந்தப் பாடல் காட்சியின் ப்ளஸ் பாயிண்டோ ?


- அலெக்ஸ் பாண்டியன்
21-பிப்ரவரி-2005