Tuesday, March 08, 2005

பெங்களூர் நிறுவனங்கள் மீது தாக்குதல் அபாயம் ?

பெங்களூர் கணினி நிறுவனங்கள் மீது லஷ்கர்-ஏ-தோய்பா தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக புதுடில்லியில் நடந்த சம்பவங்கள், நேற்று பெங்களூர் கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் பிடிபட்ட கத்தி, துப்பாக்கிகள், குண்டுகள், கமிஷனரின் பேட்டி என ஒருவித அலர்ட் ஏற்பட்டிருக்கிறது.

இதன் பின்னணியை கொஞ்சம் ஆராய்வோம். மும்பை மற்றும் டில்லிக்குப் பிறகு நாட்டில் தற்போது அதிக அளவில் பணம் புழங்கும், வெளிநாட்டினர் வந்து செல்லும் இடம், உலக அரங்கில் ஒரு பெரிய பெயர், உலகத் தலைவர்கள் எல்லோரும் இந்தியா வந்தால் பெங்களூரில் கையை நனைத்துவிட்டுத்தான் செல்வேன் என பிடிவாதம் பிடிக்கும் அளவிற்கு, பெங்களூர் தீவிரவாதிகளுக்கு ஓர் இலகு இலக்காக மாறிவிட்டது. இங்கு ஏதேனும் தாக்குதல் நடந்தால் - அது கண்டிப்பாக கணினி உலக கம்பெனிகளுக்கும் ஏன் இந்தியாவின் பொருளாதாரத்திற்குமே வேட்டு வைக்கக்கூடிய அபாயம் உண்டு. நேற்று கூட வெனிசுவேலா அதிபர் வந்து சென்றார்.

ஏற்கனவே அமெரிக்கக் கம்பெனிகள், செக்யூரிடி செக்யூரிடி என பலமுறை சொல்லிவிட்டதால்
அநேகமாக எல்லா பெங்களூர் கம்பெனிகளும், Disaster recovery என்ற திட்டத்தில் சென்னையிலிருந்தோ கொல்கத்தாவிலிருந்தோ சேவையைத் தொடர, எல்லா கட்டமைப்பும் ஏற்படுத்தியுள்ளன என்றாலும், தாக்குதல் நடந்தபின் (ஈன்ஷா அல்லாஹ்!) மீண்டு வந்து பிஸினஸ் பிடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான செயல். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் இருந்த போது, எல்லா பிஸினஸ் தலைகளும் அமெரிக்க நிறுவனத்தினரிடம் மிகவும் வாதாடி, போராடித்தான் பெங்களூருக்கும், சென்னைக்கும் பிஸினஸ் கொண்டு வந்தனர். அதுவும் சென்னையில் சுநாமி, பெங்களூரில் தீவிரவாத தாக்குதல் கொல்கத்தாவில் கம்யூனிசம் என போக்கிடம் இல்லா நிலைமை தோன்றினால் (மும்பையும் டில்லியும் ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் இலக்கில் இருப்பதால்).. இத்தகைய ஒரு நிலை நிச்சயம் புது பிஸினஸை பாதிக்கும்.

மேலும் பெங்களூரில் கணினி நிறுவனங்கள் தவிர, பெல், பி.எச்.ஈ.எல், என்.ஏ.எல், டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல் மற்றும் விமானப்படை, இராணுவம் என மிக முக்கியமான அரசாங்க நிறுவனங்களும் உள்ளன. (மற்றவர்கள், தனியார்கள் எல்லாம் முக்கியம் இல்லையா என கேட்கக்கூடாது.. எல்லாரும் முக்கியம்தான்.. ஆனால் இங்கெல்லாம் தாக்குதல் நடந்தால் அதன் தீவிரமும், Impactம் அதிகம். உலக அளவில் ஒரு அவப் பெயரும், பொருளாதார அளவில் வேலைவாய்ப்பில், மிகக் கடுமையான சோதனைகளை சந்திக்க நேரிடும்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் அலுவலகம் நுழைகையிலேயே எல்லா பைகளையும் சோதனை செய்தனர். என்னவென்று விபரமாக சொல்லவில்லை. ஆனால் அரசு இயந்திரம் கடந்த 3 நாட்களாகத்தான் இந்த தாக்குதல் அபாயம் பற்றிய செய்திகளை கசிய விட்டுள்ளது. தற்போது உள்ள செக்யூரிட்டி முறைகள் இன்னும் பலப்படுத்தப்படவேண்டும். எல்லா அலுவலகங்களிலும், சிசிடிவி போன்ற உபகரணங்கள் வைத்திருந்தாலும், சில நடைமுறை குறைபாடுகளை பயன்படுத்திக்கொண்டு, தீவிரவாதிகள் ஊடுருவ சாத்தியமுண்டு. மேலும் மேற்சொன்ன அரசு சார் நிறுவனங்களுக்கு இருக்கும் கட்டிட அமைப்பு, ஆள் படை, அம்பு எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு இருக்காது. தினமும் 10ஆயிரம் மக்கள் சுமார் அரைமணிநேர இடைவெளியில் அலுவலக வாயிலில் நுழையும் போது, அங்கு நிற்கும் செக்யூரிடி காவலாளி என்னதான் எல்லோரையும் முகமும், அடையாள அட்டையும் பார்த்து வழிவிட்டாலும், புல்லுருவிகள் ஊடுருவதைத் தடுப்பதற்கு மிகவும் தீவிரமான திறன் வேண்டும்.

கணினி நிறுவன தொழிலாளிகள் தவிர, இப்போது எல்லா நிறுவனங்களிலும், கேண்டீன்கள், வாகனங்கள் ஓட்டுவோர் (நூற்றுக்கணக்கில் பஸ்கள், வேன்கள், கார்கள்..), புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களின் தொழிலாளிகள் என பல்வேறு தரப்பட்டவரும் புழங்கும் இடமாகத் தான் கணினி நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் உள்ளன. இவ்வளவு பெரிய பாலில், துளி விஷம் கலந்தாலே.... நினைத்துப்பார்க்கவே கலக்கமாக இருக்கிறது.

நல்லதே நடக்கும் என நம்புவோம்.!


- அலெக்ஸ் பாண்டியன்
08-மார்ச்-2005

Monday, March 07, 2005

பெங்களூர் (கர்நாடக) இசை சீசன்

பெங்களூர் வாழ் (கர்நாடக) இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் மற்றுமோர் இசை சீசன் ஆரம்பித்துவிட்டது. மஹாசிவராத்திரியை முன்னிட்டு 'கலோத்சவ் - 2005' அல்சூர் ஒடுக்கத்தூர் மடத்திலும், ஏப்ரலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு, ·போர்ட் ஹைஸ்கூலிலும் கர்நாடக இசை கச்சேரிகள்.

இதில் சிவராத்திரி உற்சவ கச்சேரிகள் இலவசம். ஆரம்பித்து ஒரு வாரமாகியுள்ளது.

இடம்: அல்சூர் ஏரிக்கரையில் உள்ள ஒடுக்கத்தூர் மடம். மாலை 6 மணி

27-பிப்ரவரி - டி.என்.சேஷகோபாலன்
28-பிப்ரவரி - டி.வி.சங்கரநாராயணன்
01-மார்ச் - பண்டிட் ரோனு மசும்தார் (ஹிந்துஸ்தானி)
02-மார்ச் - உன்னிகிருஷ்ணன்
03-மார்ச் - நாட்டியம் - பத்மினி ரவி
04-மார்ச் - ஓ.எஸ்.அருண்
05-மார்ச் - ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்
06-மார்ச் - அருணா சாயிராம்
07-மார்ச் - சுதா ரகுநாதன்
09-மார்ச் - சௌம்யா எஸ்
10-மார்ச் - வசுதா கேசவ்
11-மார்ச் - பாம்பே பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (சிந்தசைசரில் ?)

------------------------------

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு பெங்களூர் ஸ்ரீராமசேவா மண்டலி வருடாவருடம் நடத்தும் ·போர்ட் ஹைஸ்கூலில் நடைபெறும் கச்சேரிகளின் விபரம் பின் வருமாறு,,, சமீபத்தில்
ஸ்ரீராமசேவா மண்டலியின் குருகுலப் பள்ளிக்காக ஜேசுதாஸ் மற்றும் ஹரிஹரன் ஒரு மிகப்பெரிய கச்சேரியை பெங்களூரில் நடத்தினர்.

ஸ்ரீராமநவமி கச்சேரிகளுக்கு சீசன் டிக்கெட் வாங்கிவைத்துக் கொண்டால் ஏப்ரல்-28 வரை தினமும் அனுமதியுண்டு.

நேரம்: மாலை 6.30மணி

09-ஏப்ரல் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ராஜேஷ்
10-ஏப்ரல் - பாம்பே ஜெயஸ்ரீ
11-ஏப்ரல் - கணேஷ் - குமரேஷ் - வயலின்
12-ஏப்ரல் - சஞ்சய் சுப்ரமணியம்
13-ஏப்ரல் - ஆர்.என்.ஸ்ரீலதா
14-ஏப்ரல் - முத்து மோஹன் (ஹிந்துஸ்தானி)
15-ஏப்ரல் - பாம்பே சிஸ்டர்ஸ்
16-ஏப்ரல் - டி.வி.சங்கரநாராயணன்
17-ஏப்ரல் - குன்னக்குடி வைத்யநாதன் - வயலின்
18-ஏப்ரல் - கத்ரி கோபால்நாத் (சாக்ஸபோன்)
19-ஏப்ரல் - நெய்யாட்டின்கரா வாசுதேவன்
20-ஏப்ரல் - மாம்பலம் சிஸ்டர்ஸ் (விஜயலஷ்மி + சித்ரா) (5.15pm)
21-ஏப்ரல் - மைசூர். டாக்டர்.பாஸ்கர் & கோஷ்டி
22-ஏப்ரல் - டி.என்.கிருஷ்ணன் + விஜயலஷ்மி
23-ஏப்ரல் - ஹதராபாத் பிரதர்ஸ் (டி.சேஷாச்சாரி, ராகவாச்சாரி)
24-ஏப்ரல் - சுதா ரகுநாதன்
25-ஏப்ரல் - எம்.எஸ்.ஷீலா
26-ஏப்ரல் - எஸ்.ஷங்கர்
27-ஏப்ரல் - ப்ரியா சிஸ்டர்ஸ் (ஷண்முகப்ரியா, ஹரிப்ரியா)
28-ஏப்ரல் - விஜய் சிவா
-------------------------------------------------------------------------

29-ஏப்ரல் - நெய்வேலி சந்தானகோபாலன்
30-ஏப்ரல் - மைசூர் நாகராஜ் (வயலின்)
01-மே - நேடுநூரி கிருஷ்ணமூர்த்தி
02-மே - அனுராதா மதுசூதன் (வீணை)
03-மே - டாக்டர்.என்.ரமணி (புல்லாங்குழல்)
04-மே - சசிகிரண் + கணேஷ் (கர்நாடகா பிரதர்ஸ்)
05-மே - எஸ்.சௌம்யா
06-மே - எம்.ஜெயசந்திரன்
07-மே - உன்னிகிருஷ்ணன்
08-மே - நித்யஸ்ரீ மகாதேவன்
09-மே - ஓ.எஸ்.தியாகராஜன்
10-மே - எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் + எம்.நர்மதா (வயலின்)
11-மே - மல்லாடி பிரதர்ஸ் (ஸ்ரீராம் + ரவி)
12-மே - டி.என்.சேஷகோபாலன்
13-மே - எஸ்.வி.நாராயணராவ் நினைவு பரிசு விழா
14-மே - நிறைவு

---------------------------------------------------------------------------------------
இசை ரசிகர்கள் இன்புறுவீர்களாக.....!

ஞாயிறு மாலை பெங்களூர் ஆகாஷ்வாணியின் - அம்ருதவர்ஷினி - எ·ப்.எம் பண்பலை ஒலிபரப்பில் எஸ்.பி.ராம் அவர்களின் ஒரு மணிநேர இசைக் கச்சேரி ஒலிபரப்பினர். மிகவும் அருமையான குரல்- தெளிவான உச்சரிப்பு. பண்பலைக்கே உரித்தான ஒரு வளமான இசையருவி காதில் தேன். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சில பாடல்களும் பாடினார். அருமை. முடிக்குமுன் தியாகராஜரின் - வந்தனமு - ரகுநந்தனா.. பாடி, பின்னர் பாரதியாரின் 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. சத்தமில்லாத தனிமை வேண்டும் எனக் கேட்போர், வாக்மேனில் பண்பலையில் சிறந்த இசை நிகழ்ச்சியும் வேண்டும் எனக் கேட்டு இன்புற்றால் தெரியும் அதன் அருமை.!

ஞாயிறு இரவு 8.30மணிக்கு பொதிகையில் ஒளிபரப்பாகும் 'ரசிகப்ரியா' (ஆர்.எம்.கேவி) மற்றும் கைரளியின் 'ராகோல்(த்)ஸவம்' (9மணி) மற்றும் ஈ.டிவி (கன்னடா) - எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடத்தி வரும் 'இத தும்பி ஹாடிதெனு' இவை பற்றிய பதிவுகள் பின்னர்.


- அலெக்ஸ் பாண்டியன்
07-March-2005

Zoom சேனலும் 'Dangerous' நிகழ்ச்சியும்

இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே ...... முறையாக (!?) ஒரு தனியார் சேனலில் (டைம்ஸ் ஆ·ப் இண்டியா குழுமத்திற்குச் சொந்தமான) Zoom என்கிற சேனலில் தினமும் இரவு 11 மணிக்கு கமல் சித்து என்னும் பெண்மணியும் சமீர் கோச்சார் என்பவரும் ஒரு நிகழ்ச்சி நடத்துகின்றனர். நிகழ்ச்சிக்குப் பெயர் 'டேஞ்சரஸ்'இதில் என்ன என்கிறீர்களா ?

இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக நமது தமிழ் சேனலில் விஜய் டிவியில் மறைந்த டாக்டர்.மாத்ருபூதமும், (துபாய் வாழ்) டாக்டர்.ஷர்மிளா மேடமும் மிகவும் கண்ணியமாக நடத்திய 'புதிரா புனிதமா' நிகழ்ச்சியை, Zoom சேனலில் மேற்சொன்ன இருவரும் (கமல் சித்து + சமீர் கோச்சார்), கிறக்கமேற்படுத்தும் முயற்சியில் நடத்துகின்றனர். அப்பெண்மணியின் உடையும், ஹேர்ஸ்டைலும், மேலாடையும் சொல்லவே வேண்டாம்.photo courtesy: www.indiantelevision.com

இதே சேனலில் கபீர் பேடியின் மகள் பூஜா பேடி ஒரு பேட்டிகாணும் நிகழ்ச்சியைப் ப்ரைம் டைமில் நடத்துகிறார். இன்னும் ஒரு நொடி இருந்தால் அவர் மேலாடை விலகிவிடும் அளவிற்கு ஒரு see all bare all ஆடை. பூஜா பேடி பேட்டி காணும் விஷயங்களும் ரசாபாசமான விஷயங்களே.


இந்த டேஞ்சரஸ் என்னும் நிகழ்ச்சி இரவு 11.00மணிக்கு.. தினமும் ஒரு வித்தியாசமான பலான விஷயம் சம்பந்தப்பட்ட தலைப்பு.. ஒரு விருந்தினருடன் பேட்டி (உங்களுக்கு எப்படி ' ' பிடிக்கும்' போன்ற அந்தரங்கக் கேள்விகள்.. விருந்தினரும் சகித்துக்கொண்டே, அல்லது இளித்துக் கொண்டே பதில்கள் சொல்ல, இதற்கு நடுவே தொலைபேசி அல்லது குறுஞ்செய்தியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இருவரும் ஏதோ நிபுணர்கள் போல பதில்கள். ஆனால் எல்லாம் சும்மா டைம்ஸ் ஆ·ப் இண்டியா நாளிதழ் படிக்கும் இளைஞர் / இளைஞிகளை குறிவைத்து செய்யப்படும் கிம்மிக் ஆகவே தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் இடையே வரும் விளம்பரங்களும் பலான வகையே. இந்தச் சேனலே இந்தி சினிமா உலகில் நடைபெறும் ·பேஷன் மற்றும் பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளை காண்பிப்பதற்கும், இந்தி சினிமா கிசுகிசுக்களை Page-3 என்ற தலைப்பில் பகிரவும் ஏற்படுத்தியுள்ளனர்.

நமது தமிழ் டிவி நிகழ்ச்சியில் இரு டாக்டர்கள் பங்கு கொண்டதால் அவை மருத்துவ ரீதியிலும் உளவியல் ரீதியிலும் சிறப்பு பெற்று விளங்கியது. இதற்கும் முன்பே ஜீ டிவி, சோனி டிவியிலெல்லாம் டாக்டர்.பிரகாஷ் கோதாரி போன்றோருடன் சில கேள்வி பதில் மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தது என்றாலும், ஆனால் இந்த Zoom சேனல் கத்துக்,குட்டிகள் ??

மேல்கைண்ட் அன்பர்கள் பார்த்துவிட்டு கருத்து சொல்லவும் ;-) அவரவர்க்கு அதது..!!


- அலெக்ஸ் பாண்டியன்
07-மார்ச்-2005