Wednesday, March 16, 2005

இந்தப் படம் போதுமா ?

சென்ற வார ஆனந்த விகடனில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தைப் பற்றி மருத்துவரும், திருமா அவர்களும் என்ன சொல்லுவார்கள் ? படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க மிரட்டும் இவர்கள் இந்தமாதிரி விஷயங்களுக்கு எதுவும் சொல்வதில்லை போல ?

படம் நன்றி: Rediff.comகமல், திருவிழாக்களில் / பொருட்காட்சிகளில் காணும் 'மரணக் கிணறு' என்னும் விளையாட்டில் வித்தை காண்பிக்கும் பைக் வீரராக நடிக்கும் 'மும்பை எக்ஸ்பிரஸ்' குடும்பத்துடன் பார்த்து மகிழவேண்டிய காமெடி படமாம் !

படம் வரட்டும் - "இந்தப்" படம் திரையில் எத்தனை நொடி வருகிறது என பார்க்கலாம்.

- அலெக்ஸ்

Tuesday, March 15, 2005

கிழக்கே போகும் ரயில் - 2

பெரம்பூரில் உள்ள ரயில் கோச் தொழிற்சாலை பற்றி எத்தனை பேர் அறிந்திருப்போம் ?

This workshop was established in the year 1856 to serve the erstwhile Madras and Southern Mahratta Railway Company. It was a combined Locomotive, Carriage and Wagon POH & Coach building workshop and later bifurcated in 1932 to deal with Carriage & Wagon POH activity only with the shifting of Locomotive overhaul activity to the new Loco workshop which was built adjacently . In 1951, the Southern Railway was formed by integrating the erstwhile South Indian Railway company, Madras & Southern Mahratta Railway Company and Mysore State Railway with all their workshops and assets.

http://business.vsnl.com/mechworkshops_srly/cw_perambur.html
http://business.vsnl.com/mechworkshops_srly/

இந்த சுட்டிகளில் சென்றால் இங்கு ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்களும், முன்னேற்றங்களும் தெரிய வரும். ஒரு ஜப்பான், ஜெர்மனி இன்ன பிற முன்னேறிய நாடுகளின் ரயில் சம்பந்தப்பட்ட முன்னேற்றங்களோடு ஒப்பிட்டால், கொஞ்சம் பிந்தங்கிய நிலையில் இருந்தாலும், பெரம்பூர் ரயில் கோச் தொழிற்சாலையும், கபூர்தலா ரயில் கோச் தொழிற்சாலையும் கொண்டு வரும் முன்னேற்றங்கள் பல.

**** ***** ******
In 1955, the year the ICF was established, working in a single shift, workers built 175 coaches, all of the same design. Today, ICF has transformed itself into a modern, integrated unit producing each year over 1,000 coaches in 235 different designs, catering to the specific needs of diverse buyers (As of 2003)

நன்றி: FrontLine.

The Design and Development Office, working on the basis of research and development (R&D) inputs, continually looks for newer, environmentally friendly, low-cost and durable materials, making the choices without compromising on safety and comfort. Compressed plywood, PVC sheets, latex cushions, vinyl clothing, fibre reinforced plastic (FRP) inlays and stainless steel have thus been brought in over the years. In the year 2000, the ICF designed its first stainless steel coach. In order to enhance safety, the following design changes or modifications have been made in recent times:

* To improve crashworthiness, especially in the doorway area, the side-doors are being made of FRP material.
* To facilitate quick evacuation during any accidents, emergency exits through the roof are being provided.
* The size of the emergency exit windows in air-conditioned coaches has been increased from 2 square feet to 4 sq ft.
* Several "anti-injury" features are incorporated in the design, and "anti-climbing" features included in order to prevent miscreants from clambering on to the roof.
* To reduce the incidence of one coach mounting another during an accident, the ICF has, with the Research Designs and Standards Organisation (RDSO, that functions under the Ministry of Railways in Lucknow), developed a centre buffer coupler to replace screw couplers.
The following measures have been introduced to enhance passenger comfort:
* Seats in certain classes are being provided ergonomic contours, with a pneumatic reclining mechanism to tilt them.
* Sturdier snack trays have been developed using light alloy casting to replace FRP material.
* The length of the side berths has been increased by redesigning the layout.
* To improve lighting, four-feet-long light fittings, each with four two-feet fluorescent tube lights, are being provided.
* Oscillating ceiling fans are being provided.
* Toilet fittings are being made of modular type FRP material, replacing LP sheet panelling and PVC flooring that is more difficult to maintain and less pleasing in aesthetic terms.
* For easier maintenance, LP sheet panelling inside is being replaced with steel panelling. FRP panelling is also being tried.
* Health faucets are to be introduced in second-class coaches. Exhaust fans and steel panelling are to be provided in toilets.
* The coach painting system is being changed with the aid of five major paint manufacturers.

*** **** ****

In 1971, it exported one bogie truck to Tanzania. Since then, it has exported two bogie trucks to Thailand, 60 to Myanmar, 45 to South Africa and 100 to Taiwan. A breakthrough in exports came in 1971 when the ICF won a bid to supply 113 passenger coaches to the Taiwan Railway Administration.
*** **** ****

முன்னாளில் இருந்த 3ஆம் வகுப்பு, மரக்கட்டை/இரும்பு ஸ்லீப்பர் இருக்கைகளிலிருந்து மாறி 6 மாதத்திற்கு ஒரு முறை இப்போதெல்லாம் கோச்களில் பல மாற்றம் வந்துள்ளது. லால் பாக் எக்ஸ்பிரஸ் போன்ற சில ரயில்களில் 2ஆம் வகுப்பு சேர்கார் எனப்படும் பொது இருக்கைகளில், ஏ.சி. சேர்கார் போன்ற இருக்கைகள் வந்துவிட்டன. (அதாவது பஸ்ஸில் உள்ளது போல் ஒரே திசையை நோக்கிய மூன்று மூன்று இருக்கைகள். இதனால் அங்கு உட்காருவோருக்கு தனிமை இடம் கிடைக்கும். இதனால் ஆம்பூர், வாணியம்பாடி, காட்பாடியில் ஏறுவோர் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து உட்காருவோர் மடியிலெல்லாம் நின்று பயணம் செய்யும் நிலை குறையும்.

மேலும் முன்பெல்லாம் ரயில் தண்டவாளத்தின் அடியில் மரக்கட்டை ஸ்லீப்பர்கள் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் இவை மாற்றப்பட்டு வருகின்றன. பல இடங்களிலும் கான்கிரீட் ஸ்லீப்பர்கள் மாற்றியுள்ளனர். இதனால் - வண்டியின் வேகம் அதிகரித்து உள்ளது. மழை, மற்றும் மண் தன்மையால் ஏற்படும் குறைபாடுகளும் இதனால் குறைகிறது. முன்பெல்லாம் ரயிலில் செல்லும் போது 'கடக் கடக்' என்ற ஒரு ஒலி கேட்டிருப்பீர்கள். அந்த சத்தமே ஒரு தாலாட்டு போல இருக்கும். ஆனால் சமீபகாலங்களில் பயணம் செய்திருந்தால் அந்த சத்தம் குறைந்ததையும், சில ஊர்களின் நடுவில் ரயில் அப்படியே வழு வழு என்று வழுக்கிக்கொண்டு போவதையும் உணர்ந்திருக்கலாம்.

முன்பெல்லாம் இரு தண்டவாள பார்கள் இணையும் இடத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டிருப்பார்கள் (கோடை வெப்பத்தில் இரும்பு நீண்டால் பாதகம் ஏற்படாமல் இருக்க என எண்ணுகிறேன்). ஒவ்வொரு வண்டியிலும் உள்ள சக்கரங்கள் இந்த தண்டவாளத்தில் மாறும்போது அந்த 'கடக் கடக்' ஒலி வரும். ஆனால் இப்போதெல்லாம் அந்த ஜாயிண்டுகளை வெல்ட் (ஒட்ட) வைத்துவிடுவதால் சக்கரங்கள் ஏறி இறங்கி வரும் சத்தங்கள் வருவதில்லை. அதனால் வழுக்கிச் செல்வதுபோல ஒரு இயல்பு.

***** ****** ******

மறுபடியும் சென்னைப் பயணத்திற்கு வருவோம்...

பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் ஸ்டேஷனில் வண்டி நிற்காது என்றாலும் இஞ்சின் டிரைவர்கள் மற்றும் அங்கு வேலைபார்ப்போரின் வசதிக்காக ரயில் மெல்லமாக செல்கிறது (அதாவது வேண்டியவர்கள் இறங்கிக் கொள்ள வசதியாக ??). அடுத்து பெரம்பூர் ஸ்டேஷன். தமிழக ஸ்டேஷன்களில் முதலில் கண்ணில் படுவது இந்த போஸ்டர்கள் தாம். ரயில்வே மஸ்தூர் யுனியன் மற்றும் இன்னபிற சங்கங்களின் தலைவர் படம் போட்ட போஸ்டர்கள். ரயில் லைனை ஒட்டிய சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பர வாசகங்கள் - அஞ்சால் அலுப்பு மருந்து, வனஜ் தையற் பள்ளி, டுடோரியல் பள்ளிகள், சரவணா ஸ்டோர்ஸ் இத்தகைய விளம்பரங்கள் வேறு எந்த மாநிலத்திலும் தமிழகம் அளவு இல்லை.

பேஸின் பிரிட்ஜ் தாண்டி செண்ட்ரலில் நுழையும் அதிகாலை வேளையிலேயே ஸ்டேஷனில் கூட்டம். வட/கிழக்கு/மேற்கு இந்தியாவிலிருந்து வரும் ரயில்கள் வந்து பயணிகள் கூட்டமும், அதிகாலை ரயில்களைப் பிடிக்க முதல்நாள் இரவே டேரா போடும் வடக்கத்திய ஆசாமிகள் கூட்டமும், அங்கங்கு புதிதாக வைக்கப்பட்டுள்ள ப்ளாஸ்மா பெரிய திரை டிவிகளில் ப்ரூ காபி விளம்பரங்களைப் பார்த்தபடி அரை உறக்கத்தில்...

முன்பெல்லாம் சென்ட்ரலில் அடையாளமே 'ஹிக்கின் பாதம்ஸ்' புத்தக ஸ்டால் தான். அதை இப்போது வேறு எங்கோ மாற்றிவிட்டனர் போல.

வெளியே வந்தால் - அதிகாலை சுபவேளையில் ஆட்டோக்காரர்களின் தமிழ் அர்ச்சனை..!

(தொடரும்)

- அலெக்ஸ் பாண்டியன்
15-மார்ச்-2005

Monday, March 14, 2005

கிழக்கே போகும் ரயில் - 1

அட்ச ரேகை, தீர்க்க ரேகை என எல்லோரும் படித்திருப்பீர்கள். அதாவது Latitude and Longitude. இப்படி 12.98 N, 77.58 E உள்ள ஒரு ஊரிலிருந்து 13.6N 80.18E யில் உள்ள ஒரு ஊருக்கு ரயில் வண்டியில் சென்றால் அது கிழக்கே போகும் ரயில்தானே ? 1979ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ரயிலின் கடைசி பெட்டியில் சாக்பீஸால் கதாநாயகி செய்தி எழுத, அது நகரத்தில் உள்ள கதாநாயகனுக்கு போய்ச் சேரும். இப்போதோ கையடக்க செல்பேசியில் எண்களை அழுத்தினால் செய்தி உடனே உலகெங்கும் செல்லும் வசதி வந்துவிட்டது. கதையை நிறுத்திவிட்டு விஷயத்திற்கு வருகிறேன்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு தினமும் சுமார் 7 ரயில்கள் சென்று/வந்து கொண்டிருந்தாலும் அனைத்திலும் எல்லா தினங்களிலும் (பெரும்பாலும்) அதுவும் வார இறுதிகளில் கூட்டம், கூட்டம்.. கூட்டம். இதில் தினமும் தமிழக அரசின் விரைவு போக்குவரத்தும், கர்நாடக அரசின் சொகுசு பேருந்துகளும், தனியாரின் அதி சொகுசு பேருந்துகளும், ஏறி இறங்கி செல்ல வழியுள்ள - ஹோசூர், கிருஷ்ணகிரி, வேலூர் முறையும் இருந்தாலும், அதென்னவோ எல்லா மார்க்கத்திலும் கூட்டம்.

சமீபத்தில் ஒரு நாள் ஒரு உறவினர் திருமணத்திற்கு சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்தது. கடந்த சில வருடங்களாக, வருடத்திற்கு ஒரு முறைதான் சென்னை செல்ல நேர்ந்தது. அதுவும் ஒரே நாள் பயணம் - காலை சென்று, மாலை திரும்பும் பயணங்கள்.

தேசிகன் தன்னுடைய பெங்களூர் சென்னைப் பயணங்கள் பற்றி இங்கு எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்ட அந்த வர்ணனைகள அனைத்தையும் இந்த ஒரு நாள் பயணத்தில் காண முடிந்தது. அதுவும் இந்த இளைஞர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே. ஏதோ டிக்கெட் வாங்கிவிட்டால் தாங்கள் தான் ரயிலுக்கு உரிமையாளர்கள் போல் அரட்டை, ரகளை. அதுவும் வண்டி பெங்களூரில் கிளம்புவதே நள்ளிரவிற்கு அருகில். அதுவும் பெங்களூர் புறநகர் தாண்டும் போது, நள்ளிரவு ஆகிவிடுகிறது. அதையும் தாண்டி சுமார் 2-3 மணிநேரங்கள் சத்தம்போட்டு அரட்டை. கம்பார்ட்மெண்டில் உள்ள, பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் தூக்கம் கெடும் என்ற எண்ணங்கள் துளிக்கூட இல்லாமல் சத்தம். சத்தத்தைக் குறையுங்கள் என்று சொன்னாலும் கேட்காத ஒருவித தான்தோன்றித்தனம்.

இதன் நடுவே பெப்ஸி பாட்டிலும், ரம் பாட்டிலும் திறந்து ஒரே தண்ணிமயம். கம்பார்ட்மெண்ட் முழுவதும் புளித்த பழ வாசனையில் (?) மற்றவர்கள் எப்படித் தூங்கினார்களோ - அடியேனுக்கு சுத்தமாகத் தூக்கம் கெட்டது.

அதுவும் இரவு நேர ரயில் இப்போதெல்லாம் மிகவும் வேகமாக செல்கிறது. ரயிலின் வேகம் மணிக்கு 90-100 கி.மீ வேகத்தில் சில சமயம். அப்படியே ஆட்டம். இதில் எங்கே தூக்கம். ஒவ்வொரு ஸ்டேஷனும் வருவது - கண்ணில் வெளிச்சம் - என ஒரு மாதிரி கண் அசந்த நேரத்தில் பெரம்பூர் வந்துவிட்டது :-)

(தொடரும்)

- அலெக்ஸ் பாண்டியன்
14-மார்ச்-2005