Tuesday, May 03, 2005

இணையத்தில் செய்தித்தாள் வடிவம்

செய்தித்தாள் வடிவத்தில் இணையத்தில் பத்திரிக்கை படிக்க வசதி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என பல முறை நினைத்ததுண்டு. டைம்ஸ் ஆ·ப் இண்டியா பத்திரிக்கை இதை தற்போது நடைமுறைப் படுத்தியுள்ளது.


Courtesy: Times of India epaper website

பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெளிமாநிலங்கள் அல்லது நாடுகள் சென்ற பிறகும் இழந்ததாகக் கருதும் ஆங்கில (த ஹிண்டு, எக்ஸ்பிரஸ்) அல்லது தமிழக தினசரிகளைப் படிக்க விரும்பும் போது, அந்த நிஜ பேப்பரை படிக்கும் உணர்வை இணையத்தில் படிக்கும்போது இழந்துவிடுவர்.

டைம்ஸ் ஆ·ப் இண்டியா இணையதளம் தற்போது இணையத்தில் வழக்கமாக படிக்கும் வசதியையும் தந்து, தங்களுக்கு ஒரு இண்டியாடைம்ஸ் ஐடி இருந்தால், நிஜ பேப்பர் படிக்கும் உணர்வையும் வழங்குகிறது. இதில் பெரும்பாலான முக்கிய எடிஷன்கள் உள்ளது (மும்பை, டெல்லி, பெங்களூர்..) - அந்த அந்த ஊரின் விளம்பரங்களும் அப்படியே ஸ்கேன் செய்யப்பட்ட முறையிலும், அந்த ஏரியாவில் க்ளிக்கினால், அந்த செய்தியின் முழு விரிவும் வெளிப்படுகிறது. மிகவும் உபயோகமான ஒரு வசதி.

தமிழில் தினசரிகள் ஏதேனும் இந்த வசதியை வழங்குகிறதா ? தினமணி முன்பு கொடுத்து வந்த ஞாபகம். (PDF ?)


-000- -000- -000- -000-

இன்று பிறந்த நாள் காணும் எழுத்தாளர் சுஜாதாவிற்கு வாழ்த்துக்கள். பலருக்கு மானசீக குருவாய் இருந்து இன்று பலரும் எழுதத் தூண்டுதலாய் இருந்து வருகிறார். அவரின் சமீபத்திய விகடன் கட்டுரை (கற்றதும் பெற்றதும்), பலரையும் தொட்டிருக்கும். சுஜாதாவினைப் பற்றிய நீண்ட கட்டுரைகள் தேசிகனின் வலைப்பதிவிலும், இகாரஸ் பிரகாஷின் பதிவிலும்.

-000- -000- -000- -000-

நானும் வலைப்பதிய ஆரம்பித்து ஓராண்டு ஆகிறது.. ஹி.ஹி.

- அலெக்ஸ் பாண்டியன்
03- மே- 2005