Friday, July 28, 2006

AVM: ஏவி.மெய்யப்பன் நூற்றாண்டு விழா

இன்று ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நூற்றாண்டு விழா. நன்றி: தினமலர்: வாழ்க்கையை வெற்றியாக்கிய ஏவி.எம்., : "நாம் இருவர்' முதல் " சிவாஜி ' வரை தொடரும் சாதனை

இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி.மெய்யப்ப செட்டியார் காரைக்குடி என்ற சிறு நகரத்தில் ஆவிச்சி செட்டியாருக்கும், லட்சுமி ஆச்சிக்கும் 28.07.1907ல் மகனாக பிறந்தவர்.

நகரத்தார்களுக்கு வட்டி தொழில் செய்வது தானே வழக்கம். ஆனால், ஆவிச்சி செட்டியார், அந்த காலத்திலேயே ஏவி அண்டு சன்ஸ் என்ற பெயரில் பலபொருள் அங்காடி கடை வைத்தார். தன் தந்தைக்கு உடல் நிலை பாதித்ததால் கடை வேலைகளை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏவி.எம்.,க்கு ஏற்பட்டது. அதனால், ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.

ஆனாலும் அவரின் பொது அறிவு அசாத்தியம். இதன் பலன், தன் 22வது வயதிலேயே "போர்டு கார்' கம்பெனியிலே ஏஜென்சி எடுத்தார்.

இசைத்தட்டுகளை வாங்குவதற்காக சென்னை வந்த போது ஏன் நாம் விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் நாமே தயாரித்தால் என்ன என்று செயல்பட தொடங்கினார். அதன் விளைவாக இசைத்தட்டுகளை தயாரிக்கும் சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை 09.09.1932ல் உருவாக்கினார்.

அதன் வளர்ச்சியாக படங்களை தயாரிக்க கல்கத்தாவுக்கு சென்றார். அல்லி அர்ஜூனா(1935) வில் தொடங்கி முதல் மூன்று படங்கள் தோல்வி அடைந்தன.

தோல்வியை கண்டு பயந்துவிடவில்லை தோல்விக்கு என்ன காரணம் என்று புரிந்து கொண்டு சென்னையில் 1940ல் பிரகதி ஸ்டூடியோவை பங்குதாரர்களுடன் துவக்கினார். பூ கைலாஷ் (31.05.1941), சபாபதி (09.01.1942), என் மனைவி(07.03.1942), ஹரிச்சந்திரா(04.06.1943), ஸ்ரீவள்ளி(14.04.1945) போன்ற படங்களை தயாரித்தார். அதில் ஹரிச்சந்திரா கன்னடத்தில் எடுத்த படம். அதனை தமிழில் மொழி மாற்றம் செய்தார். இது தான் இந்தியாவிலேயே முதலில் டப்பிங் செய்த படம்.

நந்த குமார் படத்தில் "பிளேபேக்' முறையை அறிமுகப்படுத்தியவர் ஏவி.எம்., தான்.

ஸ்ரீவள்ளி படத்தில் ருக்மணி பாடிய பாடலுக்கு பெரியநாயகியை பாட வைத்து "போஸ்ட் சிங்கரைனைசேஷன்' முறையை கையாண்டார். இதுவும் ஏவி.எம்., முதன் முதலாகச் செய்தது.

காரைக்குடிக்கு அருகில் தேவகோட்டை ரஸ்தா என்ற இடத்தில் ஒரு நாடக கொட்டகையில் குடிசை போட்டு 1946ல் ஏவி.எம்., ஸ்டூடியோவை ஆரம்பித்தார்.

அங்கு முதன் முதல் எடுக்கப்பட்ட படம் "நாம் இருவர்'(14.01.1947) தேசிய உணர்வை ஏற்படுத்திய படம். இதில் தான் பாரதியார் பாடல்களை சேர்த்து பட்டி தொட்டியெங்கும் ஒலிக்க செய்து பாமர மக்களிடம் பாரதியார் பாடல்களை கொண்டு சேர்த்தார்.

அடுத்து எடுத்த படம் வேதாள உலகம்(08.08.1948).

கடந்த 1948ம் வருடம் ஏவி.எம்., ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்றினார். அங்கு எடுத்த முதல் படம் "வாழ்க்கை'(22.12.1949).

ஏவி.எம்., எடுத்த படங்கள் வியாபார ரீதியாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு பல விழிப்புணர்வுகளை உண்டாக்கிய கருத்துள்ள படங்கள்.

ஹம் பஞ்சி ஏக் டால்கே(08.08.1957) இந்திய அரசின் தங்க பதக்கத்தை பெற்ற படமாகும்.

ஏவி.எம்.,ல் பணியாற்றிய ஐந்து பிரபலங்கள், முதல்வர் ஆனது ஏவி.எம்.,க்கு கிடைத்த தனி பெருமை

அண்ணா (ஒர் இரவு11.04.1951)

மு.கருணாநிதி (பராசக்தி17.10.1952)

எம்.ஜி.ஆர்.,(அன்பே வா14.01.1966)

ஜெயலலிதா (மேஜர் சந்திரகாந்த்11.11.1966)போன்ற பல படங்கள்

என்.டி.ராமாராவ்(சங்கம்10.07.1954), (பூ கைலாஷ்20.03.1958), (ராமு04.05.1968), (சிட்டி செல்லலு29.07.1970).

வைஜயந்திமாலா, சிவாஜி கணேசன், கமலஹாசன், வி.கே.ராமசாமி, டி.ஆர்.மகாலிங்கம், சிவகுமார் போன்ற பல நடிகர்களும் ஏவி.எம்.,மால் அறிமுக படுத்தப்பட்டவர்கள். இதைப்போல பல இயக்குனர்களும், தொழில் நுட்பக்கலைஞர்களும் இங்கே உருவானவர்கள்.

அறுபது ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து கலை உலகத்தில் முத்திரை பதித்து கொண்டிருக்கும் இதில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தை தயாரித்து 168வது பட தயாரிப்பு சாதனையை எட்டியுள்ளது இந்நிறுவனம்.

இவர் தான் ஏவி.மெய்யப்பன் :

* ஏவி.எம்., ஒரு பர்பெக்ஷனிஸ்ட். செய்வன திருந்த செய்ய வேண்டும். ஒருவரிடம் ஒரு வேலையை ஒப்படைக்கும் போது, அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னால் தான் அது சரியாக நடக்கும் என்பது அவருடைய சித்தாந்தம்.

* டைம் மேனேஜ்மென்ட் எனப்படும் நேர நிர்வாகம் அவருக்கு கை வந்த கலை.

* எந்த ஊருக்கு போவதாக இருந்தாலும் என்னென்ன அயிட்டங்கள் கொண்டு போக வேண்டும் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் லிஸ்ட் போடுவார். வேட்டி, சட்டை, பனியன், அன்டர்வேர், விபூதி, துண்டு என்று அத்தனையும் அதில் சேர்த்திருப்பார். இந்த பழக்கத்தால், நீரிழிவுக்காரரான அவர் தன் பயணங்களின் போது இன்சுலின், சிரஞ்ச், ஸ்பிரிட் போன்ற எதையும் ஒரு தரம் கூட அவர் மறந்தது கிடையாது.

* வீட்டில் எது பேசும்போதும் மூன்றாவது மனிதர்கள் இருப்பதை அவர் விரும்பியதில்லை.

* ஓர் இடத்தில் இருந்து கிடைக்கும் தகவலை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்து விட மாட்டார்.

* உதவி செய்ய தோன்றினால் உடனே செய்துவிட வேண்டும். "டுமாரோ ஈஸ் நோ குட்' என்று அடிக்கடி சொல்வார். "அன்றே செய்' என்பது அவரது தாரக மந்திரம்.

* ஒரு படம் எடுக்கும் முன்பாக அதில் எவ்வளவு லாபம் வரும் என்பதை விட அதில் எவ்வளவு நஷ்டம் வரும்; அப்படி வந்தால் அதைத் தாங்க முடியுமா என்று கணக்கிட்டு பார்த்த பின்பே வேலையில் இறங்குவார்.

* எடுத்ததற்கெல்லாம் ராகு காலம், எமகண்டம் பார்ப்பதோ, ஜாதகம், ஜோசியம் என்று அலைவதோ அவருக்கு பிடிக்காத விஷயங்கள். உழைப்பும், நாணயமுமே அவர் நம்பிய தொழில் மூலதனங்கள்.

* பள்ளிக்கூடம், கல்லுõரிகளுக்கு பண உதவி செய்துவிட்டு, பதிலுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும் என்று கேட்பது ஒருவகை லஞ்சம் என்பார் இவர்.

* கேன்டீனுக்கு தினமும் "மெனு' தயாரித்தது இவர் தான். கேன்டீனில் சாப்பிட விரும்புகிறவர்களுக்கு குவாலிட்டி அயிட்டங்களை தர வேண்டும் என்பதில் ரொம்பவும் குறிப்பாக இருப்பார்.

* "அது அப்படித்தான்' என்று சொல்வதில் அவருக்கு விருப்பமே இருந்ததில்லை. மற்றவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார். எங்கேயோ மிஸ்டேக் இருக்கு. அதை திருத்தினால் "அது அப்படித்தான்' என்று நழுவி போக தேவையிருக்காது என்று நம்பியவர்.

* மரணத்தை பற்றி ஏவி.எம்., கவலைப்பட்டதில்லை. "எனக்கு எப்போதும் சாவை பற்றி கவலை கிடையாதப்பா. அதை பற்றி பயப்படவே கூடாது. அதே சமயம் அதை பற்றி நினைக்காமலும் இருக்க கூடாது. செய்ய வேண்டியதை அதற்கு முன் செய்து விட வேண்டும். இந்த உலகத்துக்கு வர்ற நாம எல்லாருமே ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிட்டு தான் வர்றோம். அதுக்கு எண்டார்ஸ்மென்ட் தான் எப்போன்னு தெரியாது. ஆகவே, பயப்படறதுக்கு என்ன இருக்கு?' என்பார்.

* சொத்து என்பது நம்ம காலத்தில் நம்ம கையில இருக்கிற பொசிஷன் மட்டுமே என்பது ஏவி.எம்.,ன் கருத்து. தன்னுடைய 49வது வயதிலேயே சொத்துக்களை பிரித்து மகன்கள் பெயர்களில் எழுதி வைத்து விட்டார். 72வது வயதில் அவர் காலமானபோது அவர் பெயரில் ஒரு துண்டு நிலம் கூட கிடையாது என்ற உண்மை பல பேருக்கு தெரியாது.

* ஏவி.எம்.,மின் மறக்க முடியாத அட்வைஸ்: "பிசினஸ்னா அதில் ஈடுபாடு இருக்கணும். நல்ல பிசினஸ் என்று யாரோ சொல்றாங்கன்னு பண்ணக்கூடாது. இன்னொருத்தரை நம்பி பிசினஸ் பண்ணக்கூடாது.

* "படத்தில் செக்ஸ் இருக்கலாம். ஆனால், வல்காரிட்டி, ஆபாசம் இருக்கக்கூடாது' என்பது அவரது கருத்து. "இரண்டுக்கும் இடையே நுõலிழை அளவே வித்தியாசம் வெறும் பார்வையிலேயே கூட செக்ஸ் கிளாமர் கொண்டு வரலாம். அது தப்பில்லை. ஆனால், அதுவே கொஞ்சம் ஓவராக போனால் ஆபாசமாகிவிடும். எனவே எல்லைக்கோட்டை கவனித்து அதை கடக்காமல் காட்சிகளை அமைக்க வேண்டும்' என்று அறிவுரை சொல்வார்.

* ஏவி.எம்., கடைப்பிடித்து வந்த ஒரு வழக்கம் ரொம்பவும் வித்தியாசமானது. டேப் ரிக்கார்டர் என்ற சாதனம் வராத காலத்தில் ஸ்கிரிப்ளிங் பேட் என்று காகிதங்களை ஒரு நோட்புக் போல இணைத்து அதில் ட்வெயின் நுõலின் ஒரு எச்பி பென்சிலைக் கட்டியிருப்பார். அது கட்டில் தலைமாட்டில் இருக்கும். அதேபோல டெலிபோன் பக்கத்தில், பாத் ரூமில் கம்மோடுக்கு மேலே, டைனிங் டேபிளில், டிராயிங் ஹாலில், கார் டேஷ் போர்டில் என்று பல இடங்களிலும் ஒவ்வொரு ஸ்கிரிப்ளிங் பேட் வைத்திருப்பார். ஏதேனும் செய்யப்பட வேண்டும், அதை உதவியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தால் உடனே அந்த பேடில் கிராசாக எழுதி கையெழுத்து போடுவார். ஆபீஸ் போனதும் தன் செயலரிடம் தந்து யார் யாருக்கு தகவல் போய் சேர வேண்டுமோ அதை சேர்க்க சொல்வார்.

* பின்னாளில் கையடக்க டேப் ரிக்கார்டர் வந்தது. அதில் தான் தர வேண்டிய உத்தரவுகளை அவ்வப்போது ஒலிப்பதிவு செய்து கொள்வார். ஆபீஸ் போய் சேர்ந்ததும் செக்ரட்டரியிடம் கொடுப்பார். அவர் அதை போட்டு கேட்டு யார் யாருக்கு என்ன உத்தரவோ அதை விளக்கமாக டைப் செய்து அவர்களுக்கு அனுப்பி விடுவார். டேப் ரிக்கார்டரை மகன்களுக்கும் வாங்கி கொடுத்தார். இப்போதும் ஏவி.எம்., போலவே அதை பயன்படுத்தி வருகிறார் சரவணன்.

Courtesy: http://www.dinamalar.com/2006july28/general_tn4.asp

Tuesday, June 06, 2006

அகத்தியம் 40000

இணையத்தில் தமிழில் உலாவரும் பலருக்கும் 'கிராமத்துப் பெரிசு' என்றால் தெரிந்திருக்கக் கூடும். யார் அவர் என்பது தெரியாதவர்கள் கடந்த 2 வருடங்களாக மட்டுமே இணையத்தில் தமிழில் உலாவுபவர்களாக இருக்கக் கூடும்.

கிராமத்துப் பெரிசு என அன்புடன் அழைக்கப்படும் அவர் ' மலேசியாவில் இருக்கும் டாக்டர்.ஜேய்பி எனப்படும் டாக்டர்.சி.ஜெயபாரதிதான்.

சுமார் 8 வருடங்கள் முன்பு 1998 ஆடிமாதத்தில் 'அகத்தியம்' எனும் தமிழ் மடலாடற் குழுமத்தைத் துவங்கி, இன்று வரை சுமார் 40000 மடல்களோடு ஜொலிக்கவைத்துள்ள அவரின் பணி மகத்தானது. தமிழ், சமயம், வரலாறு, பக்தி, அறிவியல், பழைய (சில புதிய) திரைப்படங்கள், மருத்துவம், ஆன்மீகம் என அகத்தியத்தில் தோண்டத் தோண்டப்
புதையல் தான்.

மதுரையில் மருத்துவம் படித்து மலேசியாவில், சுங்கைப் பட்டாணியில் வசித்து வரும் டாக்டர் ஜேபி, மலேசியாவில் பல அரசு மருத்துவமனைகளில் உயர் பதவி வகித்தவர். தமிழ்.நெட் என்னும் பாலா பிள்ளையின் தமிழ்.இணையத்தில் தொடங்கி, பல்வேறு மலேசிய மற்றும் தமிழ், ஆங்கில மடலாடற்குழுக்களில் 'பெரிசு' என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

டாக்டர்.ஜேய்பி 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர். பல்வேறு உடல்நலக் குறைவுகளையும் தாங்கி, தனக்குத் தெரிந்த, தான் தெரிந்துகொண்ட விஷயங்களை தமிழ் ஆர்வமுள்ளோருக்கு பகிர்ந்து கொள்கிறார் என்றால் - அகத்தியத்தில் உறுப்பினராக இருக்கும் மற்றும் அவர் பங்கு கொண்ட / பங்கு கொள்ளும் மடலாடற்குழுக்குகளில் உள்ள நண்பர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியும். இந்தப் பதிவுமே - பலர் வலைப்பதிவுக்கும் தமிழ் இணைய உலகுக்கும் புதிதாக வந்துள்ளதால் அவர்களுக்கு அகத்தியத்தையும் அதில் தமிழில் உள்ள பொக்கிஷங்களையும் அறிமுகப்படுத்தவே.

கிட்டத்தட்ட பல ஆயிரம் மடல்கள் அவரே எழுதியுள்ளார். அவரது தமிழ் மடல்கள் சூப்பர் ஹிட் ஆனதற்குக் காரணம் - அவரின் விசாலமான விஷய ஞானம், அனுபவம், ஆர்வம் எல்லாவற்றையும் தாண்டி, மற்றவர்களுக்குப் புரியும் படியும், ஆர்வமூட்டும்படியும் எழுதும் அவரது எழுத்து நடை. கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்லும் பாங்கு. சின்னச் சின்ன பாராக்கள் மூலம் எளிய முறையில் பத்தி பிரித்து எழுதும் நடை, ஜேபி 'பொடி' எனப்படும் ஒரு 'கொக்கி' போட்டு பலரையும் உள்ளிழுக்கும் தன்மை என சொல்லிக் கொண்டே போகலாம்.

அவரின் எழுத்துக்கள் அவரது வீட்டு நூலகத்திலேயும் (எண்ணற்ற புத்தகங்கள், சேகரிப்புகள்..) இணையத்திலேயும் மட்டுமே இருந்தால் பலருக்குப் போய்ச் சேராது. புத்தகமாக வந்தால் நிச்சயம் தமிழ்நாட்டிலும் மற்ற தமிழ்பேசும் ஊர்களிலும் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும். தமிழக பதிப்பாளர்கள் அவரது எழுத்துகளை ஏன் இன்னும் புத்தகமாக போட வரவில்லை என்பது ஆச்சரியம். கிழக்கு பதிப்பகம், Anyindian போன்றோர் அவரின் இணைய எழுத்துகளைத் தொகுத்தாலே பல சிறந்த புத்தகங்கள் கிடைக்கும். செய்வார்களா ?

முன் நன்றி.

http://groups.yahoo.com/group/agathiyar/messages

அகத்தியத்தின் பல்லாயிரம் மடல்களைத் தேட வசதி செய்து கொடுத்துள்ள, மற்றும் http://www.treasurehouseofagathiyar.net/index.html இந்த வலைத்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளவர்கள் அனைவருக்கும் நன்றி.

நானும் டாக்டர்.ஜேபிக்கு சில விஷயங்கள்/தொகுப்புகள் செய்கிறேன் எனச் சொல்லிவிட்டு செய்யமுடியாமல் - அடடா சொன்னதைச் செய்யமுடியவில்லையே என இன்னும் வருந்துவதுண்டு. அவரின் பல முக்கிய கட்டுரைகளை E-book வடிவிலாவது கொண்டுவர வேண்டும்.

டாக்டர்.ஜேபி எழுதுவது தாண்டி அகத்தியத்தில் அவரிடம் கேள்வி கேட்டு அவரிடமிருந்து பல புதையல்களை வெளிக்கொணர்ந்த அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும் இழை - சித்தர்கள் மற்றும் சித்தர் முத்துவடுகநாதர் பற்றியது. சேமித்து வைக்கவேண்டிய பொக்கிஷம்.

- அலெக்ஸ் பாண்டியன்
06-June-2006

பி.கு: சில பல சொந்த காரணங்களால் சில மாதங்கள் வலைப்பதிய முடியாமல் இருந்தது -இருக்கிறது. ஆனாலும் டாக்டர்.ஜேய்பியின் இந்த மகத்தான மைல்கல் பற்றி தமிழ் வலைப்பதிவு உலகு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலிலேயே இந்தப் பதிவு.

Wednesday, March 29, 2006

வல்லினம் மெல்லினம் இடையினம்

என்.சொக்கன் ஆனந்தவிகடனில் சென்றவாரம் முதல் எழுதிவரும் 'வல்லினம் மெல்லினம் இடையினம்' தொடரைப் பலரும் படிக்க ஆரம்பித்திருக்கலாம்.

சொக்கன் மென்பொருள் துறையில் இருப்பதால், இந்தத் துறையில் உள்ள வெளிச்சங்களும், இருட்டுகளும் பழக்கப்பட்டவையே. அவற்றை வார இதழ் வாசகர்களைச் சென்றடையும் வகையில் எளிமையாக எடுத்துச் செல்லும் திறமையும் அவருக்கு வாய்த்துள்ளது. முதல் 2 வார கட்டுரைகளும் மிக நன்றாக வந்துள்ளன.

மென்பொருள் துறையில் உள்ள மாயையை நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவார் என்றே தெரிகிறது. அவர் சுஜாதா ரசிகர் என்பதால் பல இடங்களில் சுஜாதா பாணி வார்த்தைக் கோவைகள் வந்துவிழுவதும் நன்றாக இருக்கிறது (என்னளவில்).

சொக்கனின் பல அருமையான சிறுகதைகளை பழைய ராகாகியில் அன்பர்கள் தேடிப்படிக்கலாம். பல கதைகளில் சம்பவங்களும், விவரிப்புகளும், இடம் சார்ந்த வர்ணிப்புகளும் எனக்கு மிகவும் பிடித்தன.

சொக்கன் மங்கையர் மலர் பத்திரிக்கையில் எழுதிய சில தொடர்கதை/சிறுகதைகளும் அவருக்கு பெண்களின் பிரச்னைகளில் உள்ள கவலைகளை நன்றாக வெளிக்கொணரமுடிகிறது என்பதை உணர முடிந்தது. இந்த ஆ.வி. தொடரிலும் மென்பொருள்/ஐ.டி துறைப் பெண்கள் (திருமணமாகாத / திருமணமான) எதிர்கொள்ளும் சவால்கள், அதனால் குடும்பத்தில் எதிர்கொள்ளும் நிலைகள் போன்றவற்றையும் எழுதுவார் என்றே எதிர்பார்க்கிறேன்.

- அலெக்ஸ் பாண்டியன்
29-March-2006

Tuesday, March 14, 2006

நம்ம மெட்ரோ

பெங்களூரூ நகரத்திற்கு மெட்ரோ ரயில் வருகிறதோ இல்லையோ - வடிவம் வந்துவிட்டது :-) "நம்ம மெட்ரோ" - கன்னடத்திலும் 'நம்ம' என்பது தமிழ் 'நமது' என்ற பொருளையே குறிப்பதால் ஒரு அந்நியோன்னியம் வந்துவிடுகிறது. நமக்கு அடுத்த அல்லது அடுத்ததற்கும் அடுத்த ஜெனரேஷனிலாவது மெட்ரோ ரயில் பெங்களூரில் ஓடினால் - பிடியுங்கள் ஒரு சபாஷ் :-)

(காரணம் பெங்களூரில் நடைபெறும் கட்டமைப்பு வேலைகளின் துரித கதி அப்படி..!)


Photo courtesy: The Hindu

More links
1. Deccan Herald

2.
Bangalorebuzz.blogspot.com

- அலெக்ஸ் பாண்டியன்
14-மார்ச்- 2006

Wednesday, February 01, 2006

கர்நாடக அரசு மாற்றம் - சில எண்ணங்கள்

கர்நாடகத்தில் தரம்சிங் அரசை கவிழ்த்து தேவகவுடா மகன் ஹெச்.டி.குமாரசுவாமி (வரும் வெள்ளியன்று) பதவியேற்பதை பலரும் படித்திருக்கலாம் / மற்ற ஊடகங்கள் மூலம் தெரிந்துவைத்திருக்கலாம். தரம் சிங் போன்றோரின் பெருந்தன்மையான நடத்தை எத்தனை பேருக்கு வரும் ? தமிழகத்தில் இதெல்லாம் சாத்தியமா ?

ராஜினாமா செய்யாமலும், சட்டசபையில் பலத்தை காண்பிக்காமலும் இழுத்தடித்ததில் என்ன பெருமை என கேட்கவேண்டாம். இது அதைப் பற்றியதல்ல.


Photo courtesy: The Hindu

http://www.hindu.com/2006/01/29/stories/2006012908790100.htm


தனது அரசு பெரும்பான்மை இழந்து, ராஜினாமா செய்த பிறகு இன்னும் சில நாட்களே பதவி என்றிருக்கையில் அவரும் தனது மாமன், மச்சான், மற்றும் உறவினர் எல்லாருக்கும் பெங்களூரில் வீட்டு மனைகள் பட்டா கொடுக்க, அதை BDA நிராகரித்துள்ளது. இன்றைய தேதியில் பெங்களூரில் வீட்டு மனை (வில்லங்கம் இல்லாமல்) கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு. அதனால் தான் வேறு எந்த செயலையும் முடித்துக் கொள்வதைவிட உறவினர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் வீட்டு மனை கொடுப்பதில் (from chief minister's quota) தரம் சிங் முயன்றார். நான் சொல்ல வந்தது இதைப் பற்றியும் அல்ல.

தனது அரசுக் காலத்தில் பணியாற்றிய உயர்மட்ட அரசு அதிகாரிகளுடன் தேநீர் விருந்தில் பேசுகையில் (This itself is a rare gesture..!) "நான் உங்களைக் கோபித்திருந்தால் அல்லது கடிந்து கொண்டிருந்தால் - அவையெல்லாம் மன்னித்து மறக்கவும்.. மக்கள் நலனுக்காகத்தான் அதெல்லாம் செய்தேனே ஒழிய தனிப்பட்ட விரோதம் பாராட்டியதில்லை. மேலும் ஒரு கூட்டணி ஆட்சியில் இருக்கும் உபத்திரவங்கள் மற்றும் அழுத்தங்களை நீங்களும் அறிந்து அதற்கேற்ப அடுத்து வரும் ஆட்சிக்கும் துணையாகவும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய பணிகளை முன்னெடுத்து எடுத்துச் செல்லவேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தன்னை அடுத்து ஆட்சிக்கு வரும் குமாரசுவாமிக்கும் சில யோசனைகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார் - "அவர் ஒரு இளைஞர். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் எல்லா திட்டத்திற்கும் அவருக்கு நாங்கள் துணையாக இருப்போம். அவருக்கு அட்வைஸ் என கொடுக்கப்போவதில்லை ஆனால் எனது எண்ணங்களை அவருடன் பகிர்ந்துகொள்வேன்" என கூறியுள்ளார்.

அவரின் பர்சனல் எண்ணங்களுக்கு ஹை-கமாண்ட் எனப்படும் டெல்லி மேடம் அனுமதியளிப்பாரோ இல்லையோ ஆனாலும் இதெல்லாம் பகிர்ந்து கொண்டதே பெரிய விஷயம். பார்க்கலாம் குமாரசுவாமி அரசு எத்தனை மாதங்கள்/வருடங்கள் மற்றும் மக்கள் பிரச்னைகளில் என்ன செய்கிறது என.(திடுமென்று குமாரசுவாமி தனக்கு Dilemma என குண்டு போடுகிறார். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை)


முழு செய்தியும் கீழே:

இதெல்லாம் தமிழகத்தில் நடக்குமா ? அல்லது நமது அரசியல்வாதிகள்தான்
இப்படியெல்லாம் பேச முடியுமா ?

- அலெக்ஸ் பாண்டியன்
1-பிப்ரவரி-2006

--------------------- From Times of India 31-Jan-2006 ------------------

Bangalore: Spinning a googly during an emotional leave-taking event with senior bureaucrats, outgoing chief minister N Dharam Singh on Monday thanked them for the support he received and then urged them to extend similar cooperation to the successor government that unseated him!

Singh told the upper echelons of the bureaucracy comprising chief secretary B K Das, additional chief secretaries and principal secretaries that had gathered at his farewell tea party: “If I have been harsh with you at times, it has been for the greater good of the people. Please forgive me. I have come up from the grassroots and know the problems. But without your cooperation, no commitment or ideology will work.’’

An outgoing CM hosting tea for bureaucrats is a rare gesture. The last time such an event was organised is said to be by former CM D Devaraj Urs.

Recalling some of the infrastructure projects taken up during his regime including the Bangalore international airport and the initial stages of the Metro Rail, Singh, obliquely referred to the constant interventions from JDS leader H D Deve Gowda: “You all know the problems we faced in infrastructure. In a democracy, they have every right to raise issues. But you have to go along with them. I hope you officials will cooperate with the next government in the interest of the state’s overall development.’’

Singh said he was happy to have provided officials the opportunities to interact with PM Manmohan Singh and push the state’s projects. “I hope you will remember this, when I am a mere MLA,’’ he added.

The soft tone on his successor government continued even when he spoke to reporters later. On whether he had any advice for CM designate H D Kumaraswamy, Singh said: “He is a youngster who wants to do things. If he works well, we will have to cooperate even as the opposition. I will not advise him, but I will talk to him after he is sworn in.’’

Singh said he was confident that all developmental works initiated by his government would be continued by his successors. “It is people’s work, how can they change anything about it?’’

He declined to elaborate on the problems or pressures he faced as the head of the state’s first coalition government.

“There were small differences. Gowda had to consider the welfare of his own party, I had to consider mine. But I do not have the habit of blaming anyone else,’’ he stated.

Singh also felt the state might not have to face mid-term polls soon. “I managed to stave it off for 20 months. Let us see how long they can do it,’’ he said.

On why the “miracle’’ that he had hoped for did not happen, Singh had a quick parting shot: “There were talks till the last minute. What has happened now is itself the miracle.’’
----------------------------

Tuesday, January 03, 2006

சபாஷ் - சரியான போட்டி..!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்..! பிரணாய் ராயின் NDTVக்குப் போட்டியாக அவரிடமே வளர்ந்த ராஜ்தீப் சர்தேசாயின் (மற்றும் TV18ன்) IBN தொலைக்காட்சி சானல் ஆரம்பமே வேகம்.


Photo courtesy: www.indiantelevision.com

வளர்த்த கடா மார்பில் பாயும் என்பார்கள். இங்கோ உடல் முழுவதும் பாய்கிறது. சுமார் 8 மாதங்கள் முன்பு NDTVயை விட்டு ராஜ்தீப் சர்தேசாய் விலகினார். ஏன் விலகினார் என்பதற்கு இங்கே சொடுக்கவும். NDTVயின் வெற்றிக்கு பல செய்தியாளர்கள் காரணம். பிரணாய் ராயின் மத்திய அரசு, மற்றும் அரசியல் கட்சிகளிடம் உள்ள செல்வாக்கு, நம்பிக்கை, track record (80களில் தூர்தர்ஷனில் வந்த The World This Week - அப்பன் மேனன் எல்லாம் ஞாபகம் வருகிறதா ?), செய்திகள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளின் தொகுத்துத் தரும் தன்மை (பட்ஜெட், மாநில, மத்திய தேர்தல் அலசல்கள்) இவையெல்லாம் தாண்டி பிரணாய் ராய் வளர்த்துவிட்ட இளம் படைப்பாளிகளும் காரணம். ராஜ்தீப் தவிர, பர்கா தத், விக்ரம் சந்திரா, ஸ்ரீனிவாசன் ஜெயின், விஷ்ணு சோம், என எண்ணற்ற பல இந்தியர்களுக்கு பழக்கமான Professional படைப்பாளிகள்.


Photo courtesy: www.ibnlive.com

இவற்றில் ராஜ்தீப் பிரிந்து சென்று TV18n ராகவ் பெஹலுடனும் தனது மனைவி சாகரிகா கோஸ் உடனும் இணைந்து துவங்கியுள்ளதுதான் CNN-IBN சேனல். (சாகரிகா கோஸ் பழைய தூர்தர்ஷன் பெரிய தலை - பாஸ்கர் கோஸ் அவர்களின் புத்திரி என்பதும் ராஜ்தீப் சர்தேசாய் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாயின் புதல்வர் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்)

NDTVயின் பாணியையே CNN-IBNனும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது (கலர், பின்னணி, தலைப்புச் செய்திகள் ஒட்டும் ticker placement, செய்திகளுக்கு இடையில் வரும் சானல் பற்றிய விளம்பரம் (ராஜ்தீப்புக்கும் IBNக்கும் வாழ்த்துக்கள் என பெரிய தலைகள் எல்லாம் சொல்லும் க்ளிப்பிங்க்ஸ்)

ராஜ்தீப்பின் மனைவி சாகரிகா கோஸ் - அவரும் செய்தி வாசிக்கிறார் (நன்றாகவே).

ராஜ்தீப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. NDTVயின் சிறந்த செய்தியாளராக இருந்தவர். டைம்ஸ் ஆ·ப் இண்டியாவில் நிருபராக ஆரம்பித்தவர். டில்லி அரசியலில் உள்ள பல பெருந்தலைகளுடன் நல்ல தொடர்பில் இருந்தாலும் அவர்களை அலசலுக்கு கூட்டி வந்தால் கிழிகிழி என கிழித்துவிடுபவர். NDTVயிலிருந்து தன்னுடனேயே சிலரையும் இழுத்து வந்துள்ளார். பால் தாக்கரே போன்ற பெரிய தலைகளுடன் மோதிய அனுபவமும் உண்டு. 2 நாட்கள் முன்பு சோனியாவுடனான முதல் நீண்ட அமர்வு பேட்டியும் உண்டு. அவரின் Big Fight (சனி இரவு 8 மணி) NDTVயில் மிக பிரபலமான மற்றும் விருதுகள் வாங்கிய நிகழ்ச்சி.

நமக்கு நல்ல செய்திச் சேனல் கிடைத்த ஒரு மகிழ்ச்சி. NDTV போரடிக்கும் போது மட்டுமல்ல அவ்வப்போது CNN-IBNக்கும் இனிமேல் ரிமோட் வழிகாட்டும். Both sites have RSS feeds for news and also blogs

இளங்கன்று பயமறியாது என்பார்கள். ராஜ்தீப் மற்றும் அவரது இளம் செய்தியாளர்கள் கடந்த 2 வாரங்களிலேயே பல Exposeகளை தலைப்புச் செய்தியாக்கி வருகின்றனர். பிரணாய் ராய் அளவிற்கு நம்பிக்கை, பலரையும் அணைத்துச் செல்லும் செய்தி தரும் பாங்கு என செல்வார்களா இல்லை இந்தி செய்தி சானல்கள் மாதிரி பரபரப்பு என்னும் மாயையில் சிக்கி பாலிவுட், நிழலுலகம், டெல்லிதான் இண்டியா, இண்டியாதான் டெல்லி என்னும் பாணியில் சிக்கிக் கொள்வார்களா என்பது போகப் போகத் தெரியும்.

- அலெக்ஸ் பாண்டியன்
3-ஜனவரி-2006