Wednesday, February 01, 2006

கர்நாடக அரசு மாற்றம் - சில எண்ணங்கள்

கர்நாடகத்தில் தரம்சிங் அரசை கவிழ்த்து தேவகவுடா மகன் ஹெச்.டி.குமாரசுவாமி (வரும் வெள்ளியன்று) பதவியேற்பதை பலரும் படித்திருக்கலாம் / மற்ற ஊடகங்கள் மூலம் தெரிந்துவைத்திருக்கலாம். தரம் சிங் போன்றோரின் பெருந்தன்மையான நடத்தை எத்தனை பேருக்கு வரும் ? தமிழகத்தில் இதெல்லாம் சாத்தியமா ?

ராஜினாமா செய்யாமலும், சட்டசபையில் பலத்தை காண்பிக்காமலும் இழுத்தடித்ததில் என்ன பெருமை என கேட்கவேண்டாம். இது அதைப் பற்றியதல்ல.


Photo courtesy: The Hindu

http://www.hindu.com/2006/01/29/stories/2006012908790100.htm


தனது அரசு பெரும்பான்மை இழந்து, ராஜினாமா செய்த பிறகு இன்னும் சில நாட்களே பதவி என்றிருக்கையில் அவரும் தனது மாமன், மச்சான், மற்றும் உறவினர் எல்லாருக்கும் பெங்களூரில் வீட்டு மனைகள் பட்டா கொடுக்க, அதை BDA நிராகரித்துள்ளது. இன்றைய தேதியில் பெங்களூரில் வீட்டு மனை (வில்லங்கம் இல்லாமல்) கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு. அதனால் தான் வேறு எந்த செயலையும் முடித்துக் கொள்வதைவிட உறவினர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் வீட்டு மனை கொடுப்பதில் (from chief minister's quota) தரம் சிங் முயன்றார். நான் சொல்ல வந்தது இதைப் பற்றியும் அல்ல.

தனது அரசுக் காலத்தில் பணியாற்றிய உயர்மட்ட அரசு அதிகாரிகளுடன் தேநீர் விருந்தில் பேசுகையில் (This itself is a rare gesture..!) "நான் உங்களைக் கோபித்திருந்தால் அல்லது கடிந்து கொண்டிருந்தால் - அவையெல்லாம் மன்னித்து மறக்கவும்.. மக்கள் நலனுக்காகத்தான் அதெல்லாம் செய்தேனே ஒழிய தனிப்பட்ட விரோதம் பாராட்டியதில்லை. மேலும் ஒரு கூட்டணி ஆட்சியில் இருக்கும் உபத்திரவங்கள் மற்றும் அழுத்தங்களை நீங்களும் அறிந்து அதற்கேற்ப அடுத்து வரும் ஆட்சிக்கும் துணையாகவும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய பணிகளை முன்னெடுத்து எடுத்துச் செல்லவேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தன்னை அடுத்து ஆட்சிக்கு வரும் குமாரசுவாமிக்கும் சில யோசனைகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார் - "அவர் ஒரு இளைஞர். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் எல்லா திட்டத்திற்கும் அவருக்கு நாங்கள் துணையாக இருப்போம். அவருக்கு அட்வைஸ் என கொடுக்கப்போவதில்லை ஆனால் எனது எண்ணங்களை அவருடன் பகிர்ந்துகொள்வேன்" என கூறியுள்ளார்.

அவரின் பர்சனல் எண்ணங்களுக்கு ஹை-கமாண்ட் எனப்படும் டெல்லி மேடம் அனுமதியளிப்பாரோ இல்லையோ ஆனாலும் இதெல்லாம் பகிர்ந்து கொண்டதே பெரிய விஷயம். பார்க்கலாம் குமாரசுவாமி அரசு எத்தனை மாதங்கள்/வருடங்கள் மற்றும் மக்கள் பிரச்னைகளில் என்ன செய்கிறது என.(திடுமென்று குமாரசுவாமி தனக்கு Dilemma என குண்டு போடுகிறார். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை)


முழு செய்தியும் கீழே:

இதெல்லாம் தமிழகத்தில் நடக்குமா ? அல்லது நமது அரசியல்வாதிகள்தான்
இப்படியெல்லாம் பேச முடியுமா ?

- அலெக்ஸ் பாண்டியன்
1-பிப்ரவரி-2006

--------------------- From Times of India 31-Jan-2006 ------------------

Bangalore: Spinning a googly during an emotional leave-taking event with senior bureaucrats, outgoing chief minister N Dharam Singh on Monday thanked them for the support he received and then urged them to extend similar cooperation to the successor government that unseated him!

Singh told the upper echelons of the bureaucracy comprising chief secretary B K Das, additional chief secretaries and principal secretaries that had gathered at his farewell tea party: “If I have been harsh with you at times, it has been for the greater good of the people. Please forgive me. I have come up from the grassroots and know the problems. But without your cooperation, no commitment or ideology will work.’’

An outgoing CM hosting tea for bureaucrats is a rare gesture. The last time such an event was organised is said to be by former CM D Devaraj Urs.

Recalling some of the infrastructure projects taken up during his regime including the Bangalore international airport and the initial stages of the Metro Rail, Singh, obliquely referred to the constant interventions from JDS leader H D Deve Gowda: “You all know the problems we faced in infrastructure. In a democracy, they have every right to raise issues. But you have to go along with them. I hope you officials will cooperate with the next government in the interest of the state’s overall development.’’

Singh said he was happy to have provided officials the opportunities to interact with PM Manmohan Singh and push the state’s projects. “I hope you will remember this, when I am a mere MLA,’’ he added.

The soft tone on his successor government continued even when he spoke to reporters later. On whether he had any advice for CM designate H D Kumaraswamy, Singh said: “He is a youngster who wants to do things. If he works well, we will have to cooperate even as the opposition. I will not advise him, but I will talk to him after he is sworn in.’’

Singh said he was confident that all developmental works initiated by his government would be continued by his successors. “It is people’s work, how can they change anything about it?’’

He declined to elaborate on the problems or pressures he faced as the head of the state’s first coalition government.

“There were small differences. Gowda had to consider the welfare of his own party, I had to consider mine. But I do not have the habit of blaming anyone else,’’ he stated.

Singh also felt the state might not have to face mid-term polls soon. “I managed to stave it off for 20 months. Let us see how long they can do it,’’ he said.

On why the “miracle’’ that he had hoped for did not happen, Singh had a quick parting shot: “There were talks till the last minute. What has happened now is itself the miracle.’’
----------------------------

2 comments:

G.Ragavan said...

தரம்சிங்கின் பேச்சு சிறப்பு என்றே சொல்ல வேண்டும். நம்மூரில் சென்ற அரசு காலி கஜானாவை விட்டுச் சென்றது என்றும் தமிழர்கள் மூளையில்லாதவர்கள் என்றும் பேச்சு நடக்கும் பொழுது தரம்சிங்கின் இந்தப் பேச்சு சிறப்புதான்.

அவருடைய ஆட்சி எப்படியிருந்தது என்பது வேறு. ஆனாலும் இப்படிப் பேசுவதற்கும் ஒரு நாகரீகம் வேண்டும்.

குமாரசுவாமியாவது...குழம்புவதாவது.....தயக்கம் போல இருக்கும். பிறகு அவரது தந்தை தேவேகவுடா வந்து தயக்கத்தைப் போக்கி மணிமுடியை அவர் தலையில் சூட்டுவார். நாடகம் பார்க்கின்ற எல்லாரும் கைதட்டி உணர்ச்சி வசப்படுவார்கள்.

Alex Pandian said...

நன்றி இராகவன்.

போகிற போக்கைப் பார்த்தால் குமாரசுவாமி பதவியேற்பு விழா நாளை உண்டா என
தெரியவில்லை.

>>>>>>>>>>.
தந்தை தேவேகவுடா வந்து தயக்கத்தைப் போக்கி மணிமுடியை அவர் தலையில் சூட்டுவார். நாடகம் பார்க்கின்ற எல்லாரும் கைதட்டி உணர்ச்சி வசப்படுவார்கள்
>>>>>>>>>>>>

இது...இது.. சூப்பர்..!


- அலெக்ஸ்