Wednesday, October 03, 2007

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...

முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்த் பாடிய இந்தப் பாடல் தற்போதைய சூழ்நிலைக்குஒத்து வரும் மாதிரி தோன்றினாலும் இந்தப் பதிவு (அட ! பதிவுலகம் வந்து ரொம்ப நாளாச்சு/மாசமாச்சு இல்ல?) ராமரைப் பற்றியோ ராவணனைப் பற்றியோ இல்லை, பற்றி எரிகிற சேது சமுத்திரம் பிரச்னை பற்றியோ இல்லை.

கர்நாடகத்தில் நடக்கும் ஆட்சி மாற்ற காட்சிகள் பீகாரை / ஹரியானாவை (ஒரு காலத்திய) ஒத்து இருக்கின்றனஎன பல்வேறு தினசரிகளும், இணைய கட்டுரையாளர்களும் எழுதித் தீர்த்துவிட்டாலும், நான் சொல்ல வருவதுவேறு.

நம்மில் எத்தனை பேருக்கு அரசியலில் நடைபெறுவதை சும்மா பேப்பர் படித்தோ, தொலைக்காட்சி பார்த்தோ(பெங்களூரில் இப்போ கலைஞர் தொலைக்காட்சியும் தெரியுதுங்கோவ்..!) இணையத்தில் பதிவுகளில்ஜல்லி (கும்மி!) அடித்தோ செல்வது தவிர சீரியசாக யோசித்திருக்கிறோம்.

ஐயா ஆண்டாலென்ன.. அம்மா ஆண்டாலென்ன.. குமாரசாமியோ.. யெடியூரப்பாவோ தரம்சிங்கோஅல்லது ராமேஷ்வர் தாகூரோ (இவர் தான் தற்போதைய கர்நாடக கவர்னர்) ஆண்டாலென்ன எனபலரும் அரசியல் பற்றி விரக்தி அடைவது என்னவோ உண்மைதான். ஆனால் இவர்களின் பதவி போதைமற்றும் ஆட்சி / காட்சி மாற்றங்களினால் நாம் ஒவ்வொருவரும் தினமும் நமது அன்றாட நிகழ்வுகளில்பெரும்பாதிப்பு அடைகிறோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு.

பந்த் அல்லது ஸ்ட்ரைக் அல்லது ஹர்த்தாலால் பலரும் பல்வேறு முறையில் ஒரு நாள் பாதிக்கப்படுகின்றனர்.ஆனால் அதையும் விட இந்த அரசியல் ஆட்களின் நிலைகளால் நாம் எல்லோரும் பலவாறு பாதிக்கப்படுகின்றோம்.

பெங்களூரில் வசிக்கும், எலக்டிரானிக் சிடிக்கு அலுவலகம் செல்லும் பலரையும் கேளுங்கள் - குமாரசாமி/கௌடாவின் சொந்த நில விவகாரங்களால், NICE எனப்படும் தனியார் கட்டும் சாலை முழுவது முடிவடையாதலால் பலருக்கும்எத்தனை கால விரயம், பண விரயம், தினசரி சாலையில் அதிக நேரம் செலவிடுதலால் நேரும் உடல் விரயம் எனதெரிய வரும். கடந்த 3 மாதங்களாக எல்லாரும் இந்த 20-20 ஆட்சி மாற்றம் பற்றியே (நடக்கும் - நடக்காது என)பேச்சுகளில் நேரம் செலவிடுவதால் - Governance எனப்படும் ஆட்சி நிர்வாகம் நடைபெறவே இல்லை.

ஏப்ரல் 2008ல் புதிய இண்டர்நேஷனல் ஏர்போர்ட் திறக்கப்போகிறார்கள் ஆனால் அதற்கு எப்படிச்செல்வது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. சேது சமுத்திரப் புகழ் (!?) டி.ஆர்.பாலுவின் கைவண்ணமாம்ஓசூர் சாலை Elevated Expressway தூண்கள் மட்டும் ரெடியாகி வருகிறது. இந்தப் பாதையில் வரப்போகும்/செல்லும்லட்சக்கணக்கான கார்கள் மற்றும் பஸ்கள் செல்ல முதன்மை (entry/exit) சாலைகள் எங்கே என யாருக்கும் இப்போதுகவலையில்லை.
மெட்ரோ மெட்ரோ என பஜனை செய்து எம்.ஜி.ரோட்டை ஒரு வழிசெய்துவைத்திருக்கின்றனர். இன்னும்பல பகுதிகளில் பூமியைத் தோண்டும்போதுதான் இதன் பாதிப்பு தெரியும்.

காய்கறிகளின் விலை ? கேட்கவே வேண்டாம் கிலோ 30-40 ரூபாய்க்குக் குறைவாக எதுவும் இல்லை.

"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையுமில்லை" என பாட்டு கேட்டுக்கொண்டுஇருக்க முடியவில்லையே என்ன செய்வது ? வரட்டும் தேர்தல். குத்திடுவோம்ல ?

- அலெக்ஸ் பாண்டியன்
03-அக்டோபர்-2007

No comments: