Monday, July 07, 2008

இதுதாண்டா ஆட்டம்..! (விம்பிள்டன் இறுதி - நடால் வெற்றி)

நேற்றைய விம்பிள்டன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தை எத்தனை பேர் பார்த்தீர்களோ ? நடால் வெற்றி பெற்ற இந்த ஆட்டம் தான் சமீப வருடங்களிலேயே சிறப்பான கிறாண்ட் ஸ்லாம் இறுதி ஆட்டமாக இருக்கும் என நினைக்கிறேன். முதல் 2 செட்டுகளை நடால் ஜெயித்தாலும் அடுத்த இரண்டு செட்டுகளை டை பிரேக்கரில் ஜெயித்த ரோஜர் ஃபெடரரின் போராட்டமும் சூப்பர். பின்னர் மழை வந்து சஸ்பென்ஸில் நிறுத்த பின்னர் நடால் இறுதி செட்டையும் <<>> ஜெயிக்க.. அமர்க்களம்..!

ஸ்கோர் விவரம்:

நடால் - ஃபெடரர்:
6 - 4
6 - 4
6 - 7 (5-7)
6 - 7 (8-10)
9 - 7

தூர்தர்ஷன் மட்டுமே இருந்த அந்தக்கால சமயங்களில் இந்தியாவில் அதுவும் தமிழர்கள் பலரும் டென்னிசுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃபிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்கன் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் என எல்லா போட்டிகளையும் கவனித்து வருவர். கடந்த 10 வருடங்களில் பல்வேறு ஸ்போர்ட்ஸ் சானல்கள் வந்த பிறகு அதுவும் நாளும் எங்காவது கிரிக்கெட் நடந்து வரும் பொழுதுகளில் டென்னிசுக்கு கிடைத்துவரும் முக்கியத்துவம் குறைந்துதான் விட்டது.





Photos Courtesy: BBC Sport

ஆனாலும் டென்னிஸ் ஆட்ட பிரியர்களுக்கு நேற்றைய ஆட்டம் ஒரு வரலாறு என்றே சொல்லலாம்.

பிபிசி செய்திகள் - இங்கே

- அலெக்ஸ் பாண்டியன்
7-ஜூலை 2008

7 comments:

கூடுதுறை said...

அற்புதமான ஆட்டம்

இதற்கு முன் ஒரு முறை போரிஸ் பெக்கரும்/ ஸ்டிபன் எட்பர்கும் இதே போன்ற ஒரு இழுபறி ஆட்டத்தை கொடுத்தனர்.

அதன்பிறகு இப்போதுதான் இப்படி ஒரு ஆட்டம்.

ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்திற்கு இது எவ்வளவோ மேல்

கூடுதுறை said...

இது தொடர்புக்கு

SurveySan said...

அருமையான ஆட்டம்.

ஆட்டத்தின் கடைசியில், நாடால் ஃபெடரரை புகழ்ந்ததும், இவர் அவரைப் புகழ்ந்ததும் நெகிழ்ச்சி.

மெக்கன்ரோவே ஆடிப்போயிட்டாரே.

கலக்கலாயிருந்தது ரொம்ப நாளைக்கப்பரம் ஒரு நல்ல ஆட்டம்.

jassy said...

mmmm really superb game.. but as a Federer supporter i m really sad after the game..

but we should appreciate the way R.Federer fought with Nadal..

kannan said...

Hi,

It was an epic match.
Just to let you know that there is no tie-break in the fifth set in wimbledon.Nadal broke federer in federer's service and then service his way to championship.
By far,this is the best match i have seen.
But Federer said i will come back again in next year,that is the spirit and hope he will win again.

Thanks for sharing.
Best Wishes,
Kannan Viswagandhi
http://www.growing-self.blogspot.com

Alex Pandian said...

கூடுதுறை, சர்வேசன், ஜஸ்ஸி, கண்ணன்,

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

கண்ணன்: ஆமாம் - கடைசி செட்டுக்கு டை பிரேக்கர் கிடையாது. ஆட்டம் முடியும் வரை ஆடி 2 செட் வித்தியாசத்தில் கெலிக்க வேண்டும்.

ஆச்சரியம் - விம்பிள்டன் பற்றி யாரும் (லண்டன் வாழ் பதிவர்கள் கூட) பதிவுகள் போடவில்லையா இல்லை நான் படிக்க விட்டேனா என தெரியவில்லை.

- அலெக்ஸ் பாண்டியன்

tamiljunction said...

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond. Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com