Monday, July 06, 2009

விம்பிள்டன் இறுதி ஆட்ட விறுவிறுப்பு (2009)

நேற்று லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் 2009 இறுதி ஆட்டத்தின் விறுவிறுப்பு - இதனை பார்க்கத் தவறியவர்கள் நிச்சயம் ஒரு நல்ல விளையாட்டுப் போட்டியைத் தவறவிட்டவர்கள்.

ரோஜர் ஃபெடரர் சாம்பிராஸின் சாதனையை முறியடித்து வெற்றி பெற்றார். எதிர்த்து ஆடிய ஆண்டி ரோடிக்கின் ஆட்டமும் சூப்பர். ரோடிக்கைவிட ஃபெடரர் அதிகம் ஏஸ் அடித்திருந்தாலும் சர்வீஸ் என்னமோ ரோடிக் தான் சிறப்பாக செய்ததாகப் பட்டது. அதுபோல் சர்வீஸை எதிர்கொண்டதும் ரோடிக்கே நன்றாக விளையாடினார். அதுவும் கடைசி செட்டில் பலமுறை ஃபெடரர் வாய்ப்பை தவற விட்டார் என்றே சொல்லவேண்டும். ரோடிக் போட்ட சர்வீஸை ஃபெடரரால் தொடக்கூட மூடியவில்லை.


Photo Courtesy: The Hindu

எனினும், 4+ மணிநேரங்களுக்கும் தன்னிலை இழக்காமல் இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினர்.

முன்பெல்லாம் சர்வீஸ் போடும்போது ஹும் ஹூம் என மூச்சு வாங்கும் சப்தங்கள் வரும். ஆனால் ஃபெடரர், ரோடிக் இருவரும் நல்ல உடல் தளர்ச்சி இல்லாமல் போட்டி போட்டனர். கடைசி செட் 6-6க்குப் பிறகு 14- 12 வரை நீண்டு கொண்டே போக அரங்கத்தில் அமர்ந்திருந்த பீட் சாம்ப்ராஸ் முகத்தில் புன்முறுவல்.

மொத்தத்தில் மிகச்சிறந்த ஆட்டம்..! நேரமிருந்தால் ஹைலைட்ஸையோ, மீள் ஒளிபரப்பையோ பார்த்துவிடுங்கள். அதுவும் இது மாதிரி ஆட்டங்களை மழைக்கால மாலையில் (இரவில்) சூடான பஜ்ஜியுடன் பார்த்தால் அடடா !

ஃபெடரருக்கு வாழ்த்துக்கள்..!

*** *** *** *** *** *** *** ***

காவிரியின் தொடக்கமாம் குடகு மலைப்பகுதியில் நல்ல மழை தொடங்கிவிட்டது. விரைவில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி, கர்நாடகத்திற்கும், பெங்களூருக்கும், தமிழநாட்டிற்கும் நீர்வளமும் மின் உற்பத்தியும் தங்கு தடையின்றி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.

சுமார் 2 வாரமாக பொய்த்த பருவமழை மீண்டும் சூல் கொண்டு பெய்வது நாட்டுக்கு நல்லது. எல்லா அணைகளிலும் நீர் சேகரித்து, வீணாக்காமல் நல்லபடியாக எல்லோரும் உபயோகப்படுத்த விழைவோம்.

சமீபத்தில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோயில்களுக்கெல்லாம் சென்று பரிகார பூஜை செய்து வந்துள்ள முதல்வர் எடியூரப்பா சென்றவாரம் தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.

சென்னைக்குச் சென்றது தனது பர்சனல் ஹெல்த் செக்கப் என்று இருந்தாலும் வயதில் பெரியவரை (உடல்நலமும் கொஞ்சம் முடியாமல் இருக்கும் கலைஞரை) வீட்டுக்குச் சென்று சந்தித்தது ஒரு நல்ல துவக்கம். மேலும் "வருணபகவான் இருவரையும் காப்பாத்துவார். அதனால் அவசரப்பட்டு காவிரி, ஹொகனேக்கல் சம்பந்தமாய் எந்த ஆவேச அறிக்கையோ, பேட்டியோ வெளியிட வேண்டாம்" எனவும் கேட்டுக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன்.

இதுபோல ஒரு மெச்சூரிடியுடன் தலைவர்கள் சந்தித்து பேசி, பிரச்னைகளை ஊதி பெரிதாக்காமல் நல்லபடியாய் நாட்டை ஆளவேண்டும் எனவும் இறைவனை வேண்டுவோம்.

**** ***** ****** *******

பட்ஜெட்டில் பிரணாப்தா (Pranab da ) FBTஐ ஒழித்ததை வரவேற்போம். CTT எனப்படும் Commodity Transaction TaXஸையும் ஒழித்துள்ளார்.

துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.82 ; அரிசி ஒரு கிலோ ரூ.43 :-)

- அலெக்ஸ் பாண்டியன்
06 ஜூலை 2009